ஒரத்தநாடு, பிப். 1- தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், கண்ணுகுடி பெரியார் பெருந்தொண்டர் சா.தண் டாயுதபாணி அவர்கள் 26-01-2021 அன்று இரவு உடல்நலக்குறைவால் தஞ்சை இராஜராஜசோழன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் மறை வுற்றார்.
செய்தி அறிந்து கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேக ரன், காப்பாளர் வெ.ஜெயராமன், மண்டலதலைவர் மு. அய்யனார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாவட்டச் செயலாளர் அ.அருண கிரி, கிராம பிரச்சாரகுழு அமைப் பாளர் முனைவர் அதிரடி.க.அன் பழகன், மாநில பக துணைத்தலைவர் கோபு. பழனிவேல், மாவட்ட ப.க தலைவர் ந. காமராஜ், மண்டல மகளி ரணி செயலாளர் அ.கலைச்செல்வி, ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் ஆ.லெட்சுமணன், ஒரத்தநாடு ஒன்றிய மகளிரணி தலைவர் அல்லிராணி , மாநகர அமைப்பாளர் செ. தமிழ் செல்வன், கரந்தை பகுதி செயலாளர் டேவிட், திருவையாறு ஒன்றியத்தலை வர் ச. கண்ணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக் குமார் உள்ளிட்டகழகப் பொறுப்பா ளர்கள், தோழர்கள், உறவினர்கள், நண்பர்கள் பெருந்திரளாக வருகை தந்து இறுதி மரியாதை செலுத்தி அவரை இழந்து பெரிதும் துயரில் இருந்த அவரது வாழ்விணையர் வள்ளியம்மை அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
அய்யா அவர்கள் மறைவை ஒட்டி கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் சு.முருகேசன், ஒரத்தநாடு ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன், மாவட்ட செயலாளர் அ. அருணகிரி, மாவட்டத் தலைவர் சி. அமர்சிங் ஆகியோர் இரங்கலுரை யாற்றினார்கள்.
பெரியார் பெருந்தொண்டர் மறைவை ஒட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விடுதலையில் வெளியிட்ட இரங்கல் அறிக்கையை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் வாசித்து இரங்கலுரை யாற்றினார்.
மறைந்த தண்டாயுதபாணி அவர்கள் விருப்பப்படி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆராய்சிக்கு பயன்படும் வகையில் 27-01-2021 அன்று மதியம் 2 மணியளவில் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவர்களிடம் உடற்கொடையாக கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநகர தலைவர் பா. நரேந்திரன், மாநகர செயலாளர் சு.முருகேசன், ஒரத்தநாடு ஒன்றிய துனைத் தலைவர் இரா.துரைராசு, மாவட்ட இளைஞரணி தலைவர் ரெ.சுப்ரமணியன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர் பாண்டியன், அய்யா அவர்களின் மகன் கள் த.அருண், த. ராஜேஷ் உள்ளிட்ட குடும்பத்தினர் ஒப்படைத்தனர்.
உடலை பெற்றுக்கொண்ட மருத் துவர்கள் அதற்கான சான்றிதழை வழங்கி நன்றி தெரிவித்தனர்.
No comments:
Post a Comment