காதல் திருமணங்களால் ஜாதி ஒழியும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 23, 2021

காதல் திருமணங்களால் ஜாதி ஒழியும்

ஜாதியை ஒழிப்பதே உண்மையான சமத்துவத்தை தரும் என்ற தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளை உள்வாங்கிய மனிதர்களே ஜாதியை ஒழிக்க முன்வருவார்கள். அதன்படி வாழ்க்கை துணையை மாற்று ஜாதியில் தேர்ந்தெடுத்து கொள்வது கொள்கைவழி திருமணம் ஆகும்.

இன்னொரு முக்கியமாக காதல் திரு மணங்கள் இயல்பாக ஜாதியை இல்லாமல் செய்யும் ஆற்றலை பெற்றிருக்கின்றன.

வயது வந்த ஆணும் ,பெண்ணும் தங்களுக்கான துணையை தேர்ந்தெடுத்து வாழ்வது  காலங்காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் வாழ்க்கையை வாழ்பவர்களும் இருக்கிறார்கள்...

  50 வருடங்களுக்கு முன்னால் நடந்த காதல் திருமணங்களை செய்து கொண்ட வர்களின்  பதிவுகளை வாசிக்கையில் ஜாதி வெறியர்கள் அந்த காலத்தை போலவே இன்னும் இருக்கிறார்கள்; அவர்கள் வாழ் விடத்தை பொறுத்து ஜாதியின் இறுக்கங்கள் மாறுபடுகிறது.

 இன்றைய வாழ்க்கை சூழல் காதல் திரு மணங்களுக்கு ஏதுவாக சற்று தளர்ந்திருப் பதையும் பார்க்க முடிகிறது. ஆனால் முழு மையாக காதல் திருமணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றனவா என்பது கேள்விக்குறிதான் ..

அதற்கு காரணம் ஜாதியை வேர்விட வைக்கும் பழக்க வழக்கங்கள், சடங்குகள், சாஸ்திரங்கள் செய்முறைகள், தாய்மாமன் சீர், சமையல் முறைகளில் மாற்றம் இல்லா மல் இருப்பது - வெள்ளி செவ்வாய் போன்ற கிழமைகளுக்கு மிகமுக்கியமாக முக்கியத் துவம் அளிப்பது  - மதபண்டிகைகள், திரு மண முறைகள்  இப்படி எத்தனையோ விச யங்களை வாழ்க்கை என்று வாழ பழக் கப்படுத்தியிருக்கிறது சமூகம்...

 இவைகளை விட்டு விட்டாலே பெரும்பான்மையான ஜாதிய பழக்கவழக் கங்கள் குறைந்து விடும். எடுத்துக்காட்டாக இரண்டு வெவ்வேறு ஜாதியை சார்ந்த வர்கள் திருமணம் செய்து கொண்டாலே ஜாதிய பழக்கவழக்கங்கள் இல்லாமல் போய்விடுவது உண்மை ...

ஜாதியின் பிடியில் இறுகிக் கிடக்கும் மனிதர்கள் முதலில் இந்த பழக்கவழக்கங்கள் இல்லா மல் போவதை ஏற்றுக்கொள்ள மாட்டார் கள்.. அதிலும் வாரிசு என்று வந்து விட்டால் அது தன் ஜாதி ரத்தமாக இருக்க வேண்டும் என்ற மிக மோசமான நச்சு எண்ணங்கள் ஜாதிவளர காரணமாக இன்னும் இருந்து வருகிறது..

 ஜாதி ,ஆச்சாரம், பூணூல் போன்ற பார்ப்பனர்களின் பழக்கவழக்கங்களின் நீட்சியே இந்த சமூகத்தில் சமத்துவமற்ற ஆண்ட ஜாதி பெருமை பீற்றும் மனிதர் களை உற்பத்திசெய்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை...

 ஒருவன் உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்ற மனநிலையில் வாழும் ஈன பிறவி களாக வலம் வருவது நகரீக உலகில் சேற்றில் சுற்றி திரியும் விலங்கிற்கு கோட் சூட் போன்றவைகளை அணிவித்தால் எப்படி இருக்குமோ அதே உணர்வையே தருகிறது...

இதனை இளைஞர்கள் தெரிந்து கொள்ள முன் வர வேண்டும். ஜாதி என்ற நெருப்பு மனித சமூகத்தின் வளர்ச்சியை பின்னோக்கி இழுக்கும் தன்மையாக பார்க்கப்பட வேண்டும்... அதற்கான சமூக கல்வி புகட்டப் பட வேண்டும் ...

ஒரு காதல் திருமணத்தில் பெண்ணோ,ஆணோ ஆதிக்க ஜாதியில் பிறந்து விட்டால் காதல் உணர்வு அவர்க ளுக்கு சாகடிக்கப்படுகிறது என்ற நிலை தானே தொடர்கிறது ..

கிராமங்களில் இருக்கும் ஜாதி ஆதிக்கத்திற்கு முக்கிய காரணம் கூட்ட மாக ஒரே ஜாதியினராக வாழுவதும் ஒரே பழக்கவழக்கங்களை அச்சு பிசகாமல் கடைப்பிடிப்பதும் தான்.  இங்கே காதல் உணர்வு வந்தாலும் சமூகத்திற்கு என்ன பயன் அதுவும் ஒரு ஏற்பாட்டு திருமணமாக முடிந்து விடும்.

.கிராமமும் அல்லாமல் நகரமும் அல்லாமல் இருக்கும் இடங்களில் பெண் படித்து வேலையில் இருந்தால் சற்று ஜாதி யின் இறுக்கத்தை குறைத்துக்கொள்ளு கிறார்கள். அவர்களில் யார் பொருளாதார பலத்தில் இருக்கிறார்களோ அவர்கள் ஜாதியை சார்ந்து வாழ்ந்து விடுகிறார்கள்.

ஆனாலும் இந்த இடத்தில் ஜாதியின் இறுக்கம் தளர்ந்திருப்பதை பார்க்க முடி யும்..

இதையே நகர்ப் புறங்களில் நடக்கும் காதல் திருமணங்களில் ஆண்ட ஜாதி கம்பு சுற்றுவது நிறையவே குறைந்திருக்கும்.

இங்கு பழக்கவழக்கங்களை பொருளா தாரம் அதாவது வேலை வாய்ப்பு தீர்மா னிக்கும். அங்கேயும் வலிந்து ஜாதியை திணிக்கும் கூட்டங்கள் இருந்து கொண்டு தான் இருக்கும். ஆனால்,  நகர இரைச் சல்களில் அமுங்கிப் போகும்.

ஜாதியை ஒழிக்க ஒரே ஜாதி கூட்டங் களில் வாழும் முறையை தவிர்ப்பது , நல்ல கல்வி வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி வாழ்வது முக்கியமானது. சுயமரியாதை வாழ்க்கைக் குள் வாழும் மனிதர்களே நல்ல சமூகம் உருவாக காரணமாக இருக் கிறார்கள் ... தனக்கான துணையை தேர்ந் தெடுத்து வாழும் தைரியமான மனநிலை கல்வி கற்றவர்களுக்கே அதிகம் இருக்கும்... கிராமங்கள் நகரத்தின் பழக்க வழக்கங்களில் கலந்து சமத்துவத்தை உருவாக்கி கொள் ளட்டும்.

- விஜி, பகுத்தறிவு சிந்தனையாளர்

No comments:

Post a Comment