சென்னை,பிப்.2- தமிழகத் தில் பகுதி நேர ஆசி ரியர்கள் 12ஆயிரத்து 483 பேருக்கு நிபந்தனை களுடன் மாத ஊதியம் ரூ.7,700-லிருந்து ரூ.10,000 ஆக அதிகரித்து வழங்குவதென தமிழக அரசு அறிவித்துள்ளது.
வாரத்தில் மூன்று நாட் கள் முழுவதுமாக பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை யுடன் பகுதி நேர ஆசிரியர் களுக்கான ஊதியம் ரூ.7,700 லிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில், அரசுப் பள்ளி களில் கல்விசார் இணைச் செயல்பாடுகளை பயிற்று விக்கும் பொருட்டு தோற்று விக்கப்பட்ட 12483 பகுதி நேரப் பயிற்றுநர் பணியிடங் களில் தற்போது பணியில் உள்ள 12,483 பகுதி நேர பயிற்றுநர்களுக்கு நிபந்த னைகளுடன் இவர்களது மாத ஊதியம் ரூ.7700-லிருந்து ரூ.10000 ஆக அதி கரித்து வழங்கிட முடிவு செய்துள்ளது. தற்போது பணியில் உள்ள பகுதி நேரப் பயிற்று நர்களை தேவை யுள்ள பள்ளிகளுக்கு மறு ஓதுக்கீடு செய்து, இனிவரும் காலங்களில் வாரத்திற்கு மூன்று முழு நாட்கள் பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும். பகுதி நேரப் பயிற் றுநர்கள் பணி புரியும் சார்ந்த பள்ளி தலைமையாசிரி யர்கள் வழங்கும் கால அட்ட வணையின்படி இவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர்களுக்கு பயிற்று விக்க வேண்டும். இவர்களுக் கான வருகைப் பதிவேடு சார்ந்த தலைமையாசிரிய ரால் முறையாக பராமரிக் கப்பட வேண்டும். இவர் களின் ஊதியம் வருகைப் பதிவேட்டின்படி தலைமை யாசிரியர் மூலமாகவே விடு விக்கப்பட வேண்டும் என் றும் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment