செவ்வி
“பெரியார்
தோற்றுப் போகவில்லை என்பது மட்டுமல்ல.பெரியாரைத்
தோற்கடிக்க முடியாது.ஏனென்றால் அவர் வாக்கு வங்கி
அரசியலோடு துளிக்கூட தொடர்பு இல்லாதவர்.அவர் மனித குலத்தின்
விடுதலைக்காக இந்தியாவின் தென்பகுதியில் முன் வைத்தது ஜாதி
ஒழிப்பு என்பதைத்தான்.எனவே அவரை மனித
குலத்தின் விடுதலையைத் தேடியவர் என்றுகூட சொல்ல முடியாது.”
பெரியார் மீதான எதிர்மறை விமர்சனங்கள் வருவதற்கு காரணம் நம் கல்வியறிவின் வக்கிரங்கள்தான்.பெரியாரைக் கொண்டாடியது அறிவுலகத்துக்கு ஒரு அடையாளம் என்று கருதப்பட்டதுபோல இந்த பத்தாண்டுகளில் பெரியாரை பழிப்பது என்பது அறிவுலகத்துக்கு அடையாளம் ஆகிப்போய்விட்டது.
இந்து
தேசியம்
பேராசிரியர்
தொ.பரமசிவன் எழுதிய நான் இந்துவல்ல
நீங்கள்? இந்து தேசியம் சங்கரமடம்
தெரிந்து கொள்ள வேண்டிய உண்மையான
இதுதான் பார்ப்பனியம், புனா ஒப்பந்தம், ஒரு
சோகக் கதை ஆகிய அய்ந்து
குறு நூல்கள் "இந்து தேசியம்' என்னும்
பெயரில் ஒரே நூலாக வடிவம்
பெற்றதே இந்நூல்.
பொதுவாக
இந்த நூலில் இடம் பெற்றுள்ளவை
கதம்பம் போன்று இருந்தாலும் அவ்வெழுத்துக்களை
இணைப்பதற்குத் தொல்லியல், வைதீக எதிர்ப்பு, சங்கராச்சாரியர்
பற்றிய கட்டுரை, நமது பண்பாட்டில் மருத்துவம்,
திராவிட இயக்கச் சார்பு, நாட்டார் வழக்காற்றியல் ஆகிய புரிதல்களைக் கொண்ட
நூல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உ.வே.சா. அவர்களின் சங்க இலக்கிய மீள் கண்டுபிடிப்பே வைதீகத்துக்கு மாற்றான ஒரு பெரும் பண்பாடு தென்னிந்தியாவில் பிறந்து வளர்ந்த வரலாற்று உண்மையினைத் தமிழ் நாட்டுக்கு எடுத்துக் காட்டியது அதுவே தமிழ்த் தேசிய இன அடையாளத்தைக் கண்டது. திராவிட இயக்கத்தாருக்கும் முற்போக்கு இயக்கத்தாருக்கும் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கான திசையினையும் காட்டியது என்று இந்நூளில் தொ.ப. மதிப்பிடுவது கவனத்துக்குரியது.
அறியப்படாத
தமிழகம்
நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத
பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம்
கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு
அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன
என்பதை நூலின் ஒவ்வொரு கட்டுரையும்
வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.
உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள், உடை, உறவுமுறை, உறவுப் பெயர்கள் என அன்றாட வாழ்வின் பகட்டில்லாத பல்வேறு கூறுகளைக்கொண்டு தமிழ்ச் சமூகத்தின் ஈராயிரம், மூவாயிரமாண்டு வரலாற்று அசைவியக்கம் இந்நூலில் கோடிட்டுக் காட்டப்பெறுகின்றது.
தெய்வம்
என்பதோர்
நாட்டார்
தெய்வங்கள் என்ற சொல்லாட்சி நம்
மனங்களில் சாமியாட்டம், குருதிப்பலி, பலி
வடிவங்கள்
ஆகிய படங்களாகவே
மூட நம்பிக்கைகளோடு பின்னிப் பிணைந்தவையாக விரிந்து கிடப்பது உண்மை.
ஆனால்
அவை முற்றிலும் தவறான பிம்பங்கள் என்று
அழுத்தமாகத் தன் கருத்துக்களை வாசகர்
உணரும் விதமாக இந்நூலின் கட்டுரைகள்
எடுத்துரைக்கின்றன.
