ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு; அனைத்து கல்லூரிகளும் 8ஆம் தேதி திறப்பு : 9, 11ஆம் வகுப்புகளுக்கும் அனுமதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 1, 2021

ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு; அனைத்து கல்லூரிகளும் 8ஆம் தேதி திறப்பு : 9, 11ஆம் வகுப்புகளுக்கும் அனுமதி

சென்னை, பிப்.1 தமிழகத்தில் கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல் உள்ளிட்ட அனைத்து வகை கல்லூரிகளும், விடுதிகளும் 8ஆம் தேதி முதல் செயல்படலாம். அதே போல 9ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளும் செயல்படலாம் என்று அரசு அறிவித்துள்ளது. பெட்ரோல் பங்க்குகள் நேரக்கட்டுப்பாடு இன்றி திறந்து இருக்கலாம். கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் 50 சத வீத இருக்கைகளில் பார்வையாளர் களை அனுமதிக்கலாம் என்பன உள் பட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளன.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக 31ஆம் தேதி முடிய தமிழ்நாடு முழுவதும் தற் போதுள்ள பொது ஊரடங்கு உத் தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன், பிப்ரவரி 28ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய்த் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப் பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல் வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப் படுகிறது:

*  கலை, அறிவியில், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன் வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான (பட்டயப் படிப்பு உட்பட) அனைத்து வகுப்புகளும் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர் களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

* பள்ளிகள் (9 மற்றும் 11ஆம் வகுப்புகள் மட்டும்) பிப்ரவரி 8ஆம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர் களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

* இரவு 10.00 மணி முடிய செயல் பட அனுமதிக்கப்பட்டுள்ள பெட் ரோல் பங்க்குகள், நேரக் கட்டுப் பாடின்றி இயங்க அனுமதிக்கப்படு கின்றன.

 * உள் அரங்கங்களில் மட்டும் அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 600 நபர்கள் பங்கேற்கும் வகையில் மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை தொடர் பான கூட்டங்கள், இன்று முதல், நடத்த அனுமதிக்கப் படுகின்றன. திறந்தவெளியில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை பொறுத்தவரையில் அதிகபட்சம் 50 சதவிகித இருக்கை களுடன் நடத்த ஏற்கனவே அனுமதிக் கப்பட்ட நடைமுறை தொடரும்.

No comments:

Post a Comment