டில்லியில் போராடும் விவசாயிகளை சந்திப்பதற்கு அனுமதி மறுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 4, 2021

டில்லியில் போராடும் விவசாயிகளை சந்திப்பதற்கு அனுமதி மறுப்பு

 தி.மு.. உள்ளிட்ட நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தலைவர்கள் தடுத்து நிறுத்தம்

புதுடில்லி,பிப்.4- வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியின் எல்லைகளில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தன்று நடந்த வன்முறைத் தொடர்ந்து, எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மீண்டும் டில் லிக்குள் நுழைந்துவிடாதபடி, காவல்துறையினர் தடுப்பு களை அமைத்தும், தடுப்புச்சுவர் எழுப்பியும் பாதுகாப்பு அரண்களை அமைத்துள்ளனர்.

இந்நிலையில், டில்லி- .பி. எல்லையான காசிப்பூரில் போராடும் விவசாயிகளை சந்திப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர்கள் டில்லியில் இருந்து பேருந்தில் புறப்பட்டுச் சென்றனர். தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா, தொல்.திருமாவளவன், ரவிக்குமார், சு.வெங்கடேசன் ஆகியோர் சென்றனர். மல்லிகார்ஜுன கார்கே, ஹர்சிம்ரத் கவுர் பாதல், சுப்ரியா சுலே, சுகதா ராய் உள்ளிட்ட தலைவர்களும் சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

No comments:

Post a Comment