புதுடில்லி. பிப். 4 சர்வாதிகாரிகளில் பெரும்பாலானோர் பெயர்கள் எம்-இல் ஏன் தொடங்குகின்றன என்று கேள்வி கேட்ட ராகுல், அப்பெயர்களைப் பட்டியலிட்டுள்ளார்.
வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற, மோடி தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், விவசாயிகளும் 70 நாட்களுக்கும் மேலாக கடுங் குளிரையும் பொருட்படுத்தாது டில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டம் உலகம் முழுவதும் அதிர்வலை களை ஏற்படுத்தி வருகிறது. விவசாயிகளின் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும்விதமாக பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு இரும்பு முள்வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் நடவடிக்கைக்கு, உலக நாடுகளில் உள்ள சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர்.
ஆனால், போராட்டக்காரர்களை சந்திக்கவோ, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவோ மத்திய அரசு தயாராக இல்லை. இந்த நிலையில், பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டுவிட் போட்டுள்ளார்.
அதில், பெரும்பாலான சர்வாதிகாரிகளின் பெயர்கள் ‘எம்' என்ற எழுத்தில் தொடங்குகின்றன என கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் பல சர்வாதிகாரிகளின் பெயர்களையும் குறிப்பிட் டுள்ளார்.
அதில், மார்கோஸ், முசோலினி, மிலோசெவிச், முபாரக், மொபுட்டு, முஷாரஃப், மைக்கோம்பெரோ ஆகியோரின் பெயர்களைப் பதிவிட்டு, ‘எம்' இல் தொடங்கும் பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
விவசாயிகளின் போராட்டப் பதிவுகளை நீக்கவேண்டுமாம்!
டுவிட்டர் சமூகவலை தளத்திற்கு
மோடி அரசு எச்சரிக்கை
புதுடில்லி. பிப். 4 விவசாயிகளின் போராட்டம் தொடர்பான அனைத்துக் குறியீடுகள் மற்றும் பதிவுகளை நீக்க வேண்டும் என்று டுவிட்டர் நிறுவனத்தை மோடி அரசு எச்சரித்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 2 மாதங்களை கடந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் ஏராளமான மக்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ‘‘விவசாயிகள் இனப்படுகொலை'' என்ற குறியீட்டுச் சொல் அதிகளவில் பகிரப்பட்டது. அதன் விளைவாக பிரபலங்கள் பலரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். எனவே, இந்த குறியீட்டுச் சொல் மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான அனைத்து பதிவுகளையும் நீக்கவேண்டும் என்று டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரித்து உள்ளது.
மோடி அரசின் வேளாண் சட்டங்கள் அவரது நண்பர்களின் நலனுக்காகவே கொண்டுவந்துள்ளது என்பது பட்டவர்த்தமாக உண்மையாகி விட்டது, இந்த நிலையில் உண்மைகள் வெளியே வராமல் இருக்க விவசாயிகள் போர்வையில் தலைநகரில் கலவரத்தை உருவாக்கி விவசாயிகள் போராட்டத்தை சீர் குலைக்கப் பார்த்தார்கள். ஆனால், சமூக வலைதளங்களில் விவ சாயிகள் பெயரில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் அனைவருமே பாஜக மற்றும் இந்துத்துவ குண்டர்கள் என்பதும் இதில் பலர் கடந்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது டில்லியில் வன்முறையில் ஈடுபட்டவர்களில் பல விவசாயிகள் பெயரில் வன்முறையில் ஈடுபட்டது தெரிவந்துள்ளது இந்த நிலையில் இந்த உண்மைகள் வெளியே வராமல் இருக்க மோடி அரசு சமூக வலைதளங்களை முடக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. முகநூல் ஏற்கெனவே அம்பானி நிறுவனத்தோடு ஒட்டுறவோடு உள்ளதால் அவர்கள் தானாகவே விவசாயிகள் தொடர்பான பதிவுகளைப் போடுபவர்களைத் தொடர்ந்து தடைசெய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளையும் பெண்களையும் ஏமாற்றும் மோடி அரசாங்கம்!
அய்தராபாத், பிப். 4 நாட்டின் வளர்ச்சியைப் பற்றி வெற்று கூச்ச லிடும் நரேந்திர மோடி அரசாங்கம், இந்த 2021-22 நிதியாண்டு பட்ஜெட்டில், இந்தியாவினுடைய குழந்தைகள் நலன்களுக்காக என்ன செய்துள்ளது என்று பார்த்தால், அதிர்ச்சிகரமான விஷயங்கள்தான் வெளிவருகின்றன.
கரோனாவின் பிடியில் சிக்கி, நாட்டின் சாமானிய மக்கள் அல்லலுற்ற நிலையில், அவர்களுக்கான சிறப்பு கவனிப்பு இந்த பட்ஜெட்டில் கட்டாயம் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கு, பட்ஜெட்டில் இந்தாண்டு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை ரூ.24435 கோடிகள். ஆனால், கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.30007.1 கோடிகள். அதாவது, 18.6 விழுக்காடு குறைத்து ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
அங்கன்வாடி சேவைகளுக்கு ஒதுக்கப்படும் தொகையில் வெட்டு ஏற்பட்டுள்ளது. பாலின பேதம் நிலவும் இந்திய சமூகத்தில், இந்த பட்ஜெட் பற்றாக்குறை என்பது இன்னும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஎம்எம்விஒய் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ரூ.2500 கோடியிலிருந்து ரூ.1300 கோடி என்ற அளவிற்கு குறைந்துள்ளது. அதாவது, குறைந்தபட்ச செயல்திட்டத்திலிருந்தே, ஏறத்தாழ பாதியளவு பெண்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மக்கள்தொகையில் 42 விழுக்காடு இருக்கும் குழந்தைகளுக்கான ஒதுக்கீட்டில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்காக ஒதுக்கப்படும் நிதியும் முறையாக முழுமையாக செலவு செய்யப்படுவதில்லை. குழந்தைகள் பாதுகாப்பிற்கான நிதி 40 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.1500 கோடி யிலிருந்து ரூ.900 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment