பிரகாஷ்காரத் குற்றச்சாட்டு
திண்டுக்கல்,
பிப்.28- தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை. எனவே, அதிமுகவை கருவியாகப் பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கிறது, என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பேசினார்.
திண்டுக்கல்லில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் நிதிய ளிப்பு மற்றும் பிரச்சார துவக்க மாநாடு நேற்று (27.2.2021)நடைபெற்றது. திண் டுக்கல் மாவட்டச் செயலாளர் சச்சி தானந்தம் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில்
பிரகாஷ் காரத் பேசியதாவது:
மத்திய
அரசு ஆர்எஸ்எஸ்., கட்டுப் பாட்டில் உள்ளது. இந்தியாவை ஒரே கட்சி ஆட்சி செய்யவேண்டும் என ஆர்எஸ்எஸ் நினைக்கிறது.
இந்தியாவின் உண்மையான குடியரசை மாற்ற நினைக் கிறது பாரதிய ஜனதா அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைத் தளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சிறையில் அடைத் துள்ளது. இந்தியாவில் எதிர்க்கட்சிகளே இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் பாரதிய ஜனதா உள்ளது.
மிகப்பெரிய
தொழிலதிபர்களுக்கு ஆதரவாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. ஏழை, எளிய, சாமானிய மக்களை கண்டுகொள்வதில்லை. பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பது பின்னர் அதை மூடிவிடுவது என செயல்பட்டுவருகிறது.
வேளாண்
சட்டங்களை ஆதரித்து அதிமுக அரசு வாக்களித்தது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆளும் கேர ளாவில் இந்த சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொழிலாளர்களுக்கு
எதிரான சட் டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் அதானி, அம்பானி ஆகிய பெரும்முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ளது. இதை எதிர்த்து தொழிலாளர்களுக்காக போராடும் கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது.
நடைபெறவுள்ள
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக எண்ணிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப் பினர்கள் சட்டப்பேரவைக்குச் செல்ல வேண்டும்.
பாரதிய
ஜனதா அரசு இந்துத்துவா மற்றும் கார்ப்பரேட்களுக்கான அரசாக உள்ளது. மக்களின் அனைத்து உரிமை களையும் போராடிப் பெற்றுத்தரும் கட்சியாக இடதுசாரி கட்சி உள்ளது.
தமிழகத்தில்
பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை. எனவே அதிமுகவைக் கருவி யாகப் பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கிறது பாரதிய ஜனதா கட்சி.
நமக்கும்
அதிமுகவிற்கும் நேரடி போட்டி கிடையாது. பாரதிய ஜனதா கட்சியுடன் தான் நேரடி போட்டி. அதிமுகவின் பின்னால் நின்று பாரதிய ஜனதா தேர்தலை சந்திக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் அடிமை அரசாக அதிமுக செயல்படுகிறது.
அதிமுக
சுயமாக அரசு நடத்த வில்லை. திரைக்கு பின்னால் இருந்து பா.ஜ., இயக்கி
வருகிறது, என்றார்.
No comments:
Post a Comment