திராவிடர் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட "மயக்க பிஸ்கெட்டு,"கள் ஓர் எச்சரிக்கை என்ற புத்தகம் தமிழகமெங்கும் கழகத் தோழர்கள் பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு பிரச் சாரம் செய்தனர். அவன் விவரம் வருமாறு:
தஞ்சை - நெய்வாசல்
தேசியம் காக்க, தமிழினம் காக்க புறப்படுவோரே பதில் சொல்லுங்கள். "மயக்க பிஸ்கட்டுகள்" ஓர் எச்சரிக்கை என்ற தலைப்பில் திராவிடர் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட புத்தகம் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் 21.12.2020 திங்கள் மாலை 5.30 மணியளவில் தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், நெய்வாசலில் வணிகர்கள், விவசாயிகள், பொதுமக்கள், இளை ஞர்கள், மாணவர்களிடம் வழங்கப்பட்டது.
ஒன்றிய இளைஞரணி செயலாளர் நா.அன்பரசு தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் வெ.நாராயணசாமி, தி.மு.க மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் ஜி.கே.அசோக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தஞ்சை மாவட்ட செயலா ளர் அ.அருணகிரி, வீதிநாடக கலைக்குழு மாநில அமைப்பாளர் பி.பெரியார்நேசன், மண்டல இளை ஞரணி செயலாளர் வே.இராஜவேல், பெரியார்நகர் அ.உத்திராபதி, ஒன்றிய இளைஞரணி தலைவர் அ.சுப்ரமணியன், அம்மாப்பேட்டை ஒன்றிய செய லாளர் செ.காத்தையன், நெய்வாசல் ஞானபிரகாசம் ஆகியோர் முன்னிலையேற்றனர்.
தி.மு.க கிளைச் செயலாளர்கள் நீதிராஜன், ஆர்.இளையராஜா, பொருளாளர் டி. நடராஜன், ஒன்றிய பிரதிநிதிகள் கே. குணசேகரன், ஆர். பாஸ்கர், இளைஞரணி தலைவர் அர்ச்சுனன், சஞ்சய்குமார், தேவேந்திரன், அப்பவன்ராஜ் உள்ளிட் டோர் பங்கேற்றனர். புத்தக வினியோகம் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
திருச்சி காட்டூர்
திருச்சி காட்டூர் பகுதியில் பொதுமக்களுக்கு "மயக்க பிஸ்கெட்டு"கள் ஓர் எச்சரிக்கை நூல் கொடுக்கப்பட்டு, வாங்கிய மக்கள் ஆர்வமுடன் படித்து சென்றனர். காட்டூர் பகுதி தலைவர் காமராஜ். மாநில தொழிலாளர் அணிசெயலாளர் மு.சேகர். மற்றும் தோழர்கள் புத்தகத்தை வழங் கினார்கள்.
காரைக்குடி
காரைக்குடி 28ஆவது வார்டு தி.மு.க தோழர் சண்முகத்திற்கு அவர்களுக்கு "மயக்க பிஸ்கெட் டுகள்" ஓர் எச்சரிக்கை புத்தகத்தை நகர கழக செயலாளர் தி.கலைமணி வழங்கினார்.
காரைக்குடி ஊடகத்துறை நண்பர்களிடம் "மயக்க பிஸ்கெட்டு"கள் ஓர் எச்சரிக்கை நூலை மாவட்ட தலைவர் ச.அரங்கசாமி வழங்கினார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் கடைவீதியில் "மயக்க பிஸ்கெட் - ஓர் எச்சரிக்கை" நூல் பரப்புரை திராவிடர் கழக மாவட்ட செயலாளர் க.சிந்தனைச் செல்வன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. கடைவீதி முழுவதும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தா.பழூர் ஒன்றியத் தலைவர் இரா.இராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் பி.வெங் கடாசலம், மாவட்ட ப.க. ஆசிரியரணி தலைவர் இரா.இராஜேந்திரன், கோடங்குடி ரவி, ஆண்டி மடம் மூர்த்தி பங்கேற்றனர்.
பிச்சாவரம்
சிதம்பரம் வட்டம் பிச்சாவரம் கிராமத்தில் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சிதம்பரம் பெரியார் படிப்பக துணைத் தலைவர் எழுத்தாளர் ஆறு. கலைச் செல்வன், மஞ்சக்குழி தென்னவன், செயபால், செங்குட்டுவன், ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு "மயக்க பிஸ்கெட்டுகள்" ஓர் எச்சரிக்கை நூலினை கிராம மக்களுக்கு வழங்கினர்.
நிகழ்வில் அக்கிராமத்தைச் சேர்ந்த நீதிமணி, குட்டி யாண்டி சாமி, கோபால்சாமி ,அறிவழகன், பிரசாத், மச்சவல்லவன், முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சை - மேலஉளூர்
தேசியம் காக்க, தமிழினம் காக்க புறப்படுவோரே பதில் சொல்லுங்கள் "மயக்க பிஸ்கட்டுகள்" ஓர் எச்சரிக்கை என்ற தலைப்பில் திராவிடர் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட புத்தகம் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் 21.12.2020 திங்கள் மாலை 6.30 மணியளவில் தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், மேலஉளூரில் வணிகர்கள், விவசாயிகள், பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்களிடம் வழங்கப்பட்டது
ஒன்றிய இளைஞரணி தலைவர் அ.சுப்ரமணியன் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்டசெயலாளர் அ.அருணகிரி நிகழ்வை தொடங்கிவைத்தார், வீதிநாடக கலைக்குழு மாநில அமைப்பாளர் பி.பெரியார்நேசன், மண்டல இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல், பெரியார்நகர் அ.உத்திராபதி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் நா.அன்பரசு தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அஇராமலிங்கம், நெல்லுப்பட்டு நாகராசன் ஆகியோர் முன்னிலையேற்று பங் கேற்றனர். புத்தக வினியோகம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
கிருட்டினகிரி - மத்தூர்
மாவட்ட தலைவர் த.அறிவரசன், மாவட்ட செயலாளர் மாணிக்கம் ஆகியோர் தலைமையில் மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன் நிகழ்வை தொடங்கி வைத்தார்.
நகரம் முழுவதும் பொதுமக்கள், வியாபாரிகள், மாணவர்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் தருமபுரி மண்டல இளைஞரணி செயலாளர் வ.ஆறுமுகம், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் அண்ணா சரவணன், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் நிலவன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மு. இந்திரா காந்தி, மாணவர் கழக மணிமொழி, அகரன், இளைஞரணி நா. சிலம்பரசன், ஒன்றிய துணைத் தலைவர் சா. தனஞ்செயன், பருகூர் ஒன்றிய செயலாளர் பிரதாப், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க. வெங்கடேசன், நகர தலைவர் சி. வெங்கடாசலம் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு துண்டறிக்கை வழங்கினர்.
ஆவடி
ஆவடி மாவட்டம் ராஜீவ் காந்தி நகர், இந்து கல்லூரி பகுதிகளில், "மயக்க பிஸ்கெட்டுகள் - ஓர் எச்சரிக்கை" புத்தகம் தி. மு. க. சார்பில் நடைபெற்ற கிராம மக்கள் சபை நிகழ்ச்சிகளில் கழக மாவட்டத் தலைவர் பா. தென்னரசு அவர்களின் தலைமையில் வழங்கப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் க. இளவரசன், அமைப்பாளர் உடுமலை வடிவேல், ராஜீவ் காந்தி நகர்த் தோழர் தஞ்சை முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒசூர்
ஒசூர் பகுதியில் முனிஸ்வர் நகர், சிவகுமார் நகர், எம்.எம்.நகர், அன்னை நகர் குடியிருப்பு வாசிக ளிடமும், மற்றும் பெரிய தொழிற்சாலையான அசோக் லைலேன்ட்,, டைடான் வாட்ச் ஆகிய நிறுவன ஊழியர்களிடம் "மயக்க பிஸ்கெட்டுகள் - ஓர் எச்சரிக்கை" சிறிய நூலை மாவட்ட கழகம் சார்பில் தலைவர் சு.வனவேந்தன், மாவட்ட துணைத்தலைவர் இரா.ஜெயசந்திரன், மாணவர் கழக தோழர்கள் வழக்குரைஞர் அஃப்ரிடி, சித் தாந்தன், தருண், செகஸ்திரன், சி.தருண் ஆகியோர் வழங்கினார்கள்.
விழுப்புரம்
"மயக்க பிஸ்கெட்டுகள்" - "தமிழ் மக்களே காவிகளைப்புரிந்து கொள்ளுங்கள்!" நூல்கள் விழுப்புரம் நகரில் பெரியார் பெருந்தொண்டர் பேரா.மு.வி.சோமசுந்தரம் தலைமையில் வழங்கப் பட்டது. திராவிடர் கழக மாவட்டதலைவர். சுப்பராயன். நகரதலைவர்.பூங்கான், நகர செய லாளர். சதீஷ் ஆகியோர் பங்கேற்று பொது மக்களிடம் வழங்கினர்.
No comments:
Post a Comment