டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
· வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகள், போக்கிலிகள் அல்ல. சாலைகளில் முள் கம்பிகளை வைத்து அவர்களை தடுப்பது என்பது காவல்துறையைக் கொண்டு மக்களை கொடுமை செய்யும் அரசாகக் கருதப்படும் என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
· ஜவகர்லால் பல்கலைக்கழகம், அய்.அய்.டி. உள்ளிட்ட பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 400 பேராசிரியர்கள், விவசாயிகளின் போராட்டம் தங்களுக்கு கவலையளிப்பதாகவும், உடனடியாக வேளாண் சட்டங்களை அரசு ரத்து செய்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· அய்.அய்.டி.யில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்படாத இடங்களை ஓராண்டிற்குப் பிறகு பொதுப் பிரிவு இடங்களாக மாற்ற வேண்டும் என மத்திய கல்வித்துறை அமைத்த குழுவின் பரிந்துரைக்கு மத்திய பணியாளர் நலத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
· விவசாயிகள் தங்களின் நியாயமான கோரிக்கைக்குப் போராட உரிமை உண்டு. அதனை அரசு தடுப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவே கருத்திட்டுள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· சர்வதேச பாப் பிரபலம் ரியான்னா, சர்வதேச அளவில் புகழ் பெற்ற பார்ன் நட்சத்திர நடிகையான மியா கலிஃபா, சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரெட்டா டூன்பெர்க், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் சகோதரி மகள் மீனா ஹாரிஸ் ஆகியோர் டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்கள்.
· பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளித்திடும் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என பிஜூ ஜனதா தள நாடாளு மன்ற உறுப்பினர் டாக்டர் சஷ்மித் மித்ரா வலியுறுத்தியுள்ளார்.
தி டெலிகிராப்:
· இந்த ஆண்டுக்கான பட்ஜெட் திட்டங்களில் குழந்தை-ஊட்டச்சத்து திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு குறைத்துள்ளது, 2020-21 வரவுசெலவுத் திட்டத்தில் அங்கன்வாடி சேவைகளுக்காக அரசாங்கம் ரூ. 20,532 கோடியை ஒதுக்கியிருந்தது, பின்னர் அது கீழ்நோக்கி திருத்தப்பட்டு ரூ. 17,252 கோடியாக இருந்தது. 2021-22 ஆம் ஆண்டில், இந்த திட்டத்திற்காக அரசாங்கம் ரூ .20,105 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளது.
பிபிசி நியூஸ் தமிழ்:
· இந்தியாவில் தற்போது விவசாயிகளை மத்திய அரசு நடத்தும் முறையைப் பார்த்து நாடே அதிர்ச்சி அடைந்திருக்கிறது. சொந்த குடிமக்களையே தீவிரவாதிகள் போல மோடி அரசு நடத்துகிறது, என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார். மோடியின் சுய ஆளுகை பாணியே, தனக்கு எதிரானவர்களை அமைதியாக்குவது, முடக்குவது, பிறகு நசுக்குவது என்றும் கூறினார்.
- குடந்தை கருணா
4.2.2021
No comments:
Post a Comment