திருச்சி, பிப். 1- போலியோ சொட்டு மருந்து முகாம் திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவமனையில் 31.01.2021 அன்று காலை 8.00 மணிய ளவில் நடைபெற்றது.
பெரியார் மருந்தியல் கல் லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ண மூர்த்தி தலைமையில் பேராசி ரியர் முனைவர் அ.மு. இஸ் மாயில், பெரியார் மணியம்மை மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் மரு. பி. மஞ்சுளா வாணி ஆகியோர் முன்னி லையில் திருச்சி சுந்தர் நகர், கலைஞர் கருணாநிதி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள 268 குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இம்முகாமிற்கான ஏற்பாடுகளை, பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேரா. அ. ஜெய லெட்சுமி, பேரா. ப. பால சுப்ரமணியன், நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் மற்றும் பெரியார் மணியம்மை மருத்துவமனையின் செவிலியப் பணியாளர்கள் சிறப் பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment