வேளாண் சட்டங்களை திரும்ப பெறுங்கள் அமெரிக்க இந்தியர்கள் கோரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 2, 2021

வேளாண் சட்டங்களை திரும்ப பெறுங்கள் அமெரிக்க இந்தியர்கள் கோரிக்கை

வாசிங்டன்,பிப்.2- அமெரிக்காவில் புலம்பெயர் இந்தியர்களின் பல் வேறு அமைப்புகள் இணைந்து பன்னாட்டு இந்திய முன்னேற்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். காணொலியில் நேற்று (1.2.2021) நடந்த இதன்  கூட்டத்துக்கு பிறகு வெளியிட்டுள்ள  அறிக்கையில்,

 விவசாயிகளின் போராட்டங்கள் பற்றிய வெளிநாடுகளில் இருப்பவர்களின் கருத்துகள் தவறானவை என்றும், அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் மத்திய அரசு கூறுகிறது. வெளிநாடுகளில் முன்னேற்றமடைந்து  வரும் இந்தியர்களாகிய நாங்கள், சொந்த மண்ணில் நடந்து வரும் போராட்டங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.  எனவே, இந்த சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்,’ என கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment