நெல்லை மண்டல கழக கலந்துரையாடல் கூட்டத்தில் வெளியீடு
நெல்லை, பிப்.5 நெல்லை மண்ட லக் கலந்துரையாடல் கூட்டம் 10.01.2021 அன்று காலை 10.30 மணி அளவில் நெல்லை மாவட்டச் செயலாளருக்கு சொந்தமான கீர்த்தி மெட்டல்ஸ் தச்ச நல்லூரில் மண்டல தலைவர் க.காசி தலை மையில் நடைபெற்றது.
தென் மாவட்டப் பிரச்சாரக் குழுச் செயலாளர் டேவிட்.செல் லத்துரை, மாநில திராவிடர் கழக மகளிரணி அமைப்பாளர் கிருஷ் ணேஸ்வரி முன்னிலை வகித்தனர். நெல்லை மாவட்டச் செயலாளர் ச,இராசேந்திரன் வரவேற்புரை ஆற் றினார். இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் மா. பால் ராசேந்திரம், தூத்துக்கு மாவட்ட இளைஞரணி செல்வராசு, பெரியார் மய்யக்காப்பாளர், போசு ஆகியோ ரும் நெல்லை மாவட்டத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் இரா.காசி, மாநகரத் தலைவர் இரத் தினசாமி, பகுத்தறிவாளர் கழகம் பீட்டர், அன்பரசி, பெரியார் பிஞ்சு ஆகாஷ், பெரியார் பெருந்தொண்டர் வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தின் சார்பில், மாவட்டச் செயாளர் கே.வெற்றிவேந்தன், இளைஞரணி அலெக்சாண்டர், மகளிர் பாசறை மஞ்சு, ஒன்றியச் செயலாளர் குமாரதாசு ஆகி யோரும், தென்காசி மாவட்டத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் வீர னும் கலந்து கொண்டனர். தென் மண்டலப் பிரச்சாரக்குழு செய லாளர் டேவிட் செல்லத்துரை தனது உரையில், மாவட்டப் பொறுப்பில் இளைஞர்களைக் கொண்டு வரவேண்டும் என்றும் பெரியவர்கள் உறுதுணையாக இருந்து அவர்களை வழி நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். மண்டல தலைவர் உரையில் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்ட அறிக்கை போட்டு வரவு, செலவு நோட்டு அவசியம் என்றும் மாவட்டக் கூட்டத்தினை மாதம் ஒரு முறை கூட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார். அதில் தான் அவசியம் கலந்து கொள்வேன் என்றும் மண்டலக் கூட்டம் 3 மாதத்திற்கு ஒருமுறை கூட்டப்படும் என்றும் அடுத்த கூட்டம் ஏப்ரல் மாதத்தில் குமரி மாவட்டத்தில் நடைபெறும் எனவும் தெரிவித்தார். மேலும் தென்மாவட்டக் கழகத்தை வலுப் படுத்தவும் உரிய நடவடிக்கைகளை எடுத்து உதவுவதாகவும் தெரிவித்தார். கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் கரோனா காலத்திலும் இடைவிடாத உழைப்பின் மூலம் காணொலிக் காட்சி மூலம் உரை நிகழ்த்தி அனைவரையும் பார்த்து உரையாடிய விதம் பாராட்டுதலுக் கும் போற்றுதலுக்கும் உரியது என வும், இக்கூட்டம் தலைவர் அவர் களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது எனவும் தெரிவித்தார். ச.இராசேந்திரன், நெல்லை மாவட் டச் செயலாளர் நன்றி கூறினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்
1) கரோனா காலத்திலும் தமிழ் தலைவரின் இடைவிடாத கழகப் பணியையும் அயராத உழைப் பினையும் நெல்லை மண்டலக் கலந் துரையாடல் கூட்டம் பாராட்டி நன்றியைத் தெரிவிக்கிறது.
2) நெல்லை மண்டலச் செய லாளர் அய்.இராமச்சந்திரன் இல் லத் திருமணவிழாவில் 17.01.2021இல் அனைவரும் கருஞ்சட்டையுடன் குடும்பத்துடன் கலந்து கொள்வது என முடிவுசெய்யப்பட்டது.
3) மாவட்டக் கூட்டத்தை மாதம் ஒருமுறை கூட்டுவது எனவும் தீர் மானிக்கப்பட்டது.
4) தென்மாவட்டங்களின் வளர்ச்சி குறித்து குறிப்பாக நெல்லை மாவட் டத்தில் இளைஞர்களை சேர்த்து இயக்கத்தை வலுப்படுத்துவது என வும் முடிவு செய்யப்பட்டது.
புத்தகம் வெளியீடு நிகழ்வு
இந்நிகழ்வில் தமிழ்தலைவர் எழுதிய ஒப்பற்ற தலைமை மற்றும் வாழ்வியல் சிந்தனைகள் 15ஆம் பாகம், பேராசிரியர் அருணன் எழு திய ஒரு மார்க்ஸிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம், ‘மயக்க பிஸ் கெட்டு'கள் ஓர் எச்சரிக்கை! ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. இதில் திரராவிட முன்னேற்றக்கழக மருத்துவர் சங்கர், மாநில பேச்சாளர் மூர்த்தி ஆகியோரும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் நிஜாம், விடுதலைக் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செய லாளர் கரிசல் சுரேஷ், தமிழ்ப்புலிகள் கட்சியைச் சார்ந்த மாவட்டச் செயலாளர் கலைக்கண்ணன், மாடத்தி ஆகியோரும் ஆதி தமிழர் பேரவையில் மாவட்டச் செய லாளர் தமிழ ரசும் கலந்து கொண்டு உரையாற்றி நூல்களைப் பெற்றுக் கொண்டனர். அனைவருக்கும் நெல்லை மாவட்ட செயலாளர் ச.இராஜேந்திரன் ஏற்பாட்டில் தென் மாவட்ட பிரச் சாரக்குழு செயலாளர் டேவிட் செல்லத்துரை பயனாடை அணிவித்துக் சிறப் பித்தார்.
No comments:
Post a Comment