பா.ஜ.க. கூட்டணியின் எதிரொலியா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 24, 2021

பா.ஜ.க. கூட்டணியின் எதிரொலியா?

சமூக வலைத்தளங்களில் அரசை விமர்சித்தால் சிறைதண்டனையாம்!

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவிப்பு

பாட்னா, ஜன.24 பீகாரில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தனி மெஜாரிட்டி பெறாத நிதீஷ்குமார், பா... துணையுடன் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

அண்மைக்காலமாக பீகாரில் குற்றச் சம்பவங்கள் பெருகி வருவதை சமூக வலைத்தளங்கள் வெளிச்சம் போட்டு காட்டுவதால் நிதிஷ்குமார், ஆத்திரம் அடைந்துள்ளார். இதனால் சமூக வலைத் தளங்களை கட்டுப்படுத்தும் வகையில் அதிரடி நடவடிக்கையை மேற்கொண் டுள்ளார்.

சமூக வலைத்தளத்தில், அமைச்சர்கள், ஆளுங்கட்சி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பற்றி விமர்சித்தால் அதுசைபர் கிரைம்குற்றமாக கருதப்படும் என புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது, நிதிஷ்குமார் அரசு. இது தொடர்பாக, மாநில அய்.ஜி நய்யார் கான், வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “அர சாங்கம் மீது சமூக வலைத்தளங்களில் தனி நபர்களோ, அமைப்புகளோ அவதூறாக விமர்சித்தால், அதுசைபர்கிரைம்குற்றத்தில் சேர்க்கப்படும்என எச்சரித்துள்ளார்.

இவ்வாறு விமர்சிப்போர், கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுவார்கள்என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட் டுள்ளது. பீகார் அரசின் இந்த உத்தரவுக்கு அங்குள்ள எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment