பரமக்குடி, பிப். 5- இராமநாத புரம் மாவட்டம், பரமக்குடி யில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பங்கேற்ற, ‘உங்கள் தொகுதியில் ஸ்டா லின்’ இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று (4.2.2021)நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டா லின், பொதுமக்களிடம் குறை களை கேட்டறிந்து மனுக் களை பெற்றார்.
பெருந்திரளான மக்களி டையே அவர் பேசியதாவது:
திமுக ஆட்சி அமைந்தவு டன் தனித்துறை உருவாக்கப் பட்டு அனைத்து மனுக்களுக் கும் தீர்வு காணப்படும். ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு 80 கோடியில் நினைவிடம் கட்டும்போது, தலைவர் கலைஞருக்கு ஆறு அடி நிலம் கொடுக்காத நயவஞ்சக ஆட்சி தமிழகத்தில் நடக் கிறது. கலைஞருக்கு இடம் கொடுக்காத இந்த ஆட்சியை தமிழகத்தை விட்டு விரட்டி யடிப்போம்.
பழனிசாமி நயவஞ்சகர். நன்றி மறந்தவர். நம்பிக்கை துரோகம் செய்தவர் என்பது திமுக கட்சியினரை விட அதி முக கட்சியினருக்கு அதிகம் தெரியும். சொந்த கட்சிக்காரர் களால் நிராகரிக்கப்பட்டு வருபவர் பழனிசாமி.
தமிழ்நாட்டுக்காகவும், தமிழர்களுக்காகவும் எந்த நன்மையும் செய்யாத, ஈழத் தமிழர்களுடைய வாழ்க் கையை திருப்பித்தர எந்த முயற்சியும் எடுக்காத அரசு நடக்கிறது. வேலுமணி உள் ளாட்சித்துறை அமைச்சர் இல்லை. ஊழலாட்சித்துறை அமைச்சர். அதிமுக ஆட்சியில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை ஆதாரத்துடன் ஆளுநருக்கு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. பேர றி வாளன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்வதில் ஆளுநர் முடிவு எடுக்கவில்லை. இதனை கண்டித்தே சட்டமன்றத்தில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. கூட்டத்தை புறக் கணித்தது. ஊழல் நடைபெற் றதற்கு முகாந்திரம் இருப்ப தால்தான் சிபிஅய் விசார ணைக்கு நீதிமன்றம் உத்தர விட்டது.
இதை தைரியமாக எதிர் கொள்ளாமல் ஏன் மேல் முறையீடு செய்தார் முதல்வர்? மடியில் கனம் இருப்பதால் தானே. வரும் சட்டமன்ற தேர்தல் தமிழகத்தின் வாழ் வுரிமையையும், தமிழர்களின் எதிர்காலத்தையும் மீட்கும் தேர்தலாக அமையும். தமிழ கத்தில் திமுக ஆட்சிக்கு வந் தவுடன் அரசு பணிக்கு சல்லி காசு வாங்காமல் பணி நிய மனம் நடக்கும். அதற்கு நான் உத்தரவாதம். மாதா, பிதா, குரு, தெய்வம். அதேபோல் கழகம், அண்ணா, பெரியார், கலைஞர் என்ற வழியில் தமிழகத்தில் எனது ஆட்சி நடைபெறும். கல்வி தந்த காமராஜரை போல், மாநில உரிமையை மீட்டுத் தந்த அண்ணாவை போல், மக்க ளின் நலத்திட்டம் மற்றும் மேம்பாட்டு திட்டம் கொண்டு வந்த கலைஞரை போல் ஸ்டாலின் தலைமையில் தமி ழகத்தில் ஆட்சி அமையும். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment