கோவை,பிப்.2- கோவை மேட்டுப்பாளையத்தில் மதப் பிரிவினையை உருவாக்கும் நோக்கத்தோடு வகுப்புக் கலவரத்தைத் தூண்டும்வகையில் பேசிய பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டத்தை ஆதரித்து பா.ஜ.க. சார்பில் ஞாயிறன்று கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் கலந்து கொண்டு பேசுகையில், இஸ்லாமியர்கள் குறித்தும், முகமது நபி குறித்தும் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசினார். முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் திட்டமிட்டே கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தோடு கல்யாணராமன் பேசியதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதற்கிடையில் கல்யாணராமனின் அநாகரிகப் பேச்சைக் கண்டித்து கோவை, மேட்டுப்பாளையம், உதகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை ஞாயிறன்று (31.1.2021) இரவு திடீரென முற்றுகை யிட்டனர். இதனிடையே காவல்துறையினர் மதங்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி மோதல் ஏற்படுத்த முயற்சித்தல், தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சித்தல் உள்ளிட்ட 8 பிரிவு களில் கல்யாணராமன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment