ஜெய்பூர், பிப்.2 ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுள்ள நகராட்சிகள் தேர்தலில் காங்கிரஸ் 1198 வார்டுகளை கைப்பற்றி பாஜகவை பின்னுக்குத் தள்ளி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த வியாழன்று (28.1.2021) 20 மாவட்டங்களில் 90 நகராட்சி அமைப்புக்களுக்குத் தேர்தல் நடந்தது. மொத்தம் 3035 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தற்போது இறுதி முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த வார்டுகள்: 3035 முடிவு அறிவிக்கப்பட்ட வார்டுகள்: 3035 காங்கிரஸ்: 1198 பாஜக: 1140, ஆர் எல் பி: 13, தேசிய வாத காங்கிரஸ்: 46, சிபிஎம்: 3,பகுஜன் சமாஜ் : 1, மற்றவை : 634 இதில் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது. பாஜகவை விட 58 இடங்கள் அதிகம் வென்றுள்ளது.
வாக்கு விகிதம்,காங்கிரஸ் : 34.36%,பாஜக : 33.49%,ஆர் எல் பி: 0.58%,தேசியவாத காங்கிரஸ் : 1.26%,சி பி எம் : 0.23%,பகுஜன் சமாஜ்: 0.13%,சுயேச்சைகள் : 29.23%,நோடா : 0.73%
இந்த தேர்தலில் 76.52 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன. உள்ளாட்சி தேர்தலில் பெற்றுள்ள இந்த வெற்றி ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என நம்பப்படுகிறது. ஆளும் கட்சி மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை இது காட்டுகிறது எனக்கூறும் அக்கட்சியினர் இதனை பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
No comments:
Post a Comment