மதுரை,பிப்.4- உலக புற்றுநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும். அதையொட்டி மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் புற்றுநோய் தின கருத்தரங்கு நடந்தது. அதில் மருத்துவமனையின் புற்றுநோயியல் பிரிவின் துறைத்தலைவர் டாக்டர் கிருஷ்ணகுமார், முதுநிலை மருத்துவ நிபுணர் கிருஷ்ணகுமார் ரத்னம், புற்றுநோயியல் அறுவைசிகிச்சை முதுநிலை மருத்துவ நிபுணர் விஜயபாஸ்கர், புற்று நோயியல் கதிர்வீச்சு பிரிவின் முதுநிலை மருத்துவ நிபுணர் டாக்டர். செல்வகுமார் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
உலக அளவில் ஏற்படும் இறப்புகளில் 6 இல் ஒன்று புற்று நோயால் ஏற்படுகிறது. இந்தியா புற்றுநோய் நோயாளிகள் எண்ணிக்கையில் உலகளாவிய அளவில் 3ஆவது இடத்தில் உள்ளது. மரணங்களுக்கான முதன்மை காரணமாக, இதயநோய்களுக்கு அடுத்து புற்றுநோய்கள் திகழ்கின்றன. ஆண்டுதோறும் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பல்வேறு வகையான புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் சுமார் 8 லட்சம் இறப்புகள் ஏற்படுகின்றன. புற்றுநோய் 4 நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதற்கான சிகிச் சைகளில் அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் கீமோதெரபி ஆகியவைகள் அடங்கியுள்ளன. அதன் மூலம் புற்றுநோயை குணப் படுத்த முடியும். மேலும் சீரான உணவுமுறை, சுறுசுறுப்பான வாழ்க்கை முறை ஆகியவற்றை மேற் கொள்ளுவதாலும், புகைபிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றைக் கைவிடுவதாலும் புற்றுநோயில் இருந்து விடுபடலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment