சென்னை,பிப்.2- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் முழுமையாக நேரடி விசா ரணை நடத்துவது குறித்து அந்தந்த மாவட்ட நீதி பதிகள் முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கீழமை நீதிமன்ற வளாகங் களில் உள்ள வழக்குரைஞர் சங்கங்கள், அறைகள் மற்றும் உணவகங்கள் செயல்பட அனுமதிப்பது குறித்து பிப்ர வரி 8ஆம் தேதியிலிருந்து மூன்று வாரம் கழித்து முடி வெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை நேடியாக நடத்துவதா அல்லது காணொலி மூலமாக நடத்துவதா என்பதை அந்தந்த மாவட்டத்தில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு மாவட்ட முதன்மை நீதி பதிகள் முடிவு செய்து கொள்ளலாம் எனவும், கரோனா தடுப்பு விதிமுறை களை பின்பற்ற வேண்டு மென்றும், அதில் எந்த சமர சமும் செய்து கொள்ளாமல் கீழமை நீதிமன்றங்கள் செயல்படுவதை முதன்மை நீதிபதிகளும், மாவட்ட நீதிபதிகளும் உறுதி செய்ய வேண்டுமென தலைமை பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட் டுள்ளது. கீழமை நீதிமன்ற வளாகங்களில் உள்ள வழக் குரைஞர் சங்கங்கள், அறைகள் மற்றும் உணவகங்கள் செயல்பட அனுமதிப்பது குறித்து பிப்ரவரி 8ஆம் தேதியிலிருந்து மூன்று வாரம் கழித்து முடிவெடுக்கப் படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment