சென்னை,பிப்.2- மத்திய நிதிநிலை அறிக்கை நேற்று (1.2.2021) நாடாளுமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதுகுறித்து தலைவர்கள் தங்களின் கருத் துகளைத் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. தலைவர்
தளபதி மு.க.ஸ்டாலின்
தமிழக சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவர், திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் குறிப் பிட்டுள்ளதாவது: கடந்த6ஆண்டு களாக தமிழகத்தைப் பல வழிகளிலும் புறக்கணித்த மத்திய அரசு, தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் வருவதை முன்னிட்டு, மெகா திட்டங்களை நிறைவேற்றப் போவதாக அறிவித்தி ருந்தாலும் பட்ஜெட் அறிவிப்பு களில் தெளிவு இல்லை என்பது ஏமாற்ற மாக இருக்கிறது. “தமிழகத்தில் ரூ. 1.03 லட்சம் கோடியில் 3,500 கிலோ மீட்டர் சாலைகள்” என்று கூறப்பட்டிருந்தாலும் அதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை.“சென்னை - சேலம்” பசுமை வழிச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று அறிவித்திருப்பது மத்திய அரசின் பிடிவாதத்தை காட்டுகிறது. வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக பெட் ரோல், டீசலுக்கு புதிதாக செஸ் வரி விதிக்கப்பட்டிருப்பதால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடி பண உதவி செய்வது குறித்தும் எந்த அறி விப்பும் இல்லை. சட்டப்பேரவைத் தேர் தலையொட்டி தமிழக மக்களுக்கு ஒரு மாய லாலிபாப் கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிர, அந்த லாலிபாப் உண்மையானது அல்ல. கைவரக் கூடியதல்ல என்பதை நிதி நிலை அறிக்கையின் வாசகங்கள் நிரூபிக்கின்றன. விவசாயிகள், வேலை யில்லா இளைஞர்கள், தொழிலாளர்கள், ஏழை, நடுத்தர மக்கள் அனைவருக்கும் பயனில்லாத, ஒரு சில பகட்டு அறிவிப் புகளைக் கொண்ட பட்ஜெட் இது.
தமிழக காங்கிரஸ் தலைவர்
கே.எஸ்.அழகிரி
நேரு காலத்தில் பொதுத்துறைநிறு வனங்கள் இந்தியா வின் கோயில்கள் என்று கருதி வளர்த் தெடுக்கப்பட்டன. ஆனால், மோடிஆட்சியில் பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகின்றன. பொதுத் துறை நிறுவனங்களின் சொத்து என்பது மக்களின் சொத்து. இதை தனியா ருக்கு விற்பதை அனுமதிக்க முடியாது. பாஜகவின் பட்ஜெட் ஏழை, எளியவர்களுக்கு எதிரானது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர்
வைகோ
வீழ்ந்த பொரு ளாதாரத்தை மீட் டெடுப்பதற்கான எந்த வழிமுறையும் மத்திய பட்ஜட்டில் இல்லை. கடந்த 2020 நவம் பர் வரை ரூ. 7 லட்சம் மட்டுமே வரி வருவாய் கிடைத்துள்ளது. இந்த வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கான வழிகளும் பட்ஜெட்டில் இல்லை. சேலம் - சென்னை 8 வழிச்சாலைத் திட்டத்தை தொடருவோம் என்று அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது. சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மதுரை - கொல்லம் நெடுஞ்சாலை, ஒருங்கிணைந்த பல் நோக்கு கடல் பூங்கா, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் ஏமாற்றம் தரும் பட்ஜெட் இது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
மத்திய பட் ஜெட் தமிழக மக் களுக்கும், நாட்டு மக்களுக்கும் பெரும் ஏமாற்றம ளிப்பதோடு, வெறும் வார்த்தை களின் தொகுப்பாக மட் டுமே உள்ளது. வளர்ச்சி, வாழ்வாதாரத் தேவைகளுக்கான வருவாயைப் பெருக் குவதற்கு எந்தவொரு உருப்படியான ஆலோசனைகளையும் பட்ஜெட் முன்வைக்கவில்லை. ஊரக வேலை உறுதித் திட்ட நாட்களை 200 ஆக அதிகரிக்க வேண்டும் என்றகோரிக்கை ஏற்கப்படவில்லை. ஏற்கெனவே உள்ள சாலைகளை மேம்படுத்தாமல், புதிய சாலை திட்டங்களை அறிவிப்பதால் எந்தப் பலனும் இல்லை. மொத்தத்தில் இது கார்ப்பரேட் ஆதரவு பட்ஜெட்.இந்திய கம்யூனிஸ்ட்
மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்
கரோனா நெருக்கடி, வேலையின்மை, விவசாயிகளின் பிரச்சினை, விலை வாசி உயர்வு என்று மக்கள் எந்தப் பிரச்சி னைக்கும் மத்திய பட்ஜெட்டில் திட்டங் களும், தீர்வுகளும் இல்லை. விவசாயத் துறைமுன்னேற்றுத்துக்காக டீசல் விலை யில் லிட்டருக்கு ரூ. 4, பெட்ரோல் விலையில் ரூ. 2.50-ம் வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பு, விவசாயிகளின் போராட்டத்தைக் காட்டி நுகர்வோர் மீது சுமையை ஏற்றும் அரசியல் சதியாகும். வழக்கம்போல பெரு நிறுவனங்களைப் பாதுகாக்கும் வகையில் பட்ஜெட் உள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர்
தொல்.திருமாவளவன்
முதல் முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய் யப்பட்டுள்ளது.ஆனால், மக் களுக்கு பயனில் லாதபட்ஜெட். பெரு நிறுவ னங்களுக்கு நாட்டை விற்க வழி செய்யும் பட்ஜெட். 7 பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்து பற்றாக்குறையை ஈடு செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயக் கட்டமைப்பு வசதியை ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் மீதும் செஸ் வரியை திணிப்பது கண்ட னத்துக்குரியது. சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் மாநிலங்களைக் குறித்து சில திட்டங்களை அறிவித்துள்ளனர். இது அரசியல் ஆதாயத்துக்கான வெற்று அறிவிப்பு. தாழ்த்தப்பட்ட மக்கள் முன் னேற்றுத்துக்கான எந்த அறிவிப்பும் இல்லை.
No comments:
Post a Comment