கேட்காமல் கேட்கிறார்!
ரஜினி ரசிகர் மன்றத்தை அவர் கலைக்கவில்லை: - தமிழருவி மணியன்
ஏன் இன்னும் கலைக்கவில்லை என்று கேட்கிறாரோ!
எரிமலையாகும்!
69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனு - இரு வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது.
இந்திய அரசமைப்புச் சட்டம் 9 ஆம் அட்டவணையில் சேர்க்கப்பட்ட ஒன்றின்மீது தொடுக்கப்பட்ட வழக்கை தொடக்கக் கட்டத்திலேயே தள்ளுபடி செய்வதே நியாயம் - மேலும் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது - புதிய வழக்கை அனுமதிக்க வேண்டிய அவசியம் என்ன?
69 விழுக்காட்டில் கை வைத்தால் தமிழ்நாடு எரிமலையாகும் - எச்சரிக்கை!
மாவட்ட ஆட்சியர்கள் என்ன செய்கிறார்களாம்?
மாவட்ட ஆட்சியர்கள் நடத்தவேண்டிய கிராம சபைக் கூட்டத்தை மு.க.ஸ்டாலின் நடத்துவதா? : - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கிண்டல்.
ஓ, அப்படியா?
மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கிராம சபைக் கூட்டங்களை ஏன் நடத்தவில்லையாம்?
காந்தியாரை எத்தனை முறைக் கொல்லுவார்கள்?
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் காந்தியார் சிலை உடைப்பு.
காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்ட அதே நாளில் இது நடந்திருக்கிறது. இந்து மகா சபைளயின் தலைவராக இருக்கக் கூடியவர் காந்தியாரின் உருவம் செய்து இந்தியாவில் துப்பாக்கியால் சுடவில்லையா?
இரண்டையும் இணைத்து விசாரித்தால் குட்டு உடைபடும்!
பாயும் பாசிசம்!
டில்லியில் விவசாயிகள் போராட்ட செய்திகளை வெளியிட்ட, செய்தியாளர்கள், பத்திரிகையாளர்கள்மீது வழக்கு!
அரைகுறைப் பாசிசம் என்று கருதவேண்டாம் - பச்சையான முழு பாசிசம் பாய்ந்து குதறுகிறது.
வெளுத்துக்
கட்டலாம்!
விவசாயிகள் போராட்டம் குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க ஒப்புதல்.
ஆம்! அந்த மாநிலங்களவையில் தானே மசோதா வாக்கெடுப்புக்கு விடப்படாமல் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதையெல்லாம் சேர்த்து வாங்கு வாங்கென வாங்குவதற்கு ஒரு வாய்ப்பு.
இதுகூட மறந்து போச்சா?
விவசாயிகள் பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படவேண்டும்: - மாநிலங்களவையில் பா.ஜ.க. உறுப்பினர் தகுப்பட்டி புரந்தேஸ்வரி..
பேச்சுவார்த்தை முடிந்தது - இனி பேச்சுவார்த்தை என்பது இல்லை என்று அறிவித்தது மத்திய அரசு தானே!
கந்து வட்டிக்கடை நடத்துகிறதா
மத்திய அரசு?
வருங்கால வைப்பு நிதிக்கு வருமான வரி: - நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு.
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அவர்களின் வருங்காலத்திற்குப் பாதுகாப்பு ஏற்பாடு - அதிலும் கை வைப்பா - கந்து வட்டிக்காரர்கள் தேவலாம் போலிருக்கே!
விடியலுக்கு வழி!
பெண்களுக்கு அதிகாரம் வழங்க வலியுறுத்தி 5000 கி.மீ. சைக்கிள் பயணத்தைத் தொடங்கினர் இரு பெண்கள்.
வீதிக்கு வந்து போராடினால்தான் விடியல் கிடைக்கும்.
அம்பலமாகிறதோ இந்தியா?
விவசாயிகள் போராட்டத்துக்குப் பன்னாட்டு பிரபலங்கள் ஆதரவு : - மத்திய அரசு கண்டனம்.
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதை போல உலகத்தையும் கடிக்க ஆரம்பித்துவிட்டார்களோ!
No comments:
Post a Comment