முகநூல் தரவுகள் திருட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 24, 2021

முகநூல் தரவுகள் திருட்டு

வெளிநாட்டு நிறுவனங்கள்மீது வழக்குப் பதிவு செய்த சிபிஅய்!

 புதுடில்லி. ஜன.24 இந்தியாவில் முகநூல் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை சட்டவிரோத முறையில் சேகரித்த கேம் பிரிட்ஜ் அனாலிடிகா மற்றும் குளோபல் சயின்ஸ் ரிசர்ச் லிமிடெட் (ஜிஎஸ்ஆர்எல்) ஆகிய நிறுவனங்கள் மீது சி.பி.அய். வழக்குப் பதிவு செய்துள்ளது.

பிரிட்டனை சேர்ந்த அரசியல் ஆலோ சனை வழங்கும் நிறுவனம் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா. இந்நிறுவனம் 5 கோடிக்கும் அதிகமான முகநூல் பயனர்களின் சுய விவரங்களை திருடியது கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்தது.

பெரும்பாலான மக்களின் தகவல்கள் அமெரிக்காவிலிருந்து பகிரப்பட்டிருப்ப தாக முகநூல் நிறுவனம் கூறியது. இந்தி யாவில் 5.62 லட்சம் முகநூல் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இத்தக வல்கள் மூலம் தேர்தலில் ஆதிக்கம் செய்ய முயன்றது வெளிச்சத்திற்கு வந்தது.

இந்தியாவில், தேர்தல் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு இச்செய்தி வெளி யானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அப்போது முகநூல் மற்றும் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியது. 2018 செப்டம் பரில், இதுதொடர்பான முதற்கட்ட விசார ணையை சிபிஅய் தொடங்கியது.

அதில் குளோபல் சயின்ஸ் ரிசர்ச் லிமிடெட் நிறுவனர், ஒரு செயலியை உருவாக்கி சுமார் 5.6 லட்சம் இந்திய முகநூல் பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்கள், அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ள பக்கங்கள் போன்ற தகவல்களை திருடியது அம்பலமானது.

தற்போது, கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மற்றும் ஜிஎஸ்ஆர்எல் நிறுவனங்களின் மீது சிபிஅய் அமைப்பு வழக்குப் பதிவு செய்துள்ளது. மேற்கொண்டு நடத்தப் படும் விசாரணைகளில், அவர்கள் சேகரித்த தகவல்கள் எந்தெந்த கட்சி களுக்கு அல்லது தனிநபர்களுக்கு பயன் பட்டன என்பது வெளிச்சத்துக்கு வரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் முகநூல் பயனர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment