ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 1, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை பணி நியமனங் களில் 61 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. மொத்த பணியாளர்களில் 11 சதவீதம் திருநங்கை உள்ளிட்ட LGBTH பிரிவினரும், 54 சதவீதம் கருப்பினத்தவர் உள்ளிட்டவர்களுக்கும் புதிய அதிபர் ஜோ பைடனும், துணை அதிபர் கமலா ஹாரிஸூம் வாய்ப்பளித்துள்ளனர்.

·     தமிழ் நாட்டில் கரோனா தொற்று காரணமாக சில தளர்வுகளுடன் கூடிய முழு அடைப்பு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

·     சேது சமுத்திரத் திட்டத்தை கைவிட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     அரியானா மாநிலத்தில் அம்பாலா, பஞ்ச்குலா மற்றும் சோனிபட் நகரங்களில்  நடைபெற்ற மூன்று மேயர் இடங்களில் ஒன்றை மட்டுமே ஆளும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

தி டெலிகிராப்:

·     வேளாண் சட்டங்களை விவசாயிகள் எதிர்த்து வரும் நிலையில்அச்சே தின்என்ற மோடியின் முழக்கம் ஒரு மோசடி வார்த்தை என பல தொழிலாளர்களும் கூறும் நிலை உருவாகியுள்ளது.

·     புதிய வேளாண் சட்டங்களின் கீழ் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்ற மோடி அரசின் உத்தரவாதம் ஒரு 'பாசாங்குத்தனமான வாக்குறுதியை' தவிர வேறில்லை. சட்டங்களைத் திரும்பப் பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று விவசாய அமைப்புகள் கூறியுள்ளன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள அரசு  நிறைவேற்றிய தீர்மானம் பேரவையில் கொண்டு வரப்பட்டபோது அதை எதிர்கட்சியான அய்க்கிய ஜனநாயக முன்னணி ஆதரித்தது. ஒற்றை பாஜக உறுப்பினரான . ராஜகோபால் மட்டும் தீர்மானத்தில் இடம்பெற்ற அம்சங்களுக்கு எதிராக பேசினார். அதே சமயம், தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடந்தபோது அவர் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. மேலும் அரசின் முடிவை ஆதரிப்பதாகக் கூறிய அவர், வாக்கெடுப்பை தவிர்ப்பதாகக் கூறினார்.

பிபிசி  நியூஸ் தமிழ்:

ஈழத் தமிழர்களின் குறைந்தபட்ச சுயமரியாதையை பறிக்கும் 'மாகாண ஒழிப்பு', இந்திய - இலங்கை உறவில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்க வேண்டும். இலங்கையில் மாகாண சபைகளை ஒழிக்க முற்படும் அந்நாட்டு அரசின் முயற்சியை தடுக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டை வலியுறுத்தியிருக்கிறார் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு.

"விவசாயிகளின் பாதுகாப்பை மூன்று சட்டங்களும் உறுதி செய்வதாக இல்லை. அரசாங்கம் கொள்முதல் செய்வதிலிருந்து விலகும் சூழ்நிலையில், அது உணவு மற்றும் உணவுப் பாதுகாப்பு, விநியோகித்தை பாதித்து பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தைப்படுத்துதலை தீவிரமாக்க வழிவகுக்கும், மேலும், அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் கீழ் விவசாயம் என்பது ஒரு மாநில விவகாரம். மாநிலங்களை கடுமையாக பாதிக்கும் விஷயம் என்ற வகையில், இந்த மூன்று மசோதாக்கள் பற்றி மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த மசோதாக்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு கூட பரிந்துரைக்கப்படாமல் அவசரகதியில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன," என்று இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

பாஜக நிர்வாக அமைப்பில் சில மாற்றங்களை அக்கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா அறிவித்தார். இதன்படி முக்கிய பதவிகளில் இருந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களின் முக்கியத்துவத்தைக் குறைக்கப்பட்டுள்ளது.

- குடந்தை கருணா

1.1.2021

No comments:

Post a Comment