மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை,பிப்.28- தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு உள்ஒதுக் கீட்டை அறிவித்து கபட வேடம் போடுகிறார் முதல்வர் பழனிசாமி என்று தி.மு.க.
தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்
குற்றம் சாட் டினார்.
சென்னை
வடக்கு, வட கிழக்கு மற்றும்
கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டங்களுக்கு உட் பட்ட சட்டமன்ற தொகுதி களுக்கான ‘உங்கள் தொகு தியில் ஸ்டாலின்’ என்ற மக்களின் குறை
கேட்கும் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சி நேற்று
(27.2.2021) மாதவரம்
வி.எஸ்.மணி நகர் விரிவு, வடபெரும் பாக்கம் சாலை அருகில் நடந்தது. இதில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்
கலந்து கொண்டு, மக்கள் அளித்த கோரிக்கை மனுக் களை பெற்று, அவர்களிடம் நேரி லும் குறைகளை கேட்டறிந் தார். பின்னர் அவர் பேசிய தாவது: ஆட்சி
முடியப் போகும் கடைசி நிமிடம் வரைக்கும் பழனிசாமி தனது கபட வேஷங்களை நிறுத்த வில்லை. மிகவும் பிற்படுத்தப் பட்டோர் பிரிவில் உள் ஒதுக் கீட்டை பழனிசாமி அறிவித்துள்ளார். தேர்தல் தேதி நாலரை மணிக்கு வரப்போ கிறது என்று தெரிந்து இரண்டரை மணிக்கு இதை அறிவித்துள்ளார்.
இந்த
நான்காண்டு காலம் அவருக்கு இதற்கான ஞானோதயம் ஏன் வர வில்லை. கடந்த
டிசம்பர் 21ஆம் தேதி நீதிபதி குல சேகரன் தலைமையில் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர் பான ஆணையத்தை அமைத்தது தமிழக அரசு. அந்த ஆணை யத்தின் அறிக்கை வருவதற்கு முன்னதாக இப்படி ஒரு அறிவிப்பை அறிவிக்கிறார் என் றால் இங்குதான் பழனிசாமி யின் நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதைச் சொல்லிவிட்டு, தற் காலிகமானது தான் என்றும் பழனிசாமி சொல்கிறார். இது இன்னொரு பெரிய மோசடி. திமுக அரசு அமைந் ததும் நகர்
பகுதிக்கான உள் ளாட்சித் தேர்தல் உடனடி யாக நடத்தப்படும் என்ற வாக்குறுதியை இக்கூட் டத்தின் வாயிலாகச் சொல் லிக் கொள்ள விரும்புகிறேன். செம்பரம்பாக்கம் ஏரித் தண்ணீரை திறந்து விடுவதில் அதிமுக அரசு காட்டிய அலட்சியத்தால் சென்னை மிதந்தது. ஊழல் மணி யான வேலுமணி இந்த சென் னையை சீரழிந்த சென்னை யாக ஆக்கிவிட்டார். தான் கொள்ளை அடிப்பதற்கும், கணக்கு காட்டுவ தற்குமான ஊராக சென்னையை ஆக்கி விட்டார். சென்னை ஒரு நகரம் மட்டுமல்ல. தமிழ் நாட்டின் தலை நகரம். இந்த தலைநகரத்தை நாம் தலை சிறந்த நகரமாக மாற்ற வேண் டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment