பெங்களூரு,பிப்.4- கருநாடக மாநிலத்தில்ஆளுநர் உரையின்மீது எதிர்க்கட்சித் தலைவர்சித்த ராமையா பேசியபோது அவையில் முதல்வர் எடியூரப்பா, அமைச்சர்கள் யாரும் இல்லை. அத் துடன் அதிகாரிகள் எவரும் சட்டமன்ற நிகழ்வில் பார்வையாளர் மாடத்தில் காணப்பட வில்லை. இதை சுட்டிக்காட்டி, ஆளுநர் உரைமீது விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதிகாரிகள் கேலரியில் அரசு தலைமைச் செய லாளர், தலைமைச் செயலாளர்கள் யாரும் இல்லை. குறிப்பாக நிதித்துறை சார்ந்த அதிகாரிகள் இல்லை.
பெங்களூருவில் விமான கண்காட்சி நடந்து வரும் நிலையில் அதை காண்பதற்காக அதிகாரிகள் சென்று விட்டார்களா? பேரவை மாண்புக்கு மரியாதை அளிக்க பா.ஜ.க. அரசு தவறிவிட்டது. இது கண்டிக்கத்தக்கது என்றார்.
துட்டு அச்சடிக்க மிஷின் எங்கே இருக்கிறது? என்ற எடியூரப்பாவின் பேச்சை நினைவுபடுத்தினார் சித்தராமையா. ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசுகையில் உக்ரப்பா மேலவை உறுப்பினராக இருந்த போது விவசாய கடன் தள்ளுபடி செய்யவேண்டும் என்று முதல்வர் எடியூரப்பாவிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு முதல்வர் எடியூரப்பா, அரசிடம் பணம் அச்சடிக்கும் இயந்திரம் கிடையாது என்று பதில் அளித்தார். அவரின் பேச்சு அவை குறிப்பில் இருக்கிறது. இதுதான் முதல்வர் எடியூரப்பாவின் சந்தர்ப்பவாத பேச்சு ஆகும். பதவி இல்லை என்றால் விவசாயிகள் நலன் விரும்பி, பதவி கிடைத்துவிட்டால் அதைப்பற்றி சிறிதும் நினைத்துபார்ப்பது கிடையாது. டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடந்துவருகிறது. மாநிலத்திலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட் டுள்ளனர்.
விவசாயிகளின் புரட்சி வெடித்தால் பாஜக அரசு மறுநாளே காணாமல் போய்விடும். இதை முதல்வர் எடியூரப்பா மறந்துவிடக்கூடாது, என்றார்.
No comments:
Post a Comment