தி.மு.க. தலைவர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், அறிஞர் அண்ணா அவர்களின் 52-ஆவது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை - வாலாஜா சாலையில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் இருந்து அமைதிப் பேரணிக்குத் தலைமை ஏற்றுச் சென்று, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தியதோடு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். (03-02-2021)
முகநூல் பதிவு: தளபதி மு.க.ஸ்டாலின் முகநூலில் பதிவிட்டுள்ளதாவது: தந்தை பெரியாரின் தனயன் - முத்தமிழறிஞர் கலைஞரின், தாய்த்தமிழ்நாட்டின் அண்ணன் - பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவுநாள் இன்று! அவரை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு? மொழி - இனம் - நாடு காக்கும் உரிமை உணர்வு கொண்ட அண்ணாவின் ஆட்சியை மூன்று மாதங்களில் அமைப்போம்! உறுதியேற்கிறோம் இன்று!
No comments:
Post a Comment