வட்டாரம் சார்ந்த உற்பத்தி அசைவுகளும் சமூக உளவியலும் எனப் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் நாட்டார் தெய்வங்கள் ஒரு மக்கள் பண்பாட்டின் அடையாளமாக நிற்கின்றன.
பண்பாட்டு
அசைவுகள்
‘அறியப்படாத
தமிழகம்’, ‘தெய்வங்களும் சமூக மரபுகளும்’ ஆகிய
இரு நூல்களில் உள்ள கட்டுரைகளையும் சில
புதிய கட்டுரைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு இது.
மண்ணும்,
மண்ணின் உயிர்வகைகளும் பயிர்வகைகளும் இவற்றினூடான மனித அசைவுகளும் பன்முகத்
தன்மைகொண்டவை என்ற புரிதலை இந்நூல்
ஏற்படுத்துகிறது.
நம்மைச் சுற்றியுள்ள அசைவுகளை எந்திரகதியில் அல்லாமல் தன்னுணர்ச்சியோடு காணவைக்கிறது.
அழகர்
கோயில்
முனைவர் தொ. பரமசிவன் அவர் களது 'அழகர் கோயில்' நூல் வெளிவந்து பத்தாண்டுகளுக்கு மேலாகின்றன. நூலின் தலைப்பு ஒருவகையில் கெட்டவாய்ப்பானது; அதன் இலக்கு வாசகர் களைத் திசைதிருப்பி விடக்கூடியது. கோயில் ஆய்வுகளுக்கு என்று ஒரு செக்குமாட்டுத் தடம் உண்டு. தல புராணத்திலிருந்து தொடங்கி, சில அய்தீகங்களைப் பட்டியலிட்டு, கோயில் கட்டடத்தின் அமைப்பை விவரிப்பது என்ற சட்டகத்தில் அமைந்துள்ள ஏராள மான கோயில் , ஆய்வுகள் அந்தந்தக் கோயிலைப் பற்றி அறியும் தாக முடைய பக்தர்களுக்கு மட்டுமே ஆர்வமூட்டக் கூடியவை. 'அழகர் கோயில்' நூலோ, தலைப்பு ஏற்படுத்தும் எதிர்பார்ப்பு களைப் பொய்யாக்கக் கூடியது. இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுகள் மட்டுமல்லா மல், நாட்டார் வழக்காறுகள், கள ஆய்வுச் செய்திகள் முதலானவற்றின் அடிப்படை யில், குடியிருப்புகளுக்கு வெளியே தனித்து நிற்குமொரு சமூகப் பண்பாட்டு நிறுவனத்திற்கும் சமூகத் தின் பல்வேறு பிரிவுகளுக்கும் ஜாதிகள் இடையிலான உறவைப் புதிய கோணத்தில் ஆராய் கின்றது. நூலின் மய்ய இழைக்கு அரணா கவும் இடைப்பிறவரலாகவும் ஆங் காங்கே இறைந்து கிடக்கும் நுட்பங்களும் இடை வெட்டுகளும் நூலுக்குப் புதிய பரி மாணங்களைச் சேர்க்கின்றன. தற் பொழுது அந்நூல் பெற்றிருக்கும் கவ னத்தை விட மேலதிகமான கவனத்தைப் பெறும் தகுதியுடையது என்பதோடல் லாமல், அதே சட்டகத்தை ஒட்டியும் வெட்டியும் பிற கோயில்களை ஆய்வு செய்வதற்கும் அதனை முன் மாதிரியாகக் கொள்ளலாம்.
பரண்
சமண, பவுத்த மதங்கள் உபநிடத
காலத்தினுடைய கருத்தாக்கங்களை எதிர்த்துப் பிறந்தவை. உபநிடத காலத்தின் கருத்தாக்கங்களில்
முதன்மையான ஒரு விசயம் மனம்
அல்லது ஆன்மா. இந்தக் கோட்பாட்டை
நிராகரித்துப் பிறந்தவைதான் சமண பவுத்த சமயங்கள்.
பவுத்தத்துக்கு அனாத்மவாதம் என்றே ஒரு பெயர்
உண்டு.
ஆன்மா என்றொரு பொருள் இருக்க முடியாது என்பதுதான் அதன் வாதம்; இன்னொன்று மனம் என்ற சொல்லை தமிழிலே முதன்முதலில் பயன்படுத்துபவர் வள்ளுவர்தானே தவிர, சங்க இலக்கியங்களிலே கிடையாது. அந்தச் சொல்லுக்குத் திராவிட வேரும் கிடையாது.
