டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
· வேளாண் சட்டங்களை ரத்து செய்யும்வரை தங்கள் போராட்டத்தை வரும் அக்டோபர் மாதம் வரை தொடருவோம் என பாரதீய கிஷான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகாயத் அரசை எச்சரித்துள்ளார்.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
· அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக்., (பயோ டெக்னாலஜி) பட்டப்படிப்பை இந்த கல்வி ஆண்டில் (2020-21) ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என அறிவித்துள்ளது.
· பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு எந்த சலுகையும் இல்லை என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· நாடு முழுவதும் மதம் மாறி காதல் திருமணம் செய்ய தடை விதித்து சட்டம் இயற்றும் எண்ணம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· குடியுரிமை திருத்த சட்டத்தின் விதிகள் இன்னும் ஆறு மாதத்திற்குள் உருவாக்கப்படும் என உள்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
தி டெலிகிராப்:
· ஆண், பெண் இரு பாலருக்கு ஒரே திருமண வயது இருக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, மத்திய அரசுக்கும், ராஜஸ்தான் அரசுக்கும் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
· டில்லி அருகே வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகள் குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இரு அவைகளும் பல முறை ஒத்திவைக்கப்பட்டது.
பிபிசி நியூஸ் தமிழ்:
இலங்கையின் பிரதான துறைமுகமாக விளங்கும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் பகுதியை மேம்படுத்த இந்தியாவுடன் எட்டியிருந்த ஒப்பந்தத்தை மீறி அதை தனது துறைமுகங்கள் ஆணை யமே மேம்படுத்தும் என்ற திடீர் முடிவை இலங்கை எடுத்திருக்கிறது.
· நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து வந்தது. கோவிட் அதனை இன்னும் அதள பாதாளத்தில் தள்ளியது. கோடிக்கணக்கான மக்கள் வேலையிழந்து, வருமானமிழந்து பாதிக்கப்பட்டார்கள். வளர்ச்சி விகிதம் மைனஸ் 10ஆக உள்ளது. விலைவாசி உயர்ந்துள்ளது. இவை தான் நம் பிரச்சினைகள். இவற்றைச் சந்திக்க நம் பட்ஜெட்டில் எந்தத் திட்டமும் இல்லை என சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் தலைவர் ஜோதி சிவஞானம் கருத்திட்டுள்ளார்.
- குடந்தை கருணா
3.2.2021
No comments:
Post a Comment