சென்னை, பிப். 5- தமிழக சட்டப்பேரவையில் நேற்று (4.2.2021) உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிமுகம் செய்த சட்ட மசோதாவில் கூறப்பட்டிருப் பதாவது: மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவ தற்கு உள்ளாட்சி அமைப்பு களின் வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வாக்குச்சாவடி களை அடையாளம் காணு தல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கையாளுவ தற்கு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் நடவடிக்கையை மாநில ஆணையம் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாலும், இன்னும் சில கட்டுப்பாடும் இப்போதும் நடைமுறையில் இருப்பதால் சாதாரண தேர்தல்களை நடத் துவதற்கான முன்னேற்பா டான பணிகளை முடிக்க முடியவில்லை.
மேலும், மறுசீரமைக்கப் பட்ட 9 மாவட்டங்களில் பழங்குடியினர், பெண்களுக் கான இட ஒதுக்கீடானது இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது.எனவே மாநில தேர்தல் ஆணையம் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கு போதிய கால அவகாசம் தேவைப்படு கிறது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படியும், தனி அலு வலரின் பதவிக்காலம் டிசம் பர் 31ஆம் தேதியுடன் முடி வடைந்ததால் தனி அலுவ லரின் பதவிக் காலத்தை ஜூன் 30 வரையில் ஆறு மாதம் நீட்டிப்பு செய்வதற் கான சட்ட மசோதா பேரவை யில் தாக்கல் செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment