செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 31, 2021

செய்தியும், சிந்தனையும்....!

நிரந்தர வெளிநடப்பு!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்கு வங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம் - பா... வெளிநடப்பு!

மூன்று வேளாண் சட்டங்களே போதும் - பா... ஆட்சியில் இருந்தே வெளிநடப்பு செய்யும்!

தேவை விடுதலை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரைச் சந்தித்து பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை விவகாரம் - நல்ல முடிவு எடுக்க வேண்டினார்.

இதைத்தான் திராவிடர் கழகத் தலைவர்விடுதலை' அறிக்கைமூலம் வலியுறுத்தினார் (‘விடுதலை', 23.1.2021 )

62 மாத அகவிலைப்படி...

போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 62 மாத அகவிலைப்படியை உடனே வழங்கிடக் கோரி - நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம்!

தங்களுக்கு அளிக்கவேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவையை மத்திய அரசு அளிக்கவேண்டும் என்று கூறும் மாநில அரசு, தம் ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிலுவையை அளிக்கவேண்டாமா?

இது கொஞ்சம்ஓவர்!'

தமிழ்நாட்டில் பா... இரட்டை இலக்க தொகுதியில் வெற்றி பெறும்: - பா... மேலிட பார்வையாளர் சி.டி.ரவி நம்பிக்கை.

பா... ஆட்சிபற்றி எல்லாம் பேசியதெல்லாம் என்னாச்சு? கடைசியில்... இந்தக் கீழிறக்கமா? உண்மையைச் சொன்னால் இந்த நம்பிக்கைகூட அதீத நம்பிக்கைதான். நின்ற இடத்தில்டெபாசிட்!' கிடைக்குமா என்பதுபற்றி சிந்திப்பதே சரியானது!

அர்ச்சகர் யார்?

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கோவில் திறப்பு - திருமங்கலத்தில் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

கோவில்கள், சாமிகள் இப்படித்தான் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டன - ஆமாம், கோவிலில் அர்ச்சகர் நியமனம் உண்டா?

தீண்டாமை நடமாட்டம் கோவில் கருவறையில்தான்!

நேற்று காந்தியார் நினைவு நாள். தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி - முதலமைச்சர் தலைமையில்!

முதல் தீண்டாமை ஒழிப்பு கோவில் கருவறையிலிருந்து தொடங்குமா?

நம்ம சிபிணிழிழிகிமி!

சென்னை கடற்கரையில் நம்ம என்பதை தமிழிலும், சென்னை என்பது ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்ட அடையாளச் சின்னத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

பாதி தமிழ் - பாதி ஆங்கிலம் ஏன்?

ஏன் இந்த மொழிச் சிதைவு - இரண்டு சொல்லும் தமிழில் இருக்கவேண்டாமா? என்று வைகோ எழுப்பிய வினா நியாயமானதே!

No comments:

Post a Comment