கோவை சத்தியன் கண்மருத்துவமனையின் உரிமையாளரும், பெருமைக்குரிய தலைமை மருத்துவருமான டாக்டர் சத்தியன் அவர்கள் நான் கையுறை (Gloves) அணிந்திருந்ததைப் பார்த்து, முக்கிய அறிவுரை ஒன்றை மருத்துவ ரீதியில் தெரிவித்தார்.
கையுறை நம் பாதுகாப்பைக் (கரோனா) தொற்றுவிடமிருந்துக் குறைக்குமே தவிர உயர்த்த உதவாது; ஆகவே இது இல்லாமல் அடிக்கடி சோப் போட்டு கை கழுவுவது, கிருமி நாசினியைப் பயன்படுத்துவது, முகக்கவசம், தனிநபர் இடைவெளி - இவைதான் இப்போது முக்கிய சிகிச்சை. தடுப்பூசி அவசியம் போட்டுக் கொள்ள வேண்டும்; போட்டுக் கொண்டாலும் - அதன்பிறகும் கூட இந்தக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது முக்கியம் முக்கியம் என்று அறிவுறுத்தினார்.
இது எல்லோருக்குமே பயன் தருவதான ஒன்றல்லவா, தவறாது பின்பற்றுங்கள்!
நன்றியுடன் விடை பெற்றோம்!
No comments:
Post a Comment