மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து அகில இந்திய தலைவர்கள் கருத்து
புதுடில்லி. பிப்.2 மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நேற்று (1.2.2021) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் முதன்முறையாக, காகித மில்லாமல் டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு அறிவிப் புகளை வெளியிட்டதுடன், எல்அய்சி உள்பட பொதுநிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க உள்ளதாகவும் அறிவிக்கப் பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது.
மத்திய பா.ஜ.க. அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து அகில இந்திய தலை வர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:
ராகுல்காந்தி
பட்ஜெட் குறித்து, கருத்து தெரிவித்துள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன் னாள் தலைவர் ராகுல்காந்தி, மோடி அரசை கடுமையாக சாடியுள்ளார்.
பாஜக அரசு கொண்டு வந்துள்ள பட்ஜெட், “குரோனி முதலாளித்துவ” குற்றச் சாட்டில், நிர்மலா சீதாராமனின் மறுபிரவேசம் என்றும், மக்களை மறந்து விட்டு பொது சொத்துக்களை நெருங்கிய தொழிலதிபர் நண்பர்களுக்கு தாரைவார்க்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடியான காலகட் டத்தில் மறுக்கப்பட வேண்டிய அம்சங்க ளோடு இநத் பட்ஜெட் உருவாக்கப்பட வில்லை. உதவி தேவைப்படுகிற மக்களின் கைகள் வெறுங்கைகளாக இருக்கையில், பட்ஜெட் சில நட்பு முதலாளிகளுக்கு சாதக மானது, அடுத்த நிதியாண்டில், இரண்டு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஒரு காப்பீட்டு நிறுவனம் உள்ளிட்ட நிதி நிறு வனங்களின் பங்கு விற்பனைமூலம் இந்தி யாவின் சொத்துக்களை நட்பு முதலாளி களிடம் ஒப்படைக்க நரேந்திர மோடி அரசு திட்டமிட்டுள்ளது என்று குற்றம்
சாட்டினார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா
''மத்திய அரசின் இந்த ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் மக்களை ஏமாற்றுவதை நோக்கமாகக் கொண்டது. பாஜகவினர் தேசியவாதம் குறித்து மற்ற வர்களுக்குச் சொற்பொழிவு ஆற்றுகிறார்கள், ஆனால் நடைமுறையில், அவர்கள்தான் நாட்டின் வளங்களைத் தனியாருக்கு விற்கிறார்கள். பொதுத்துறை நிறுவனங்கள், காப்பீடு, ரயில்வே மற்றும் துறைமுகங்கள் என அனைத்தையும் விற்கிறார்கள்.
இது ஒரு விவசாயிகளுக்கு எதிரான, மக்கள் விரோத மற்றும் நாட்டுக்கு எதிரான பட்ஜெட்டாக அமைந்துள்ளது. மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை நான் மீண்டும் இங்கு முன்வைக்கிறேன்.
மேலும், பல கோடி ரூபாய்க்கான பெரு முதலாளிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடிகிறதென்றால், வேளாண் கடன் களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய ஏன் தயங்குகிறது?
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பயணத்திற்குப் பணம் இல்லை என்று கைவிரித்தது மத்திய அரசு. ஆனால், தங்கள் கட்சியில் சேரவரும் டிஎம்சி தலைவர்களை விமானம் அனுப்பி வரவழைப்பதற்கு மட்டும் பணம் எங்கிருந்து வந்தது? கோவிட் காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் போக்குவரத்துக்கு நாங்கள் பணம் செலுத் தினோம். ஆனால், மத்திய அரசு அவர்களின் சிரமங்களைக் கண்டுகொள்ளவில்லை.
ஆனால், கட்சி மாறும் தலைவர்களைப் புதுடில்லிக்கு வரவழைப்பதற்கு மட்டும் அவர்களிடம் பணம் உள்ளது. இது அவர் களின் உண்மையான நிறத்தையே காட்டு கிறது''. இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
டெரிக் ஒபிரையன்
(திரிணாமுல் காங்கிரஸ்)
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் டெரிக் ஓபிரையன் கூறும்போது,
எந்தவித தொலைநோக்குப் பார்வையு மற்றது என்றும் அதன் முக்கியக் கரு ‘இந்தியாவை விற்று விடுவோம்’என்பதே என்றும் சாடியுள்ளார்.
அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், “இந்தப் பட்ஜெட்டின் கரு இந்தியாவை விற்போம் என்பதே, ரயில்வே விற்கப்பட்டது. விமான நிலையங்கள் விற்கப்பட்டது. துறைமுகம் விற்கப்பட்டது. காப்பீடு-விற்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்கள்-23 விற்கப் பட்டது. சாமானிய மக்கள் புறக்கணிக்கப் பட்டனர். விவசாயிகள் புறக்கணிக்கப்பட்ட னர். பணக்காரர் மேலும் பணக்காரர் ஆவார்கள். நடுத்தர வர்க்கத்துக்கு எதுவும் இல்லை. ஏழைகள் மேலும் ஏழைகளாவார்கள் என கூறி உள்ளார்.
சிவசேனா
பட்ஜெட்டில் வேளாண் துறைக்காக 16 அம்ச திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பது வெறும் கண்துடைப்பு தான் என சிவசேனா விமர்சித்துள்ளது.
இதுகுறித்து சிவசேனா தலைவர் கிஷோர் திவாரி கூறுகையில், “இந்த பட்ஜெட்டில் வேளாண் உற்பத்தி செலவு, விளைச்சல், வேளாண் கடன் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்த எந்த தகவலும் இடம்பெறவில்லை. விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்து வருவதால், வேளாண் துறை நலிவடைந்து வருகிறது. இதற்கு வங்கி, இறக்குமதி - ஏற்றுமதி, வளர்ச்சி, உள்கட் டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் கடைப்பிடிக்கப்படும் தவறான கொள்கை களே காரணம்.
வேளாண் துறைக்காக அறிவிக்கப்பட் டிருக்கும் 16 அம்ச திட்டங்கள் வெறும் கண்துடைப்பு தான். தொழிற்சாலை, வர்த்தகம் மற்றும் சேவை துறைகளை மந்த நிலையில் இருந்து மீட்க புதிதாக ஊக்கத் தொகைகள் அறிவிக்கப்பட்டும் ஜிடிபி வளர்ச்சி அடையவில்லை. வேளாண் துறையை மந்தநிலையில் இருந்து காப்பாற்ற சிறப்பு ஊக்கத் தொகைகளை அரசு அறிவிக்க வேண்டும். பருத்தி, சோயா போன்ற பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான விவகாரம், புதிய பயிர் கடன்கள், புதிய தொழில்நுட்பம், விவசாய விதவைகளுக்கு நிதியுதவி, உயர்கல்வி உள்ளிட்டவை, இந்த பட்ஜெட்டில் கவனிக் கப்படவில்லை” எனத் திவாரி குற்றஞ்சாட்டினார்.
No comments:
Post a Comment