‘‘ஊசி மிளகாய்'' - என்ன விநோதம் பாரு - எவ்வளவு ஜோக்கு பாரு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 2, 2021

‘‘ஊசி மிளகாய்'' - என்ன விநோதம் பாரு - எவ்வளவு ஜோக்கு பாரு!

வடகலை - தென்கலை அடிதடி!

காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் கோவிலில் நேற்று (1.1.2021) நடைபெற்ற பெருமாள் இராப்பத்து கடவுள் ஊர்வலத்தில் அங்கே திரண்டஅர்த்தமுள்ள ஹிந்து பக்தர்களான' வைணவ பக்தர்கள்தான் ஹிந்து மதத்தின் வைணவம் - சைவம் என்ற பிரிவில், வைணவத்தின் உட்பிரிவு வடகலை, தென்கலை (பாதம் வைத்த நாமம் போடுவோர்; பாதம் வைக்காத நாமம் போடுவோர்) என்ற ‘‘பிராமணரோத்தமர்களுக்கு'' இடையே பெரும் ரகளை - அடிதடி சண்டை - போலீசார் விலக்கி விட்டும் நடந்த காட்சி சில தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டு, ஹிந்து மதம் என்ற சனாதன ஆரிய மதம் எவ்வளவு மக்களை ஒற்றுமைப்படுத்தும் மதம், சகிப்புத் தன்மைக்கே பெயர் போன மதம் என்பதை நாட்டுக்குப் பறைசாற்றியதாக அமைந்தது!

வடகலை,  தென்கலை நாமம்பற்றி விசாரித்த நீதிபதிகளுக்கு, வெள்ளைக்காரர்களுக்கு லண்டன் பிரிவி கவுன்சிலில் விளங்கவில்லை. எளிதில் விளக்க - வாதாடிய வக்கீல் சொன்னார் ‘‘இது  Y எழுத்துக்கும் U எழுத்துக்குமான சண்டை'' என்றார்!

150 ஆண்டுகளுக்குமேல் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் யானைக்கு எந்த நாமம் போடுவது என்ற வழக்கு கோர்ட்டுகளில் இன்னமும் நிலுவையில் உள்ளது. இதற்குள்

3 யானைகள் செத்துப் போய்விட்ட பிறகும், வழக்கு முடியவில்லை!

இனிமேல் வரதராஜப் பெருமாள் கோவிலில் இந்த ஆண்டு எந்த உற்சவமும் நடைபெறாது என்று நிர்வாகம் அறிவித்துள்ளது!

என்ன வினோதம் பாரு!

எவ்வளவு ஜோக்கு பாரு!!

No comments:

Post a Comment