சூரியனிலிருந்து பிரிந்த கோள் சூரிய னையே சுற்றுவதைப்போல் பெரியாரிட மிருந்து பிரிந்த அண்ணா கொள்கை எனும் ஈர்ப்பு விசையினால் பெரியாரையே சுற்றினார்.நம்.சீனிவாசன்
பெரியாருக்கும் அண்ணாவுக்கும் வயது வேறுபாடு 30 ஆண்டுகள். அண்ணா வாழ்ந்தது 59 ஆண்டுகள். பெரியார் வாழ்ந் தது 95 ஆண்டுகள். அண்ணா பெரியாரை முதன்முதலாக சந்தித்த போது அண்ணா வுக்கு வயது 26. அப்போது பெரியார் அரசியல் வானில் சுடர்விட்டுக் கொண்டி ருந்தார். காங்கிரஸ் இயக்கத்தில் உச்சத்தைத் தொட்டு இருந்தார். சுயமரியாதை இயக்கம் தொடங்கி பண்பாட்டு புரட்சியை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.இதழியல் துறையில் முடிசூடா மன்னராய் வலம் வந்தார். பதிப் பகம் தொடங்கி புத்தகப் புரட்சியை அரங் கேற்றிக் கொண்டிருந்தார். நாடு பல கண்டு அனுபவக் கொள்கலனாய் திகழ்ந்தார். அப்போதுதான் பெரியாருடன் அண்ணா சேர்ந்தார். பெரியாரும் அண்ணாவை தலை மகனாய், தளபதியாய் அணைத்துக் கொண் டார்.
அண்ணா
பெரியாரிடம் வந்து சேர்ந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், அண்ணாவுக்கு
வயது 28 எனும் இளம் பருவத்தில் முசிறி தாலுக்கா சுயமரியாதை மாநாட்டிற்கு தலைமை ஏற்கச் செய்தார். சிக்கனமான பெரியார், அண்ணாவை, ‘திராவிட இளஞ்சிங்கம்‘ என்று பாராட்டு கின்றார். தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசு வதிலும், எழுதுவதிலும் மிக்க ஆற்றல் உடையவர் என்று போற்றுகிறார். ‘அதிதீவிர உழைப்பாளி’ என்று புகழாரம் சூட்டு கின்றார். யானை தன் குட்டிகளுக்கு பயிற்சி கொடுப்பது போல பெரியார் பயிற்சி அளிக்கிறார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறைக்கு அனுப்புகிறார். கட்சியில் சேர்ந்து நான்கே ஆண்டுகளில் 1939இல் அண்ணா வுக்கு வயது 30. பெரியார் அளித்த பொறுப்போ நீதிக்கட்சியின் பொதுச் செயலாளர். அண்ணாவை ‘விடுதலை’ இதழுக்கு ஆசிரியராக்கி அழகு பார்த்தார் பெரியார். வட நாடு பயணம்
மேற் கொண்டபோது அண்ணாவை மூன்று முறை அழைத்துச் சென்றார்.
பெரியாரும்
அண்ணாவும் இணைந்து பணியாற்றிய காலம் 14 ஆண்டுகள். திரா விடர் கழக 19ஆவது மாகாண (ஸ்பெஷல்) மாநாடு 1948 அக்டோபரில் ஈரோட்டில் நடைபெற்றது. மாநாட்டையொட்டி பிரம் மாண்டமான ஊர்வலம். இரட்டை காளை கள் பூட்டப்பட்ட ரதத்தில் அண்ணாவை அமரவைத்து பெருமை சேர்த்தார் பெரியார். ஆனாலும் பிரிவு நடைபெற்றது.