விடுபூக்கள்
திராவிடக்
கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி
முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர்.
தொ.ப.வின் தொடர்
பயணத்தில் இத்தொகுப்பு இன்னும் கவனம் பெறாத சிலவற்றை
முன்வைத்து நகர்கின்றது.
சிதம்பரம் கோயிலைப் பாடுகின்ற சேக்கிழார் தஞ்சைப் பெருவுடையார் கோயிலை ஏன் பாடவில்லை? இராசராசனை இன்னும் கொண்டாடுவதேன்? என்பன போன்ற நுட்பமான பல கேள்விகளுக்கு இப்புத்தகம் விடையளிக்கின்றது.
சமயங்களின்
அரசியல்
தமிழ்நாடு என்றால் வெறும் மொழியும் இனமும் ஒன்றிணைந்து இயங்குகின்ற ஒரு பெரிய நிலப்பரப்பு மட்டும் அன்று... சமயங்களும் தத்துவங்களும் சடங்குகளும் பெரும் நம்பிக்கையாகச் செயல்பட்டுவரும் உயிர் நிலம்! தமிழ் இலக்கணமும் இலக்கியமும் ஓர் இயக்கமாக வளர்ந்து வருவதுபோல், ஆதிகாலம் தொட்டு தமிழகத்தில் வளர்ந்துவரும் சமயங்களும், பல்வேறு காலமாற்றத்தைக் கடந்து, மக்கள் மனதிலும் பல மாற்றங்களை உண்டாக்கி, சர்ச்சைக்கும் ஆராய்ச்சிக்கும் உரிய பாதையாக தொடர்ந்துகொண்டு இருக்கிறது. ‘பண்பாட்டுப் பேரறிஞர்’ பேராசிரியர் தொ.பரமசிவன், சமயங்களில் புதைந்து கிடக்கும் அரசியலை, தன் புதிய ஆய்வு முறையின் மூலம் தோண்டி எடுத்து, இந்த நூலின் மூலமாக உலகின் பார்வைக்குப் படைத்திருக்கிறார். உலகில் தோன்றிய சமயங்கள் அனைத்தும் ‘பிறவாப் பெருநிலை’யைத் தேடி தத்துவங்களை உருவாக்கி இருந்தாலும், இந்தியச் சமய மரபு மட்டும், பிறப்பால் உருவாக்கப்பட்ட வருணப் பாகுபாடு, சுரண்டல், ஒடுக்குவாதம், அடிமைப்படுத்தல் போன்ற அம்சங்களைக்கொண்டு இழிவான இயக்கமாக மாறி வந்ததை இந்த நூலில் வெளிச்சமிட்டுக் காட்டி இருக்கிறார். இந்திய வைதீகம், பிறப்பால் மக்களைத் தாழ்வு படுத்தியது என்றால், பிற்பாடு வளர்ந்த சில சமயங்களும், ஆணுக்கு வேறாகவும், பெண்ணுக்கு வேறாகவும் தத்துவங்களை வகுத்துச் சொல்லி, செயல்பட்டு வந்திருக்கின்றன என்று உணர்த்துகிறார்! இந்தியத் தத்துவம், இந்தியச் சமயங்கள் ஆகியவற்றின் வரலாறு என்பது, ஒடுக்குகின்ற ஜாதிக்கும் ஒடுக்கப்படுகின்ற ஜாதிகளுக்கும் இடையிலான போராட்டம் என்பதே இந்த நூலின் கருத்து நிலை. இந்தக் கருத்தை, புத்தகங்களில் இருந்து மட்டும் தரவுகளாகத் தொகுக்கவில்லை... கல்வெட்டுகள், வழக்காறுகள், பழமொழிகள், கதைகள், நாட்டார் பாடல்கள் போன்ற வெகுஜன மக்களின் அதிகாரமற்றத் தரவுகளிலிருந்தும் தொகுத்து எழுதி இருப்பது இந்த நூலின் சிறப்பு. இதே நூலில் மற்றொரு பகுதியாக, தமிழகச் சமயங்கள் பற்றி நூலாசிரியருடன் பேராசிரியர் சுந்தர் காளியின் உரையாடல் இடம்பெற்றிருப்பது மற்றுமொரு சிறப்பு. ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள், சமய உணர்வாளர்கள் என அறிவுப் பசி கொண்டவர்கள் வாசிக்கும்போது இது நூலாகத் தெரியாது... கடலாகத் தெரியும்!
No comments:
Post a Comment