வசூல் பணத்தில் ஆர்.எஸ்.எஸ்.- வி.எச்.பி.யினர் குடித்து கும்மாளம்
போபால், பிப். 5- அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி கள் துவங்கிய போது, கூடவே நிதிமோசடிக் குற்றச்சாட்டுக் களும் துவங்கி விட்டன.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரத்தில், நரேந்திர ராணாஎன்பவர் விஸ்வ ஹிந்து பரிஷத்(விஎச்பி) பெய ரில் அலுவலகம் திறந்து, ராமர் கோயில் பெயரில்பல லட்சங்களை சுருட்டினார். இதில் ஒருவர் கைது செய்யப் பட்டார்.
அடுத்ததாக, ராமர் கோவில் அறக்கட்டளை வங் கிக்கணக்கில் இருந்தே, ரூ.6 லட்சத்தை, ஆசாமிகள் சிலர், கடந்த செப்டம்பர் மாதம் போலி காசோலைகொடுத்து, கையாடல் செய்தனர். நாடு முழுவதும் பல்வேறு இடங் களில் ராமர் கோயில் பெயரில் நிதி மோசடி நடக்கிறது; இதில் வசூலாகும் கோடிக் கணக்கான பணத்தை வைத்து, ஆர்எஸ்எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த வர்கள் ஆங்காங்கே இரவில் குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கின்றனர் என்று மத் தியப்பிரதேச மாநில காங் கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கண்டிலால் புரியா பகிரங்கமாகவே குற் றம் சாட்டினார்.
இந்நிலையில்தான், ம.பி. மாநிலம் போபால் அசோகா கார்டனில் வகிக்கும் மணீஷ் ராஜ்புத் (30) என்பவர், அயோத்தி ராமர் கோயில் பெயரில் ‘ராம் ஜன்மபூமி சங்கல்ப் சொசைட்டி’ என்ற தனி அமைப்பைபே உரு வாக்கி பல லட்சங்களை நன்கொடையாக வசூலித்து மோசடிசெய்துள்ளார். இவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420, 120பி ஆகிய பிரிவுகளின்கீழ் வழக் குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment