டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
· பேச்சு வார்த்தை மூலம் இந்திய விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண அமெரிக்காவின் புதிய அரசு வலியுறுத்தியுள்ளது.
· பிரிட்டிஷ் நாடாளுமன்றம், இந்திய விவசாயிகள் பிரச்சினை மற்றும் ஊடக சுதந்திரம் குறித்து விவாதிக்க உள்ளது.
· தேச விரோத சட்டம் நகைப்புக்குரியதாக உள்ளது. அச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஊடக நெறியாளர் கரண் தாப்பர் கூறியுள்ளார்.
· பீகாரில் போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப் படுவர்களுக்கு அரசு வேலைக்கு செல்வதை தடுக்கும் காவல் துறையின் ஆணையை அரசு ரத்து செய்ய வேண்டும் என தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
· ‘ஆன் லைன் ரம்மி' உள்ளிட்ட இணையம் வழியே சூதாட்டத்தில் ஈடுபடுவர்களுக்கு இரண்டாண்டு சிறை தண்டனையும், ரூ.10000 அபராதமும் விதிக்க தமிழக அரசு சட்டமன்றத்தில் மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
· மோடி அரசு விவசாயிகள் போராட்டத்தை தடுக்க வேலி உள்ளிட்ட தடுப்புகளை உருவாக்கியதற்கு நாடாளுமன்றத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க அரசு ஏற்பாடு செய்துள்ள தடுப்புகள் மக்களுக்கும் அரசுக்கும் இடையேயான இடை வெளியை உறுதி செய்கிறது என சுகாஷ் பல்சிகார் கருத்திட்டுள்ளார்.
· ஜூலை 24, 2020 அன்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு மத்திய அரசுப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை சமர்ப்பித்த அறிக்கையின்படி, குழு-ஏ மத்திய அரசு சேவைகளில் ஓபிசி பிரதிநிதித்துவம் 16.51%, குழு-பி-யில் 13.38%, குழு-சி-ல் 21.25% (சஃபை தவிர) கர்மாச்சாரிஸ்) மற்றும் குழு-சி (சஃபாய் கர்மாச்சாரிஸ்) இல் 17.72%. இந்தத் தரவு மத்திய அரசின் 42 அமைச்சகங்கள் / துறைகளுக்கு மட்டுமே என ஓபிசி இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு குறித்து அமைக்கப்பட்ட ஆணையம் தெரிவிக்கிறது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு - 6.1 லட்சம் மாதிரி வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இந்தியா பெண் களுக்கு பாதுகாப்பான நாடாக இல்லை என்பதாக குறிப்பிடத்தக்க விவரங்கள் இருந்தன.
தி டெலிகிராப்:
· அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் அரசு நடத்தும் 10 விமான நிலையங்களை தனியார்மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது
· ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் அதன் பிரித்தெடுப்பை புதிதாகத் தொடங்குவதற்கான ஆரம்ப தகவல் குறிப்பில் மய்யம் மிதக்கும் என்று விமானத் துறை செயலாளர் பிரதீப் கரோலா கூறினார்.
· இந்து உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் எழுத்தாளரும் பகுத்தறிவாளருமான கே.எஸ். பகவான் பெங்களூரு நீதிமன்ற வளாகத்தில் பிணை பெற்ற பின்னர் அவர் மீது மீரா ராகவேந்திரா என்ற வழக்குரைஞர் கருப்பு மையை வீசினார்.
· நாடாளுமன்றத்தில் அளித்த தகவலின்படி, பிப்ரவரி 1 ஆம் தேதி வரை உச்சநீதிமன்றத்தில் நான்கு காலியிடங்கள் உள்ளன. 25 உயர் நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளின் காலியிடங்களின் எண்ணிக்கை 419 ஆகும்.
பிபிசி நியூஸ் தமிழ்:
· ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை கைதியாக உள்ள பேரறிவாளனை விடுவிப்பது குறித்து இந்திய குடியரசு தலைவர்தான் முடிவுசெய்ய வேண்டுமென தமிழக ஆளுநர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
· "விவசாயிகள், தங்களை சந்திக்க எம்.பி.க்கள் சிலர் வருகிறார்கள் என்ற தகவலறிந்து எங்களை சந்திக்க முன்வந்தபோதும் அவர்களை காவல்துறையினர் தடுத்து விட்டனர். விவசாயிகளின் குரல்கள் வெகு தூரத்தில் ஒலிப்பதை மட்டுமே எங்களால் கேட்க முடந்தது. நாடாளு மன்றத்தில் அவர்களின் பிரச்சினைகளை எழுப்ப தினமும் நேரம் கேட்டு வருகிறோம். ஆனாலும் எங்களுக்கு அனுமதி கொடுக்கப்படுவ தில்லை. இருந்தாலும் நாங்கள் தொடர்ந்து எங்களுடைய குரலை விவசாயிகளுக்காக ஒலித்துக் கொண்டே இருப்போம்," என்றார் கனிமொழி.
- குடந்தை கருணா
5.2.2021
No comments:
Post a Comment