1949இல்
பெரியாரை விட்டுப் பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் கண்ட அண்ணா மீது தோழர்கள் பாசம் பொழிந் தனர். ‘அண்ணா, அண்ணா’ என்று உருகி னர். அண்ணாவுக்கு வயது 40. அண்ணா வுக்கு அடுத்த வரிசையில் இருந்த நெடுஞ்செழியனுக்கு வயது 29. அன்பழகனுக்கு வயது 27. கருணாநிதிக்கு வயது 25, ஆசைத்தம்பிக்கு வயது 25, மதியழகனுக்கு வயது 23, சம்பத்துக்கு வயது 23. அண்ண னாக இருந்தார் அண்ணா. அன்பைப் பொழிவதில் மன்னனாகவும் இருந்தார்.
1949ஆம்
ஆண்டு அய்யா பிறந்த அதே செப்டம்பர் 17ஆம் நாள், சென்னை பவழக் காரத்தெரு 7ஆம் எண்ணுள்ள இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அண்ணா, திரா விட முன்னேற்ற கழகத்தினைத் தொடங் கினார். அன்று மாலை சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்கா மைதானத்தில் பெத்தாம் பாளையம் பழனிச்சாமி தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்க விழாப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதிலே அண்ணா பேசியது காலத்தால் அழியாத கல்வெட்டு. அண்ணா கொள் கைக் குன்று என்பதற்கான சான்று, பண் பாட்டின் சிகரம் என்பதற்கான பட்டயம், அறிஞர் என்பதற்கான ஆவணம், தீர்க்க தரிசி என்பதற்கான தீர்மானம். அய்யாவை நேசிப்பதற்கான அடையாளம்; தளபதி என்பதற்கான இலக்கணம்; தன்னிகரில்லாத் தலைவன் என்பதற்கான ராஜமுத்திரை. அண்ணா பேசுகிறார் கேளுங்கள்.
“திராவிட
முன்னேற்றக் கழகம் தோன்றி விட்டது”. திராவிடர் கழகத்திற்குப் போட்டி யாக அல்ல; அதே கொள்கைப் பாதையில் தான், திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளின் மீதேதான் திராவிட முன் னேற்றக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அடிப்படைக் கொள்கைகளில், கருத்துக் களில் - மாறுதல், மோதுதல் எதுவும் கிடை யாது .சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், பொருளாதாரத் துறையிலே சமதர்மக் குறிக் கோள். அரசியலில் வடநாட்டு ஏகாதிபத்தி யத்திலிருந்து விடுதலை. ஆகிய கொள் கைகள்தான் திராவிட முன்னேற்ற கழகத் தின் கோட்பாடுகள் ஆகும் என்றும், இத் தனை ஆண்டுகளிலும் நான் அறிந்த தலை வர், தெரிந்த தலைவர், பார்த்த தலைவர் இவர் ஒருவர்தான். வேறு தலைவரின் தலைமையில் நான் வேலை செய்தது கிடையாது. செய்யவும் மனம் வந்ததில்லை, வராது. அதே காரணத்தினால் தான் திரா விட முன்னேற்ற கழகத்திலும் கூட தலை வரை ஏற்படுத்தவில்லை. அவசியம் என்றும் கருதவில்லை. இதயப்பூர்வமான தலைவர். இதயத்திலே குடியேறிய தலை வர். நமக்கெல்லாம் அப்போது நல்வழி காட்டிய பெரியார் அமர்ந்த பீடத்தை, தலை வர் பதவியை, நாற்காலியை காலியாகவே வைத்திருக்கிறோம். அந்தப் பீடத்தில் நாற்காலியிவே வேறு ஆட்களை அமர்த்த வும் அல்லது நாங்களோ அல்லது நானோ அமரவோ விரும்பவில்லை.
