தற்போது அமலாகி உள்ள தேர்தல் நடத்தை விதிகளின் முக்கிய அம்சங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 27, 2021

தற்போது அமலாகி உள்ள தேர்தல் நடத்தை விதிகளின் முக்கிய அம்சங்கள்!

புதுடில்லி, பிப்.27 தற்போது தமிழகம் உள்ளிட்ட அய்ந்து மாநிலங்களில் அம லாகி உள்ள தேர்தல் நடத்தை விதிகளின் முக்கிய அம்சங்கள் வெளியிடப்பட் டுள்ளன.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் சட்டப்பேரவை ஆயுட்காலம் முடிவ டைய உள்ளது.   அதையொட்டி இந்த மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இதில் தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில்

30 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கும், கேரளாவில்

140 தொகுதிகளுக்கும், அசாமில் 126 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படு கிறது.

தற்போது முதல் இந்த அய்ந்து மாநி லங்களிலும் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலாகி உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.      இந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளில் உள்ள முக்கிய அம்சங்கள் பின் வருமாறு:

ஆட்சியில் உள்ள அரசு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்னர் தேர்தல் முடியும் வரை, எந்த புதிய நலத் திட்டங்களை அறிவிக்கக் கூடாது. ஆனால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த எந்த தடையும் இல்லை.

அரசு புதிய கட்டடங்கள், மேம் பாலங்கள், சாலைகள் திறப்புவிழா போன்ற ரிப்பன் வெட்டும் நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக்கூடாது.

அரசு ஊழியர்களையோ, பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளையோ பணியிட மாற்றம் செய்யக் கூடாது, யாருக்கும் பதவி உயர்வும் அளிக்கக் கூடாது, ஆயினும் வேறு வழியில்லை என்றால், தேர்தல் ஆணைய ஒப்புதல் பெற்ற பிறகு இடமாற்றமோ, பதவி உயர்வோ வழங்கலாம்.

ஆளும் கட்சிகள் அரசின் செலவில் தொலைக்காட்சி, ஊடகங்கள், நாளிதழ் களில் விளம்பரம் செய்யக்கூடாது. அரசு ஊழியர்களையோ, அரசு வாகனங் களையோ பரப்புரைக்குப் பயன்படுத்தக் கூடாது.

சரியான ஆவணங்களின்றி அதி களவில் பணம், தங்கம் போன்ற விலை யுயர்ந்த பொருட்கள், பரிசுப்பொருட் களை எடுத்துச் செல்ல தடை விதிக் கப்படும்.

பிரச்சாரங்களுக்கு பொது மைதா னங்கள், ஹெலிபேட் போன்றவற்றைப் பயன்படுத்த அனுமதிப்பதில் கட்சி பேதம் பார்க்கக் கூடாது.

மாநிலங்களில் உள்ள கட்சித் தலைவர்களின் சிலைகள், அரசியல் கட்சிகளின் சின்னங்கள் போன்றவை மூடி மறைக்கப்படும்.

எந்த ஒரு அரசு விழாவிலும் அமைச்சர்கள் வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது. மேலும் வாக்குச்சாவடிக்கோ, வாக்கு எண்ணும் இடத்திற்கோ அமைச்சர்கள் செல்ல அனுமதியில்லை.  இருப்பினும் வேட் பாளராகவோ, வாக்காளராகவோ அல் லது கட்சியின் அதிகாரப்பூர்வ ஏஜெண் டாகவோ இருந்தால் மட்டுமே வாக்குச் சாவடிக்கோ, வாக்கு எண்ணும் இடத் திற்கோ அமைச்சர்கள் செல்லலாம்.

பரப்புரைகள் ஜாதி, மத, மொழி மற்றும் இன ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் இருக்கக்கூடாது. கோயில், மசூதி, தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது.

எந்த ஒரு கட்சியும் மற்ற கட்சிகளைக் கொள்கை, செயல் திட்டங்கள், கடந்த கால செயல்பாடுகள் அடிப்படையில் விமர்சிக்கலாமே தவிர, தனி நபர்களின் சொந்த வாழ்க்கை குறித்த விமர்சனம் கூடாது. பிற கட்சிகளின் பரப்புரைக் கூட்டங்களில் குழப்பம் விளைவிக்கக் கூடாது.

முறையான அனுமதி பெறாமல் தனியார் இடங்களைப் பரப்புரைக்குப் பயன்படுத்தக் கூடாது.

தொலைக்காட்சி, கேபிள் நெட் வொர்க், ரேடியோ போன்றவற்றில் பரப்புரை விளம்பரங்களை வெளியிட, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 3 நாட்களுக்கு முன்னதாகவே தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.

இந்த கால கடத்தில் வாக்கா ளர்களுக்குப் பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பது, வாக்காளர்களை உணர்வுப் பூர்வமாகத் தூண்டிவிடுவது, ஆள் மாறாட்டம் செய்வது, வாக்குச் சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத் திற்குள் வாக்கு சேகரிப்பது, வாக்குப் பதிவுக்கு முந்தைய 48 மணி நேரங் களுக்குள் பொதுக்கூட்டம் நடத்துவது, வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்வது போன்றஊழல் நடவடிக்கைகளைகட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment