புதுடில்லி,பிப்.4- தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் நடத்தப்பட்ட வருடாந்திர தொழிலாளர் ஆய்வின் படி, 15 வயதுக்கு மேற்பட்டோருக்கான பணியாளர் மக்கள் தொகை விகிதம் 51.4 ஆக தமிழ்நாட்டில் உள்ளது. நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) சந்தோஷ்குமார் கங்க்வார் எழுத்து மூலம் அளித்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வேலை வாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்த வருடாந்திர தொழிலாளர் ஆய்வு தேசிய புள்ளி யியல் அலுவலகத்தால் 2017 ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது. 2018-19 ஆம் ஆண்டுக்கான ஆய்வின் படி, 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் நிலவும் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.8 சதவீதமாகும். இந்த அறிக்கையை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் இணையதளத்தில் (https://www.mospi.nic.in) காணலாம்.
கோவிட் பெருந்தொற்றின் காரணமாக அதிக அள விலான இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்காக தற்சார்பு இந்தியா திட்டத்தை அரசு அறிவித்தது.
பிரதமரின் ஏழைகள் நல திட்டத்தின் கீழ், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் தொழிலாளர்களின் பங்கு மற்றும் நிறுவனங்களின் பங்கு ஆகிய இரண்டையுமே 2020 மார்ச் முதல் ஆகஸ்ட் வரை அரசு செலுத்தியது. தகுதி உள்ள 38.82 லட்சம் தொழிலாளர்களின் கணக்கு களில் ரூபாய் 2567.66 கோடி செலுத்தப்பட்டது.
தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் நடத்தப்பட்ட வருடாந்திர தொழிலாளர் ஆய்வின் படி, 15 வயதுக்கு மேற்பட்டோருக்கான பணியாளர் மக்கள் தொகை விகிதம் 51.4 ஆக தமிழ்நாட்டில் உள்ளது.
No comments:
Post a Comment