போலியோ சொட்டு மருந்துக்குப் பதில் சானிடைசர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 2, 2021

போலியோ சொட்டு மருந்துக்குப் பதில் சானிடைசர்!

மருத்துவ பணியாளர்கள் பணியிடை நீக்கம்

மும்பை, பிப்.2 மகாராஷ்டிர மாநிலத்தில் போலியோ சொட்டு மருந்துக்குப் பதில் 12 குழந்தைகளுக்கு சானிடைசர் அளிக்கப் பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

நாடெங்கும் 31.1.2021  அன்று  5 வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது.  டில்லியில் இதைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  தொடங்கி வைத் துள்ளார்.  

அவ்வகையில் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள யவத்மால் பகுதியில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டுள்ளது.  அதில் 12 குழந்தை களுக்குப் போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக 'சானிடைசர்' (கைதுடைப்பான்) அளிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

யவத்மால் மாவட்ட குழுவின் தலைவர் சிறீகிருஷ்ண பஞ்சால், “அய்ந்து வயதுக்குட்பட்ட 12 குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்துக்குப் பதில் 'சானிடைசர்' அளிக்கப்பட்டுள்ளது.  இந்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர். தற்போது அவர்கள் நலமாக உள்ளனர்.  இதையொட்டி ஒரு சுகாதாரப் பணியாளர், மருத்துவர், செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணை நடக்கிறதுஎனத் தெரி வித்துள்ளார்.

No comments:

Post a Comment