நான்
மிக தெளிவாகவே கூறி இருக்கிறேன். திராவிட முன்னேற்ற கழகம் எந்த விதத்திலும் திராவிடர் கழகத்திற்கு எதிரானதல்ல. எதிர்நோக்கம் கொண்டதும் அல்ல. கொள்கை ஒன்றே; கோட்பாடும் ஒன்றே என்று பேசினார். அண்ணா பிரிந்தார்; அல்லது பிரிந்தது போல நடித்தார். 18 ஆண்டுகள் உருண்டோடியதாக காலண் டர் கணக்கு காட்டியது. பிரிந்த நேரத்திலும் பிஸ்கெட் கொடுத்தார் பெரியார். அண் ணாவை வேனில் ஏற்றிக்கொண்டார். சளைத்தவரா அண்ணா? சட்டமன்றத்தில் பெரியாரின் பெருமையை விரித்துரைத்தார்.
பெரியாரை
பற்றி அண்ணாவைப் போல எவராலும் சொல்லோவியம் தீட்டி விடமுடியாது. அண்ணா பயன்படுத்திய ஒரு சொல்லைக்கூட எடுத்துவிட்டு வேறு சொல்லை அமைத்திட முடியாது. சிலிர்க்க வைக்கும் சொல்லாட்சி; சொல்லாட்சியில் பொங்கி ததும்பும் உவமை. உருவகம். உவமை உருவகத்தில் கொள்ளைக் கொள் ளும் கலைநயம்; கலை நயத்தில் பிரவாக மெடுக்கும் உணர்ச்சி; உணர்ச்சியில் புதைந்து கிடக்கும் கருத்தாழம்¢ யாவும் சிந்தனைக்கு விருந்து.
பெரியாரின்
பெரும்பணி ‘ஒரு சகாப்தம் - ஒரு காலகட்டம் - ஒரு திருப்பம்‘
நான்
கல்லூரியிலிருந்து வெளியேறி பெரியாருடன் காடுமேடு பல சுற்றிவந்த நாட்கள்தான்
என் வாழ்வின் “வசந்தகாலம்“
முதல்
கூட்டத்திற்குக் கல்லைக் கொண்டு வந்தவன் அடுத்த கூட்டத்திற்கு மாலை வாங்கி வருவான்.
நான்
கண்டதும் கொண்டதும் அந்த ஒரே தலைவரைத் தான்.
இவர்
பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா?
நான்
அறிந்தவரையில், இத்தனை மகத் தான வெற்றி வேறு எந்த சமூக சீர்திருத்த வாதியும் தமது வாழ்நாளிலே பெற்றதில்லை.
இரண்டு
நூற்றாண்டுகளில் செய்ய வேண்டிய காரியங்களை பெரியார் அவர்கள் இருபதே ஆண்டுகளில் செய்து முடிக்க வேண்டுமென கிளம்பினார்கள்.
பெரியார்
அவர்களிடத்தில் இருந்து பிறந்த அறிவுக்கணை, எந்த லட்சியத்தை அடைய வேண்டுமோ அதை அடைந்தே தீரும்.
பெரியார்
எதிரில் உள்ள படையை மட்டுமல்ல; முதலிலே அப்படைக்கு எங்கே மூல பலம் இருக்கிறது என்று கண்டுபிடித்து அந்த மூலத்தைத் தாக்குவதுதான் அவரு டைய போர் முறையாகும்.
அடடா!
யாருக்கு வரும் கருத்து வளம்; அழகு நடை; துல்லியமான படப்பிடிப்பு; தலைவனை நேசிக்கும் பாசம்.
1967 பிப்ரவரியில்
சட்டமன்றத் தேர்தல். காமராஜரின் வெற்றிக்காக, காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக பெரியார் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். காங்கிரஸ் தோல் விக்கான அத்தனை ஏற்பாடுகளையும் கச்சிதமாக செய்தார் பக்தவச்சலம். தேர்தல் களம் சூடு பிடித்தது. பெரியாரும் அண்ணா வும் எதிரெதிர் அணியில் வாக்குப் பெட்டி திறக்கப்பட்டது. ஒவ்வொரு வாக்குச் சீட்டி லும் உதயசூரியனுக்கே முத்திரை.
