சடலத்தை இரண்டு கிலோ மீட்டர் தோளில் சுமந்துசென்ற ஆந்திர காவல்துறை பெண் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 3, 2021

சடலத்தை இரண்டு கிலோ மீட்டர் தோளில் சுமந்துசென்ற ஆந்திர காவல்துறை பெண்

உதவிஆய்வாளருக்கு குவிகிறது பாராட்டு

சிறீகாகுளம், பிப்.3 ஆந்திர மாநிலம் சிறீகாகுளம் பகுதியில், அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை இரண்டு கிலோ மீட்டர் தூரம், தனது தோளில் சுமந்துசென்று இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்த பெண் உதவி ஆய்வாளரை பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். ஆந்திரப்பிரதேச மாநிலம், சிறீகாகுளம் மாவட்டம், பலாச மண்டலம், காசிபுக்கு நகராட்சிக்கு உட்பட்டது அடவி கொத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் இருப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து காசிபுக்கு காவல்நிலைய பெண் காவல்துறை உதவி ஆய்வாளர் சிரிஷா, சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை அங்குள்ள பொதுமக்கள் உதவியுடன் மீட்டு, இறுதிச் சடங்கு செய்யவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார். ஆனால் சடலத்தை எடுப்பதற்கு பொதுமக்கள் முன்வரத் தயங்கினர்.எனவே, காவல்துறை உதவி ஆய்வாளர் சிரிஷா உதவிக்கு வந்த சிலருடன் சேர்ந்து ஸ்ட்ரச்சரில் வைத்து தனது தோளில் சுமந்தபடி இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து அந்த சடலத்தை ஊருக்கு வெளியே கொண்டு வந்தார். பின்னர் லலிதா தன்னார்வ அமைப்பின் மூலம் இறுதிநிகழ்வு நடைபெற்றது. இந்த காட்சிப்பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், காவல்துறை உதவி ஆய்வாளர் சிரிஷாவின் சேவைக்கு டிஜிபி கவுதம் சவாங் உள்பட காவல்துறை உயர் அதிகாரிகள்  பாராட்டு தெரிவித்துள்ளனர். இதேபோல, சமூக வலைதளங்களிலும் சிரிஷாவிற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றது.

No comments:

Post a Comment