பாஜக ஆளும் 10 மாநிலங்களில் போதிய இரத்த வங்கிகள் கிடையாது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 5, 2021

பாஜக ஆளும் 10 மாநிலங்களில் போதிய இரத்த வங்கிகள் கிடையாது

புதுடில்லி,பிப்.5- மாவட்டத்திற்கு ஒரு இரத்த வங்கியாவது இருக்க வேண்டும் என்ற நிலையில், நாட்டில் 11 மாநிலங்களுக்கு உட்பட்ட 63 மாவட்டங்களில் இரத்த வங்கியே இல்லை என்பதும், இவற்றில் 10 மாநிலங்கள் பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் எழுப்பப் பட்ட கேள்வி ஒன்றுக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அளித்த பதிலில், இந்த உண்மை தெரிய வந்துள்ளது. குஜராத், மத்தியப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், அசாம், இமாசலப் பிரதேசம், அரியானா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் 7 நேரடியாகவும், பீகார், நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களில் கூட்டணியாகவும் பாஜக-தான் ஆட் சியில் உள்ளது.இதில், அருணாச் சலப் பிரதேச மாநிலத்தில் மட்டும் 14 மாவட்டங்களில் இரத்த வங்கிகள் இல்லை. அசாம் மாநிலத்தில் 5 மாவட்டங்களிலும் ரத்த வங்கிகள் கிடையாது. மணிப்பூர் மாநிலத்தில் 12 மாவட்டங்களிலும், மேகாலயா மாநிலத்தில் 7 மாவட்டங்களிலும், நாகாலாந்தில் 9 மாவட்டங்களிலும் ரத்த வங்கிகள் இல்லை. இதேபோல பீகார் மாநிலத்தில் 5 மாவட்டங் களிலும், சத்தீஸ்கர், அரியானா, இமாச்சலப்பிரதேசம் ஆகிய மா நிலங்களில் தலா 1 மாவட்டத்திலும், குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 2 மாவட் டங்களிலும் ரத்த வங்கிகள் இல்லை என்று மத்திய அரசு தனது புள்ளிவிவரத்தில் குறிப்பிட்டுள்ளது. சத்தீஸ்கரில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்தாலும், கடந்த 2 ஆண்டு களுக்கு முன்புவரை பாஜகதான் ஆட்சியில் இருந்தது என்பது குறிப் பிடத்தக்கது.

 

மோடி அரசு 3 ஆண்டுகளில் வாங்கிய கடன் மட்டும்  ரூ. 19 லட்சம் கோடி

திருச்சி சிவா கேள்விக்கு பதில்

புதுடில்லி,பிப்.5- மாநிலங் களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா எழுப்பிய கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனு ராக் தாக்குர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், 2018 முதல் 2020 வரையிலான 3 ஆண்டுகளில் மட் டும் ரூ. 19 லட்சம் கோடி ரூபாய் அள விற்கு மத்திய அரசு  கடன் வாங்கி யுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2018-19 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.1 லட்சத்து 44 ஆயி ரம் கோடி, இரண்டாம் காலாண்டில் ரூ. 1 லட்சத்து 44ஆயிரம் கோடி, மூன்றாம் காலாண்டில் ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் கோடி, நான்காம் காலாண்டில் ரூ. 1 லட்சத்து 56 ஆயிரம் கோடி என மொத்தம் ரூ. 5 லட்சத்து 71 ஆயிரம் கோடியை மோடி அரசு கடனாக வாங்கியுள்ளது.

அதற்கு அடுத்ததாக 2019-20 நிதியாண்டிலும், முதல் காலாண்டில் ரூ. 2 லட்சத்து 21 ஆயிரம் கோடி, இரண்டாம் காலாண்டில் ரூ.2 லட் சத்து 21 ஆயிரம் கோடி, மூன்றாம் காலாண்டில் ரூ. 1 லட்சத்து 92 ஆயிரம் கோடி, நான்காம் காலாண் டில் ரூ. 76 ஆயிரம் கோடி என மொத் தம் ரூ. 7 லட்சத்து 10 ஆயிரம் கோடி மோடி அரசு கடன் பெற் றுள்ளது.

இவை தவிர, 2020-21 நிதி யாண்டில் சந்தைக் கடன் வாயிலாக ரூ. 4 லட்சத்து 20 ஆயிரம் கோடியும், குறுகிய காலக் கடன் களில் ரூ. 2 லட்சம் கோடியும் மத்திய அரசு வாங்கியுள்ளது.எதிர்வரும் 2021-22 நிதியாண்டிலும் ரூ. 12 லட்சத்து 05 ஆயிரம் கோடி மட்டுமே கடன் வாங்க மோடி அரசு இலக்கு நிர்ண யித்துள்ளது.

 

பொறியியல் வகுப்புகள் 8ஆம் தேதி தொடக்கம்

சென்னை,பிப்.5- அனைத்து பொறியியல்கல்வி பயிலும் மாணவர் களுக்கும் வரும் 8ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறி வித்துள்ளது.

இதுகுறித்து அண்ணா பல் கலைக்கழகம் உறுப்பு கல்லூரி களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசின் நிலை யான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பி., பி.டெக் உள்ளிட்ட இளநிலை படிப்புகளில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் 8ஆம் தேதியும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மார்ச் 15ஆம் தேதியும், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 5ஆம் தேதியும் வகுப்புகள் தொடங்க வேண்டும். எம்., எம்.டெக் உள் ளிட்ட முதுநிலை படிப்புகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் 8ஆம் தேதி வகுப்புகள் தொடங்க வேண்டும். கட்டடக்கலை படிப்பு களுக்கும் வரும் 8ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment