திருப்பத்தூர், பிப். 3- திருப்பத்தூர் மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் முரட்டுச் சுயமரியா தைக்காரர் - சுயமரியாதைச் சுட ரொளி கே.கே.சின்னராசு 27 ஆவது ஆண்டு நினைவுநாள் - திராவிடம் வெல்லும் சிறப்புக் கூட்டம் 30.01.2021 அன்று மாலை 6 மணிக்கு ஆனந்தன் சாந்தி திரு மண மண்டபத்தில் தொடர்ந்து நடைபெற்றது.
சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழக மாநில துணை அமைப்பாளர் இ.பூவிழி வரவேற் புரையாற்றினார். திராவிட மாண வர் கழக மாநில துணைச் செயலா ளர் சி.எ.சிற்றரசு தலைமை வகித் தார். திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர். இரா.செந் தூர்பாண்டியன் தொடக்கவுரை யாற்றினார். மருத்துவக்கல்லூரி திராவிட மாணவர் கழக மாநில துணை அமைப்பாளர் சு.நாத்தி கன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சி.தமிழ்ச்செல்வன், கவிஞர் சோலை இசைக்குயில், அன்பழகன், ஜோதி, அன்பு, மாவட்ட ம.தி.மு.க செயலாளர் வ.கண்ணதாசன், வேலூர் மாவட்ட மகளிரணி தலைவர் ச.ஈஸ்வரி, கிருட்டினகிரி மாவட்ட மகளிரணி தலைவர், இந்திரா காந்தி, மாநில ப.க.துணைத்தலைவர் அண்ணா .சரவணன் ஆகியோர் உரையாற்றினர். தனது தந்தையார் கே.கே.சின்னராசு அவர்கள் கையில் விடுதலை இருக்கும், சட் டையில் கடவுளை மற! மனிதனை நினை என்ற வில்லை இருக்கும், அவரது உடல்நிலை பாதிக்கப் பட்டபோது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் புகழ்வாய்ந்த மருத்துவர் தெய்வநாயகம் போன் றோரிடம் மருத்துவம் பார்க்கச் செய்ததோடு மறைவுற்ற நேரத்தில் எங்கள் குடும்பத்தினர் அனைவருக் கும் ஆறுதல் கூறி தேற்றினார் தமி ழர் தலைவர். முக்கியமாக முரட்டு சுயமரியாதைக்காரர் என்று விடு தலையில் இரங்கல் அறிக்கையில் எழுதினார் தமிழர் தலைவர் அவர்கள் என்று கண்ணீர் மல்க உரையாற்றினார்.
மாவட்டத் தலைவர் கே.சி.எழி லரசனைத் தொடர்ந்து திராவிடம் வெல்லும் என்ற தலைப்பில் கழகச் சொற்பொழிவாளர் இரா. பெரி யார் செல்வன் சிறப்புரையாற்றி னார். நிறைவாக தே.பழனிச்சாமி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் காமராசர் நூற் றாண்டுக் குழுதலைவர் கணேஸ் மல், கே.கே.சி. கமலம்மாள் ஆம்பூர் பெ.புரட்சி, தருமபுரி மண்டலத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன் மற் றும் பல்வேறு கட்சிப் பிரமுகர்கள், வர்த்தகப்பெருமக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் வாணியம்பாடி கோ.அன்புச்சேரன் இரண்டு ஆண்டு விடுதலை சந்தா ரூ.3,600 வழங்கினார்.
No comments:
Post a Comment