விவசாயிகளுக்கு ஆதரவாக பதிவிட்ட ட்விட்டர் கணக்குகள் முடக்கம்
புதுடில்லி. பிப்.2 டில்லியின் எல்லைகளில் இரண்டு மாதங்களுக்கு மேலாகப் போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க பல்வேறு சூழ்ச்சிகளில் மத்திய மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. இவற்றையெல்லாம் கடந்து ஜனநாயக முறையில் அமைதி வழி யில் பொது மக்களுக்கு எவ்வித பங்கமும் விளைவிக்காமல் விவசா யிகள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக பிப்ரவரி 6 ஆம் தேதி நாடு முழுவதும் முக்கிய சாலைகளில் டிராக்டர்களை நிறுத்தி போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர். அன்றைய தினம் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.
இதனிடையே போராட்டம் நடைபெறும் இடங்களில் குடிநீர் முழுமையாக நிறுத்தப்பட்டிருப்பதாகவும், கழிவறை போன்ற வசதிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் அடிப் படையில் விவசாயிகள் போராட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்ட 250 ட்விட்டர் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கி இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமல்லாமல், விவசாயிகள் போராட்டத்தை தடுக்க முள் வேலி தடுப்புகள் போடப்பட்டு பல அடுக்கு காவலர்கள் காசிபூர், சிங்கு உள்ளிட்ட போராட்ட இடங்களில் நிறுத்தப்பட் டுள்ளனர். அதே போன்று தேசிய நெடுஞ்சாலையின் நடுவே விவசாயிகளைத் தடுக்க காங்கிரீட் தடுப்புச் சுவர்களும் எழுப்பப்பட்டு வருகின்றன.
இதனிடையே கைது செய்யப்பட்ட 120 விவசாயிகளை உடனடியாக விடுவிக்கக்கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் விவ சாயிகள் தரப்பில் பொதுநல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது. இது விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment