மூன்று வேளாண் சட்டங்கள் 2020 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 27, 2021

மூன்று வேளாண் சட்டங்கள் 2020

முதற்கோணல் முற்றிலும் கோணல் - சட்டங்களை திரும்பப் பெறுவதே சரியானது

 வீ.குமரேசன்

மத்தியில் ஆளும் பா... தலைமை யிலான அரசு, கரோனா தொற்றுக் காலத்தில், செய்து முடிக்கவேண்டிய பணிகள் ஏராள மாக இருந்தும், மூன்று வேளாண் அவசரச் சட்டங்களை (ordinances) ஜூன் 2020இல் பிறப்பித்தது.

அவசரச் சட்டங்களின் தேவை குறித்து கோரிக்கை எதுவும் விவசாய அமைப்பினரி டமிருந்தோ அல்லது விவசாயத்தின் மீது அக்கறையுள்ளோரிடமிருந்தோ அரசுக்கு வரவில்லை. இருப்பினும் பா..அரசு முன்னு ரிமை அளித்து பெயருக்கு ஏற்ற வகையில் அவசரச் சட்டங்களை அவசரமாக கொண்டு வந்தது.

கரோனா தொற்றுக் காலத்தில் பிறப்பிக் கப்பட்ட அவசரச் சட்டங்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு பல வகையிலும் எதிர்ப்புகள் மத்திய அரசின ருக்கு தெரிவிக்கப்பட்டன. இந்த அவசரச் சட்டங்களால் விவசாயிகளுக்கு, விவசாயத் தொழிலுக்கு ஏற்படவிருக்கும் முன்னெப் போதும் ஏற்படாத ஆபத்து குறித்து எழுதியும் பேசியும் வந்த நிலையில் அவைகளை யெல்லாம் மத்திய அரசு பொருட்படுத்த வில்லை.

தமக்கு நாடாளுமன்ற மக்களவையில் உள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி சட்ட மசோதாவை மத்திய பா..அரசு தாக்கல் செய்தது. எதிர்க்கட்சிகள் விவாதிக்க உரிய அவகாசம் அளிக்காமல் தெரிவுக் குழுவுக்கு  மசோதாவை அனுப்பிட வேண்டி எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டதையும் தவிர்த்து அவசர அவசரமாக மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் விவாதிக்க உரிய வாய்ப்பு அளிக்கப்படாமல், மசோதா நிறை வேற்றிட வாக்கெடுப்புக்கு விடவேண்டும் என கோரிக்கை எழுந்ததையும் பொருட் படுத்தாமல், குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டதாக அவைத் தலைவரால் அறிவிக்கப்பட்டது. நிறை வேற்றப்பட்ட மசோதா அதே அவசரகதியில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமையிலும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததே, வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்த அவசரத்தை காட்டுவதாக இருந்தன. சட்டங்களை நிறை வேற்றுவது பற்றிய முடிவு மத்திய அமைச் சரவையால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மசோ தாக்கள் மக்களவையிலும், மாநிலங்கவை யிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப் பட்டதாக அறிவிக்கப்பட்டு, குடியரசுத் தலை வரின் ஒப்புதலைப் பெறுவது-என அத் துணை நடவடிக்கைகளும் ஒரு வார காலத் தில் முடிந்தன. மத்திய அரசு வேளாண் சட் டங்களை அவசரமாக இயற்றியது யாருக் காக? நிச்சயம் விவசாயிகளுக்கு அல்ல; பத வியில் உள்ளபொழுதே, கரோனா தொற்றுக் காலத்தில் எதிர்ப்பு பரந்துபட்டு எழாது என் பதை அனுகூலமாகக் கொண்டு வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த மத்திய பா... அரசு முனைந்தது.

இந்தச் சட்டங்களால் தங்களுக்கு எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை; கிடைக் கின்ற சில பயன்களும் தடைப்பட்டு விடும் என்ற பேராபத்தை உணர்ந்த வடபுலத்து விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் களம் இறங்கி, தலைநகர் டில்லியின் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து போராடி வருகின்ற னர். 94-ஆம் நாளாக தொடர்ந்து நடை பெற்று வரும்  விவசாயிகளின் போராட்டத் தில் வன்முறையானது எந்த வகையிலும் எழாதவாறு அமைதியாக போராட்டம் நடை பெற்றுவருகிறது. விவசாயிகள் தங்களுடைய கோரிக்கை மீது எந்த திசைதிருப்பும் செயலும் ஊடுருவ முடியாதவாறு எச்சரிக்கையுடன் போராடி வருகின்றனர்.

இதர மாநிலங்களிலிருந்து தங்களது ஆத ரவினைத் தெரிவித்தும், விவசாய சங்கங் களின் பிரதிநிதிகளை போராட்டத்திற்கு அனுப்பியும் பிற மாநில விவசாயிகளும் போராட்டக் களத்தில் இணைந்துள்ளனர். போராடி வரும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து 11 முறை மத்திய வேளாண் அமைச்சர் பேச்சு வார்த்தை நடத் தியும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.

காரணம் சட்டம் இயற்றிய அடிப்படையே தவறு. உரியவர்களிடமிருந்து கருத்துப் பெறாமல், ஆலோசனையினையும் நடத் தாமல், தனக்கு அதிகாரம் இருப்பதாகக் கருதி மத்திய அரசு செயல்பட்டுள்ளது.

இதனை சரியாக உணர்ந்து போராடிவரும் விவசாயிகள், வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெறுவது தவிர எந்த நிலைப்பாட் டிற்கும் தயாராக இல்லை. பேச்சு வார்த்தை நடைபெறும் பொழுது சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் விட்டுக் கொடுத்து முடிவு காண் பது இயல்பாக - நியாயமாகத் தோன்றலாம். போராடி வரும் விவசாயிகள் தங்களது கோரிக்கையான வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றே ஆகவேண்டும் என்பது பொதுவெளியில் பிடிவாதமாகத் தோன்ற லாம்.

இருதரப்பிலும் விட்டுக் கொடுக்க வேண் டும் என பொதுவெளி விரும்பிகள் கருதலாம். வேளாண் சட்டங்களை இயற்றியதே தவறு; தவறான சட்டத்தில் விட்டுக் கொடுத்து பேச்சு வார்த்தை நடத்துவது வீணானது. தவறான அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்கள் மீது விட்டுக் கொடுப்பது, சட்டங்களில் உள்ள விதிகளை மாற்றுவது என்ற நிலைப்பாடே பொருளற்றதாகிவிடும். இந்த நிலைப்பாடே, சட்டங்களைத் திரும்பப் பெறுவதை நியாய மாக்குகிறது.

அப்படி சட்டம் இயற்றியதில் என்ன தவறு? அதிகார மீறல் உள்ளதா? என்பது விரிவாக பொதுவெளியில் விவாதிக்கப்பட வில்லை. வேளாண் சட்டங்கள் ஏற்படுத்திட உள்ள பாதிப்புகள் மட்டுமே அதிகமாகப் பேசப்படுகின்றன. வரஇருக்கின்ற பேராபத்து அதிகம் பேசப்பட வேண்டும்; உண்மை நிலை அனைவருக்கும் புரிய வேண்டும் என்பது முன்னுரிமை பெற்றதே. இருப்பினும் சட்ட அடிப்படையே தவறு என்பது குறித்தும் பொதுவெளியில் தெரிய வேண்டும். இந்தத் தேவையைக் கருதி திராவிடர் கழக (இயக்க) வெளியீடாக தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் அண்மையில் வெளிவந்துள்ளன.

தமிழில்இந்தியக் கூட்டாட்சி முறையைத் தகர்த்திடும் மூன்று வேளாண் சட்டங்கள் 2020’ மற்றும் ஆங்கிலத்தில்  'Agriculture Acts 2020 - Demolition of Federal Structure of India'' எனும் தலைப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி டாக்டர் ஜஸ்டிஸ் .கே. ராஜன் LLD சட்ட நுணுக்கங்களை அலசி ஆராய்ந்து எழுதியுள்ளார்.

கடந்த 20.02.2021-அன்று சென்னை-பெரியார் திடலில் பகுத்தறிவாளர் கழகம் ஏற் பாடு செய்த நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நூல்களை வெளி யிட்டார்கள்.

மத்திய அரசால் இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் பற்றிய மத்திய அரசின் அதிகார வரம்பு, உரிய அரசமைப்புச் சட்டப் பிரிவுகளின் வரலாற்றுப் பின்னணி, சட்ட விதிகள் பற்றிய ஆழ்ந்த விளக்கங்கள் ஆகி யன புத்தகங்களின் உள்ளடக்கங்களாக அமைந்துள்ளன. அந்த வகையில் மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து இப்படிப்பட்ட உள்ளடக்கம் கொண்ட புத்தகங்கள் இதுவரை வெளிவராத நிலையில் டாக்டர் ஜஸ்டிஸ் .கே. ராஜன் எழுதியுள்ள புத்தகங்கள் சிறப் புக்குரியன. ஆழமான விபரங்கள், விளக் கங்கள் அமைந்த மூன்று வேளாண் சட்டங் கள் முதன் முறையாக புத்தகங்களாக வெளி வந்துள்ளன.

மாநில அரசு ஆளும்

அதிகார வரம்பில் வேளாண்மை 

·             நூலாசிரியர், வேளாண்மை குறித்து சட்டம் இயற்றும் அதிகாரம் மாநிலங் களுக்குத்தான் உண்டு என அரசமைப்புச் சட்டத்தின் 7-ஆம் அட்டவணையில் உள்ள மாநிலங்களின் அதிகாரப்பட்டி யலில் உள்ள வேளாண்மை குறித்த பதிவுகளை விரிவாகக் கூறுகிறார்.

·             வேளாண்மை குறித்து இயற்றப்பட வேண்டிய சட்டங்களின் மாதிரிகளைத் தான் இதுவரை மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு பரிந்துரைத்துள்ளது. மத் திய அரசே மாநில அரசின் அதிகாரத்தை தான் எடுத்துக் கொண்டு சட்டம் இயற்றியதில்லை என்பதும் ஒரு முக்கியக் குறிப்பாகும்.

·             மூன்று சட்டங்களில் ஒன்றான அத்தியா வசியப் பொருள்களின் திருத்தச் சட்டத் தின் தொடக்கம் குறித்தே கேள்வி எழுப் பப்படுகிறது. அரசமைப்புச் சட்டம் நடை முறைக்கு வந்த அய்ந்து ஆண்டுகள் மட்டுமே நீட்டிப்பில் இருக்க வேண்டிய 1946-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் ((Essential Supplies (Necessary Powers) Act)) 1955-ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்ட 3-ஆம் திருத்தத்தின் மூலம் மாநில வரம்பில் உள்ள குறித்த அதிகாரம் ஒத்திசைவு பட்டியலுக்கு மாற்றப்பட்டதே மாநில அரசுகளின் அதிகாரத்தை பறித்திடும் செயலாக அமைந்தது. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கே எதிரானதாகும். 1955-களில் மத்தியிலும், மாநிலங்களிலும் ஒரே அரசியல் கட்சி ஆண்ட நிலையில் மாநில அரசின் அதிகாரப் பறிப்பு குறித்து எதிர்ப்புக் குரல் வெளிக்கிளம்பவில்லை.  அரசமைப்புச் சட்டம் வகுத்துக் கொடுத் துள்ள அதிகார வரம்புப்படி மாநில அரசு கள் இன்று தங்களது உரிமையைக் கோரக் கூடிய நிலைமைகள் உருவாகியுள்ளன.

இந்திய அரசமைப்பு கூட்டாட்சி முறையிலானது:

·             1950 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முன்னோடி 1935-ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டமாகும். அந்த சட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் பிரிட்டிஷாரி டமிருந்து விடுதலை பெற்ற பின்பு உரு வான அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் இந்திய அரசமைப்பு ஒரு கூட்டாட்சி முறையி லானதே, 1935-ஆம் ஆண்டு சட்டத்தில் இடம்பெற்ற கூட்டாட்சி (Federal) என்ற சொல் 1950-ஆம் ஆண்டு இந்திய அரச மைப்புச் சட்டத்தில் மாநிலங்களின் ஒன் றியம் ((Union of States) என குறிப்பிடப் பட்டுள்ளது. அனைத்து அதிகாரங்களும் ஒரே அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒற்றை ஆட்சி (Unitary State) முறை யில் அல்ல; ஆளும் அதிகாரங்களை மத் திய அரசு, மாநில அரசுகள் தனித்தனியே பயன்படுத்தக் கூடிய வகையிலும், சில அதிகாரங்களைப் பொறுத்த அளவில் இரண்டு அரசுகளும் கலந்து பேசி சட்ட மியற்றலாம் என தெளிவாக உள்ளன.

·             மத்திய அரசு இயற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களும் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு கைக் கொண்டு இயற்றப்பட்டுள்ளன. இது அர சமைப்புச் சட்டத்தை மீறிய செயலாகும்.

·             பண்ணை ஒப்பந்தச் சட்டத்தின்படி ஒப் பந்ததாரர்களுள் ஒருவராக, விவசாயிகள் வரக்கூடிய வழியை உருவாக்குகிறது. ஒப்பந்த நிபந்தனை மீறப்பட்டாலோ, ஒப்பந்தம் நிறைவேற்றம் முழுமையடை யாவிட்டாலோ, பாதிக்கப்பட்டவர் நீதி மன்றம் சென்று தீர்வு காண முடியாது. அதிகார வர்க்கத்திடம்தான் முறையிட முடியும். ஒப்பந்தத்தில் பாதிப்படையக் கூடியவர்கள் பெரும்பாலும் விவசாயி களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் நீதிமன்றம் சென்று தீர்வு பெறக் கூடிய வழிமுறை புதிய வேளாண் சட்டத்தால் தடைசெய்யப்படுகிறது. அரசமைப்புச் சட்டம் மக்களாட்சியின் தூண்களான நீதிமன்றங்கள், சட்ட மன்றங்கள், செயல் படுத்திடும் அதிகார அமைப்பு ஆகிய வற்றின் பங்கு பற்றி தெளிவாக வரையறை செய்துள்ளது. ஒன்றின் அதிகார வரம்பை மட்டுப்படுத்துகின்ற வகையிலோ, குறுக் கீடு செய்கின்ற வகையிலோ மற்றவை செயல்படுவது சட்டவிரோதம். அதி காரங்கள் வரன்முறை செய்யப்பட்டு (Separation of Powers) உள்ளன. நீதிமன்றத்தின் செயலை நிர்வாகமுறை மட்டுப்படுத்துகின்ற வகையில் பண்ணை ஒப்பந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இது அரசமைப்புச்சட்ட மீறல் ஆகும். மேலும் ஒவ்வொரு குடிமகனும் தீர்வு வேண்டி நீதிமன்றத்தை அணுகிடும் உரிமை உண்டு. அந்த உரிமையை யாரும் மறுக்க முடியாது; பறிக்கவும் முடியாது. அப்படி பறிக்கின்ற வகையில் மறுக்கின்ற வகையில் பண்ணை ஒப்பந்த சட்டம் அமைந்துள்ளது.

·             இப்படி பல தளங்களிலும் மத்திய அரசு இயற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங் கள் (2020) பற்றி டாக்டர். ஜஸ்டிஸ் .கே. ராஜன் சட்டங்களில் உள்ள பிரிவுகளைக் குறிப்பிட்டு விளக்குகிறார். சட்டம் பயின்ற வழக்குரைஞர்கள், சட்ட நீதி வழங்கிடும் நீதிபதிகளுக்கு நிலைநாட்டும் வகையில் அரசமைப்புச் சட்டம் விளக்கப் பட்டுள்ளது. மொத்தத்தில் அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான - அடிப்படையி லேயே தவறான - முதற்கோணல் முற்றிலும் கோணல் என்கின்ற வகையில் வேளாண் சட்டங்கள் உள்ளன. போராடி வரும் விவசாயிகளின் மய்யக் கோரிக் கையானமூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட வேண்டும்என்பது சட்டபூர்வமாக நியாயமானதுதான் என் பதை சட்டரீதியாக நிரூபிக்கும் வகையில் வேளாண் சட்டங்கள் 2020 பற்றிய புத்தகம் அமைந்துள்ளது. கூடுதலான சட்ட விளக்கங்களும், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் ஆதாரங் களும் புத்தகக் கருத்துகளுக்கு மெரு கூட்டி வலு சேர்க்கின்றன. பொதுநலனில், வேளாண்மை வளர்ச்சியில் ஆர்வம், அக்கறை உள்ளவர்கள் படிப்பதற்கும், பரிந்துரைப்பதற்கும், பரிசளிப்பதற்கும் உகந்த நூல்களாக வெளியிடப்பட்ட நூல் கள் விளங்குகின்றன.

No comments:

Post a Comment