வாக்களித்தோர்
- 1,53,10,702, திமு கழகம் பெற்ற வாக்கு - 80,51,437, காங்கிரஸ் பெற்ற வாக்கு - 62,93,378, திமுக பெற்ற தொகுதி -137, காங்கிரஸ் பெற்ற தொகுதி - 51, திமுக கூட்டணி 51 சதவீத வாக்குகளையும், காங் கிரஸ் 41 சதவீத வாக்குகளையும் பெற்றன.
திமுக
வென்றது. பெரியாரை சந்திக்க அண்ணா புறப்படுகின்றார். அண்ணா இருப்பது சென்னையில்; பெரியார் இருப் பது திருச்சியில் அண்ணாவின் உள்ளம் அறியாத தம்பி ஒருவர் கேட்கிறார், “சென்னை வந்த பின்பு பார்க்கக் கூடாதா? திருச்சிக்குச் சென்று பார்ப்பதற்கு என்ன அவசரம்?
அண்ணா
ஆத்திரப்படாமல் பதில் உரைக்கிறார். “என்னை இந்த நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவரே அவர்தான். முதல மைச்சர் ஆனதும் அவரை நான் பார்க்கா விட்டால், அது மனிதப் பண்பே ஆகாது” என்று பண்பாட்டு பாடம் நடத்தினார்.
18 ஆண்டுகளுக்குப்
பின் தலைவன் - தளபதி; தந்தை - தனயன் சந்திப்பு நடந்தது. “என்னை கூச்சப்பட வைத்துவிட்டீர்கள்” தழுதழுத்தக் குரலில் கூறுகிறார் பெரியார்.
அண்ணா
மாப்பிள்ளை போல் வந்தார். நான் வெட்கப்பட்ட மணப்பெண் மாதிரி தலையை குனிந்து கொண்டிருந்தேன் என்கிறார் பெரியார்.
அண்ணா
அரியணை ஏறிவிட்டார். தேனிலவு முடிந்தது அறிவித்துவிட்டார் ராஜகோபாலாச்சாரியார். அண்ணாவின் உள்ளத்தில் ததும்பி வழிந்தது அய்யாவின் சிந்தனைகள். பெரியாரின் கருத்துக்களுக்கு சட்ட வடிவம் கொடுக்க வேண்டும் என்ற துடிப்பு. அண்ணா முதலமைச்சராய் பதவி வகித்தது 23 மாதங்கள் மட்டுமே. பம்பரமாய்ச் செயல்படுகிறார். ‘சென்னை மாகாணம் - மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்த பெருமைக்குரியவர் அண்ணா. 1927ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு என்று குரல் கொடுத்து வந்தவர் பெரியார்.
“திராவிடத்தை
அல்லது தமிழ்நாட்டை விட்டு ஆந்திரர், கர்நாடகர், மலையாளிகள் பிரிந்து போன பின்பு கூட மீதியுள்ள - யாருடைய ஆட்சேபனைக்கும் இட மில்லாத தமிழகத்திற்குத்
தமிழ்நாடு என்ற பெயர்கூட இருக்கக் கூடாதென்று பார்ப் பானும் வடநாட்டானும் சூழ்ச்சி செய்து இப்போது அந்த பெயரையே மறைத்து, ஒழித்துப் பிரிவினையில் ‘சென்னை நாடு’ என்று பெயர் கொடுத்திருப்பதாக தெரிகிறது”.
“இது
சகிக்கமுடியாத மாபெரும் அக்கிர மம் ஆகும். எந்தத் தமிழனும் அவன் எப்படிப்பட்ட தமிழன் ஆனாலும் இந்த அக்கிரமத்தைச் சகித்துக் கொண்டிருக்க மாட்டான் என்றே கருதுகிறேன். அப்படி யார் சகித்துக் கொண்டிருந்தாலும் என்னால் சகித்து கொண்டிருக்க முடியாது, என்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன்.
“தமிழ்,
தமிழ்நாடு என்கின்ற பெயர் கூட இந்நாட்டுக்கு, சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றுவிட்டார்கள் என்கிற நிலைமை ஏற்பட்டுவிடுமானால், பிறகு என்னுடையவோ, எனது கழகத்தினுடை யவோ, என்னைப் பின்பற்றும் நண்பர்களு டையவோ வாழ்வு வேறு எதற்காக இருக்க வேண்டும்? என்று எனக்கு தோன்ற வில்லை” என்று கொதித்த பெரியாரின் கனவை நனவாக்கிடும் வகையில் அண்ணா பதவி ஏற்றவுடன் 1968 ஜூலை 18ஆம் நாள் சட்டமன்றத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகளிலும், ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
1928ஆம்
ஆண்டு அருப்புக்கோட்டை சுக்கில நத்தத்தில் முதல் சுயமரியாதை திருமணம் நடைபெறுகிறது. தொடர்ந்து நாடு முழுவதும் சுயமரியாதை திருமணங் கள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற ஜஸ்டிஸ் சத்தியநாராயண ராவ், ஜஸ்டிஸ் பி.ராஜகோபால் அய்சி.எஸ் ‘பெஞ்ச்‘ 26.8.1953 அன்று தீர்ப்பு வழங்கியது. ஆனா லும் பெரியாரின் தொண்டர்கள் சட்டத் தைப் பற்றிக் கவலைப்படாமல் பண்பாட்டுப் புரட்சியைத் தொடர்ந்தனர். சுயமரியாதை திருமணம் என்பதை வெறும் திருமணமாக கருதிட முடியாது. அது அய்ந்து தத்துவங்களை உள்ளடக்கியது.
1) மனிதனுக்கு
உயிரை விட மானம் பெரிது. 2) ஜாதி ஒழிப்பு, 3)ஆணுக்கு பெண் சமம், 4) சடங்குகள் ஒழிப்பு, 4) மூடநம்பிக்கை ஒழிப்பு
இவ்வளவையும்
உள்ளடக்கிய சுயமரி யாதை திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீ காரம் இல்லை எனும் கொடுமையை மாற்றியவர் அண்ணா. 1967ஆம் ஆண்டு நவம்பர் 27 அன்று சட்டமன்றத்தில் இந்து திருமணச் சட்ட மசோதாவை தாக்கல் செய்வதற்கு மூன் தந்தை பெரியாரிடம் காட்டி இசைவை பெற்றார். திருத்தம் பெற்றார். சுயமரியாதைத் திருமணச் சட்டத் திற்கு 1968 ஜனவரி 17 அன்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் தருகிறார். 20.1.1968 அன்று சென்னை அரசிதழில் வெளியிடப் பட்டது.
தமிழ்நாட்டில்
இந்திக்கு இடமில்லை 1926ஆம் ஆண்டே “இந்தியின் ரகசியம்‘ எனும் தலைப்பில் கட்டுரை தீட்டியவர் பெரியார்.
1937ஆம் ஆண்டு ராஜகோபா லாச்சாரியார் முதலமைச்சரானவுடன் இந் தியைத் திணித்தார். பெரியார் தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போர் 1938, 1939, 1948.
1952, 1953, 1954, 1955 என்ற
நீண்ட வரலாறு உடையது. அண்ணா முதல்வரானவுடன் 1968 ஜனவரி 23 அன்று சட்டமன்றத்தில் இருமொழிக் கொள்கையை அறிவித்து இந்தியை விரட்டினார்.
அண்ணா
முதலமைச்சரானார். அரிய ணையில் அண்ணாவின் உருவம் - செய லாக்கத்தில் அய்யாவின் கொள்கை. காலத் தால் அழியாத வரலாற்றுச் சாதனை நிகழ்த் திய தலைமகன் முதல்வர் பொறுப்பேற்ற இந்நாள் (மார்ச் 6) மகிழ்ச்சித் திருநாள்.
No comments:
Post a Comment