31-12-2020 நாளிட்ட 'தி இந்து'
ஆங்கில நாளேட்டின் தலையங்கம்
2021ஆம்
ஆண்டில் ஓர் அரசியல் கட்சியைத்
துவங்குவது என்ற தனது திட்டத்தை
புகழ் பெற்ற மூத்த நடிகர்
ரஜினி காந்த் கைவிட்டதன் மூலம்
தனது தடுமாற்றத்தை மறுபடியும் ஒரு முறை அவர்
வெளிப்படுத்தி உள்ளார். 2020 டிசம்பர் 3 ஆம் தேதியன்று தனது
அரசியல் பிரவேசத்தை மிகுந்த விளம்பரத்துடன் அறிவித்ததற்கு முற்றிலும் நேர் எதிரானதாக இந்த
முடிவு அமைந்துள்ளது. அதற்கு அவர் கூறும்
மோசமான தனது உடல்நிலை மற்றும் புதிய கோவிட்-19 தொற்றுநோய்
கிருமியின் அச்சுறுத்தல் உள்ளிட்ட
காரணங்கள் நன்றாக அறியப்பட்டவையாக
இருந்த போதிலும், சிறுநீரக
மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்கும்
60 வயதைக் கடந்த இந்த நடிகர்,
தமிழ்நாட்டு அரசியலில் நேர்மையான, நம்பத் தகுந்த ஒரு
மூன்றாவது அரசியல்
சக்தியாக உருவெடுப்பார் என்று அவரது விசிறிகளும்
ஆதரவாளர்களும் நம்பிக் கொண்டிருந்தனர். தமிழ்நாட்டு
அரசியல் கடந்த 40 ஆண்டுகளாக இரண்டு திராவிட கட்சிகளின்
ஆதிக்கத்திலேயே இருந்து வந்துள்ளது. தமிழ்நாட்டின்
அரசியல் களத்தில் தங்களது அரசியல் ஆற்றலை மெய்ப்பித்துக் காட்டியுள்ள
ஆட்சியில் இருக்கும் அ.இ.அ.தி.மு.கட்சியும்,
கடந்த காலத்தில் ஆட்சி செய்த தமிழக
அரசியலில் இப்போது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும். தி.மு.கட்சியும் 1977 ஆம்
ஆண்டு முதல் நடைபெற்ற பத்து
மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும், இந்த இரண்டு கட்சிகளும்
சேர்ந்து 63 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளன. அதனால் சிறிய இதர
கட்சிகள் இப்போது குறிப்பிட்ட ஒரு சிறிய வரையறுக்கப்பட்ட எல்லைக்குள்
மட்டுமே செயல்படும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டன. ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தின் பின்னணியில் இருப்பதாகக்
கருதப்பட்ட பா.ஜ.க. 2021 ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற
உள்ள தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலில் ரஜினியின் ஆதரவைப் பெற இயலும் என்று
மிகுந்த நம்பிக்கையுடன் இருந்து வந்தது. ஆனால், எந்த ஒரு
கூட்டணிக்கு அவர் இப்போது ஆதரவு
தெரிவித்தாலும், அது ஒரு நிலையான
முடிவாக இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. 1996 சட்டமன்ற தேர்தலின்போது முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு
எதிராக ரஜினி காந்த் விடுத்த
அறிக்கையே இதன் காரணம். 2004 மக்களவை
தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ.க.
- அ.இ.அ.தி.மு.க. கூட்டணிக்கு
ரஜினிகாந்த் அளித்த ஆதரவை வாக்காளர்கள்
ஏற்றுக் கொள்ளவில்லை. அத்தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதிகளிலும் தி.மு.க.
தலைமையிலானயே கூட்டணி வெற்றி பெற்றது.
திராவிட
கட்சிகளுக்கு எதிராக பலம் பொருந்திய
ஒரு மாற்று சக்தியைத் தேடித்
திரிபவர்கள், திரைப்படத் தொழிலில் ஈடுபட்டவர்களைத் தாண்டி தேடுவதற்கான வாய்ப்பினை
ரஜினிகாந்தின் இந்தக் கதை அளித்துள்ளது.
அரசியல் அறிவு, தந்திரம், மற்றும்
ஆணிவேர் போன்ற கட்சிப் பணிகள்
ஆற்றிய அனுபவம் ஆகியவை இல்லாமல்
இருப்பதை வெறும் சினிமா கவர்ச்சியினால்
மட்டுமே சரி செய்துவிட முடியாது.
பொது மக்களின் குறைகளையும், அவர்களது வாழ்வாதாரப் பிரச்சினை களையும் பற்றி எடுத்துப் பேசி
பிரச்சாரம் செய்து மட்டுமே எந்த
ஓர் அரசியல் இயக்கமும் உருவாக்கி கட்டமைக்கப்பட இயலும், கட்டமைக்கப்பட வேண்டும். ஆன்மிக அரசியல் நடத்துவது,
லஞ்ச ஊழலுக்கு எதிராகப் போராடுவது போன்ற
தெளிவற்ற குழப்பம் நிறைந்த செயல்பாடுகளைத் தவிர்த்து மக்களுக்கு அளிக்க இயன்ற உறுதியான
வேறு எந்த செயல்திட்டங்களும் ரஜினிகாந்திடம்
இல்லை. வளர்ச்சியின் வரைபடத்தில் தமிழ்நாடு நல்லதொரு இடத்தைப் பெற்றிருக்கிறது என்ற போதிலும், அதன் பங்கிற்கு உரிய
நாள்பட்ட தீர்க்கவே முடியாத பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கின்றன. பிரசவ காலத்தில் இறந்து
போகும் தாய்கள் மற்றும் சேய்கள் இறப்பு விகிதம் மாவட்டங்களிடையே
ஏற்றத் தாழ்வு நிறைந்ததாக இருப்பது
மற்றும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்
நகர்ப்புற மக்கள் தொகை ஆகிய
பிரச்சினைகள் உள்ளன. பொருளாதார நிலையில்
பலவீனமாக இருக்கும் ஏழை மக்கள் எவ்வாறெல்லாம்
பாதிக்கப்படு வார்கள் என்பதை கோவிட்-19
நோய்த் தொற்று தெள்ளத் தெளிவாக
எடுத்துக் காட்டிவிட்டது. மிகுந்த பலத்துடன் உறுதியாக நிறுவப்பட்ட கட்சிகளால் இத் தகைய பிரச்சினைகளைத்
தீர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஒரு மூன்றாவது அரசியல்
சக்தி உருவாவதற்கு இந்த பிரச் சினைகள்
தீர்க்கப்படுவதற்கான முயற்சிகளே அடிப் படையாக அமைந்தவை.
ஆனால், பல்வேறுபட்ட சமூகங்களின் பின்னணியைச் சேர்ந்த தனது
ரசிகர்களின் முதுகில் சவாரி செய்து கொண்டு
ஆட்சி அதிகாரத்துக்கு குறுக்கு வழியில் வந்துவிட முடியும் என்று இந்த நடிகர்
நம்பிக் கொண்டிருந்தது தெளிவாகவே தெரிகிறது. அத்தகைய ஒரு உத்தியும், முயற்சியும்
நிச்சயமாக தோல்வியையே தழுவும்.
திரைப்படக்
கதை வசனத்தைப் போல அல்லாமல், பண்படாத
முரட்டுத்தனம், கொந்தளிப்பு மற்றும் தடு மாற்றங்கள் நிறைந்ததொரு
அரசியல் வாழ்வில் ஈடுபடு வதற்கு அவரது
40 ஆண்டு கால திரை வாழ்க்கை
அவரைத் தயார் செய்யவில்லை என்
பதை உணர்ந்திருக்க வேண் டிய ரஜினிகாந்தோ,
ஆட்சி அதிகாரம் ஒரு தங்கத் தாம்
பாளத்தில் வைத்து தனக்கு வழங்கப்படும்
என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்த
தாகவே தெரிகிறது.
நன்றி:
'தி இந்து' 31-12-2020
தமிழில்:
த.க.பாலகிருட்டிணன்
No comments:
Post a Comment