செய்தியும் சிந்தனையும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 28, 2021

செய்தியும் சிந்தனையும்

சித்தியா உத்தியா?

இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி - அர்ஜுனமூர்த்தி தொடங்கினார்.

ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினர் வேறு கட்சிகளுக்கு, குறிப்பாக தி.மு..வுக்குப் போவதைத் தடுப்பதற்கான யுக்தியாக இருக்க லாம். உத்தி 'சித்தி' பெறாது.

கொட்டினால்தான் தேள்!

மூன்று நாட்களாக நடைபெற்று வந்த பேருந்து போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இப்பொழுது நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை முன் கூட்டியே அரசு சார்பில் நடத்தப்படாதது ஏன்? 'கொட்டினால்தான் தேளா?'

தேசியம் பேசும் அண்ணாச்சி -

 ஒரே தேசம் என்னாச்சு?

தமிழக அரசின் நதிகள் இணைப்புத் திட்டத்தைக் கண்டித்து கருநாடகத்தில் வரும் 27ஆம் தேதி முழு அடைப்பு.

இதை மட்டும் உச்சநீதிமன்றம் அனும திக்குமா? பா...வின் ஒரே தேசம் என்னும் "22 காரட்" தேசியம் வெளுத்து விட்டது!

மறு தேதியை அறிவிக்கப் போவது யார்?

மறு தேதி குறிப்பிடாமல் தமிழக சட்டசபை ஒத்தி வைப்பு - தமிழக சபாநாயகர் அறிவிப்பு. 

மறு தேதியை அறிவிக்கப் போவது தி.மு.. சபாநாயகராகத்தான் இருக்கப் போகிறது.

ஆணவமே மூலதனம்

ஆணவத்தை விட்டொழித்து எரிபொருள் விலையைக் குறையுங்கள்.

- காங்கிரஸ் வலியுறுத்தல்

ஆணவந்தானே பா...வின் மூலதனம் - அதையே பறி முதல் செய்தால் எப்படி? 

முதுகில் மூன்றாவது கை முளைத்தால்...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி கூட்டணி!

முதுகில் மூன்றாவது கை முளைத்தால் சொரிந்து கொள்ளலாம் தான் - இது பதவி அரிப்பு.

வாழ்க மனிதநேயம்!

 மூளைச்சாவு அடைந்த மதுரை வாலிபரின் இதயம் விமானத்தில் கொண்டு வரப்பட்டு 36 வயதுபெண்ணுக்கு, ரேலா மருத்துவமனையில் மாற்று இதய சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.

'ஆத்மா' சாந்தி அடைவதாக என்பதெல் லாம் சுத்த புரட்டு!

சொல்லுவது மலை முழுங்கி மகாதேவன்!

தமிழகக் கோயில்களைப் பாதுகாக்க கோயில்களைப் பக்தர்களிடம் கொடுங்கள்.

- ஜக்கி வாசுதேவ்

முதலில் இவர்மீதுள்ள வழக்குகளை விசா ரணை செய்தால் இவர் 'விழுங்கிய மலைகள்' எத்தனை என்பது வெளிச்சத்துக்கு வரும்.

அரசியல் நில நடுக்கமா?

குஜராத்தில் இலேசான நில நடுக்கம்!

குஜராத்தில் ஆரம்பித்தால் தான் சரியாக இருக்கும் அரசியலை சொல்லவில்லை.

No comments:

Post a Comment