செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 3, 2021

செய்தியும், சிந்தனையும்....!

அடேயப்பா

என்ன வேகம்?

ஜனவரியில் பெய்த கன மழை பாதிப்பை ஆய்வு செய்திட மத்திய குழு நாளை வருகை.

என்ன அவசரம் - என்ன சீக்கிரம்? அடுத்தாண்டு ஜனவரியில் கூட வரலாமே!

பஞ்சம்

தமிழ்ப் பாட்டுக்கே!

திருவையாறில் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளைப் பாடி தியாகராயருக்கு இசை அஞ்சலி.

பஞ்சம் தமிழ்ப் பாட்டுக்குத்தான்.

ஒழிக கிரீமிலேயர்!

கல்வி, வேலை வாய்ப்புப் பெற பிற்படுத்தப்பட்டோருக்கான கிரீமிலேயர் எனும் பொருளாதார வரம்பை உயர்த்த அரசு பரிசீலனை.

கிரீமிலேயரே ஒழிக்கப்படவேண்டும் என்பதுதான் உண்மையான சமூகநீதி.

சீப்பை ஒளித்து வைத்து...

ஜெயலலிதா நினைவிடத்தைப் பார்வையிட 15 நாட்களுக்கு அனுமதி கிடையாது.

சீப்பை ஒளித்து வைத்து கல்யாணத்தை நிறுத்திட முடிவு.

முள்வேலி ஆசனம்!

டில்லியில் விவசாயிகள் போராட்டத்தைத் தடுக்க சாலையில் தடுப்புகள் - முள்வேலிகள் மத்திய அரசு ஏற்பாடு.

மத்திய அரசு முள்வேலி மேல் உட்காருவது என்று முடிவு செய்துவிட்டதாகவே தெரிகிறது.

குடியா மூழ்கும்?

திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமையால் கொடுங்கையூரில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை.

இது ஒரு பிரச்சினையா?

மருத்துவ அறிவியல் வளர்ந்துவிட்ட இந்தக் காலகட்டத்தில் எத்தனையோ வழிமுறைகள் உண்டே! பிரச்சினை கணவனிடம்கூட இருக்கலாமே! அப்படியே குழந்தை இல்லாவிட்டால் குடியா மூழ்கிப் போகும்? தாய் - தந்தையின்றி தவிக்கும் ஏதோ ஒரு குழந்தையை எடுத்துக்கூட வளர்க்கலாமே!

No comments:

Post a Comment