சென்னை,பிப்.27- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும், தேசியக்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாட்டின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான தோழர் தா.பாண்டியன் மறைவையொட்டி,
அவர் உடலுக்கு மலர்மாலை வைத்து திராவிடர்
கழகத் தலைவர் தமிழர்
தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
மரியாதை செலுத்தினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் மற்றும் தோழர்களுக்கும், தோழர் தா.பா. அவர்களின்
குடும்பத்தினருக்கும்
கழகத் தலைவர் ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொண்டார்.
கழகத்
துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு
பெரியார் மற்றும் சென்னை மண்டல, மாவட்டங்களின் கழகப் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர். கழகத்
தலைவர் அவர்களின் இரங்கல் அறிக்கையின் நகல் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment