வகுப்பு வாரியாகக்
கடமைகளை
மட்டுமே
வகுத்துத்
தந்தது மனுநீதி!
கடமையைச்
செய்
பலன்
எதையும்
இவ்வுலக
வாழ்வினில்
நீ
எதிர்பார்க்காதே
என்று
சொன்னது
பகவத்
கீதை!
அடிமை
ஊழியம்
மட்டுமே
உன் கடமை
அதன்
பலனை
அனுபவித்தல்
எம்
கடமை
என்றது
ஆரியம்.
நீ
வகுத்த
கடமைகள்
இருக்கட்டும் ஒருபுறம்
உரிமைகள்
எங்கே என்றபோது
வரலாற்றில்
முதல்முறையாய்
பதைத்துப்
போயினர்
பார்ப்பனர்!
மராட்டியத்தில்
ஜோதிராவ்
பூலேவின் தாக்கமும்
சாகுமகாராஜாவின்
ஆக்கமும்
ஒதுக்கீடு
தந்திருந்த
அதிர்ச்சியில்
ஆரியம்!
திராவிடத்தின்
நூற்றாண்டு
முணுமுணுப்புகளின்
சேர்க்கை
ஓரொலியாகி,
அதுவே
பேரொலியாக
வகுப்புரிமை
முழக்கமாக
ஒலித்தது.
பார்ப்பனரல்லாதார்
கொள்கை
அறிக்கை
கண்டு
‘அய்யய்யோ...
இப்படி
ஆய்டுத்தே’
என்றது தி
ஹிண்டு.
‘நாலு
வகுப்பும் இங்கொன்றே
இந்த
நான்கினில்
ஒன்று குறைந்தால்
வேலை
தவறிச் சிதைந்தே- செத்து
வீழ்ந்திடும்
மானிட ஜாதி’
என்று
பதறியது ஒரு சிண்டு
ஆம்!
பாரதி என்றொரு சிண்டு.
முழுப்
பழத்தை
விழுங்கியவருக்குப்
பகிர்ந்துண்ண
மனம்
வருமா?
சிறுத்தைப்
புள்ளி
தொலைந்தாலும்
பார்ப்பான்
குணம்
மாறுமோ?
வகுப்புவாரி
உரிமை
என்ப(து)
அடுக்காது
என்றனர்;
தடுக்கவே
முனைந்தனர்.
தகுதிக்கு
ஆபத்து?
திறமைகள்
எம்
சொத்து;
துரையவர்கள்
ஏற்கவே
கூடாது
என்று
மிலேச்சரிடம்
மண்டியுமிட்டனர்!
நாம்
ஒதுக்கப்பட்டதற்கு
ஈடாய்
ஒதுக்கீடு
கேட்டதும்,
வகுப்புவாரி
உரிமைகள்
கேட்டதும்
வருணங்களாய்
பிரித்து
நம்மைக்
காலமெல்லாம்
ஒதுக்கி
வைத்தோர்
வகுப்புத்
துவேஷம்
என்று
ஓலமிட்டனர்.
மனிதர்தம்
வேலைகளைப்
பகுத்தது
மதி;
வேலைசெய்யும்
மனிதரைப்
பிரித்தது
சதி.
அதுவே
வர்ணத்தின்
வழிவந்த
ஜாதி
அந்தச்
சதியைச்
சரி
செய்யவும்
சமன்
செய்யவுமே
சமூகநீதி.
நீதி
வழங்கக்
கட்சியினை
நிறுவிய
நாயரும்
ராயரும்
நடேசரும்
ஆட்சியில்
அமர்ந்திட்ட
ராம
ராய
நிங்கரும்
போட்ட
பாதையில்
வகுப்புரிமையைச்
செதுக்கினார்
முத்தையா!
அடடா..!
அடடா..!
முத்தையா
எங்கள்
சொத்து
அய்யா நீ என்று
கொண்டாடி
மகிழ்ந்தார்
அதுவரை
வெண்தாடி
காணாத
பெரியார்!
காங்கிரசில்
நுழைந்ததுமுதல்
மோதி
மோதிப்
பார்த்த
ஈவெரா
காஞ்சிபுரத்திலிருந்து
பெரியாராய்
வெளிவந்தது
இந்த
வகுப்புரிமைக்காகத்
தானே!
பொருமல்கள்
செருமல்கள்
உறுமல்கள்
எல்லாம்
காத்திருந்தன
காலத்துக்காக!
ஜாதிகள்
ஒழியாத
‘சுதந்திர’
இந்தியா
குடியரசும்
ஆனது.
சட்டத்தின்
சந்துஒன்றில்
வகுப்புரிமைக்கு
சமாதியும்
கட்டப்பட்டது.
‘கல்வி
கற்கும் காலங்களில்
மாணவர்
தம் கருத்தை
கல்வியில்
மட்டுமே செலுத்த
வேண்டும்.
அரசியலில்
நாட்டம் காட்டி
பயிலும்
கடமைதனிலே
அகன்று
விட வேண்டா’மென
அறிவுறுத்தியே
வந்த அய்யா,
வகுப்புரிமைப்
போராட்டம்
ஒன்றில்
தான்
‘கல்வி
வாய்ப்புக்
கதவுகளை
மூடியபின்
எங்கு
சென்று பாடம் கற்க?
மூடிய
கதவுகளை
முட்டித்
திறப்போம்;
வாருங்கள்
மாணவர்களே
வர்ணாசிரமம்
ஒழிப்போம்’ என்றார்.
தமிழ்நாட்டில்
புதைத்த
சமூகநீதியை
இந்தியா
முழுமைக்குமாய்
முளைக்க
வைத்தார்
பெரியார்
-
முதல்
சட்டத் திருத்தமாய்!
குல்லூகப்பட்டர்
ராஜாஜியின்
குலக்கல்வித்
திட்டம் - நம்
குலம்
அழிக்கும் திட்டம் - அதற்குக்
குழி
பறிக்க
உயிர்
கொடுப்போம்
என்றே
அழைத்தார்.
‘கோவில்களில்
மடப்பள்ளி
முதல்
மணியடித்தல்
வரை
பார்ப்பானுக்கே!
எல்லோரும்
இந்துக்கள் என்றால்
பார்ப்பான்
செய்யும்
பணிகள்
எல்லாம்
தாழ்த்தப்பட்டோர்
முதல்
அனைத்து
இந்துக்களும்
செய்யும்
வகையில்
சட்டம்
செய்க’ என்றார்.
துறைதோறும்
துறைதோறும்
தேங்கிப்
போயிருந்தவற்றைத்
தூர்வாரி
வாய்ப்புகளைப்
பாயவிட
எத்தனைப்
பேரின்
உழைப்பு
உதவியது...
தாடி
வைக்காத
ராமசாமி
ஓமந்தூரார்,
குலக்கல்விக்
களையை
அகற்றி
கல்விப்
பயிர் வளர்த்த
காமராஜர்,
இந்தியை
அகற்றி
இருமொழிக்
கொள்கை
தந்த
அறிஞர்
அண்ணா.
உயர்கல்வியை
உயர்த்திக்
காட்டிய
கலைஞர்,
பொருளாதாரம்
என்னும்
தவறான
அளவுகோலைத்
தானே
நீக்கி
பரிகாரமாய்
50 விழுக்காடு
தந்த
எம்.ஜி.ஆர்,
69க்குப்
பாதுகாப்புத்
தந்த
அம்மையார்,
மண்டலை
அரியணை
ஏற்றத்
தன்
அரியணையைத்
தூக்கியெறிந்த
இந்தியாவின்
கிடைத்தற்கரிய
பிரதமர்
வி.பி.சிங்,
வேலைவாய்ப்பில்
அவர்
கொணர்ந்ததை
கல்விக்கும்
நீட்டிய
அர்ஜுன்
சிங்,
28 விழுக்காட்டை
இங்கு
உயர்த்தவும்,
69அய்
காக்கவும்,
27அய்
நாடெங்கும்
கொணரவும்
ஓயாதுழைத்த
ஆசிரியர்
வீரமணியும்
இன்னும்
எத்தனை
எத்தனை
பேரின்
உழைப்பின் விளைச்சல்
இது!
ஆனால்,
வகுப்புவாரித்
திட்டம்
என்னும்
இட
ஒதுக்கீட்டின்
மூலமாய்
இன்று
கல்வி,
வேலை,
பதவியென்று
அடைந்துவிட்ட
இளைஞர்
சிலர்
இது
எதற்கு?
இழிவு
எமக்கு!
என்றும்
கூறக்
கேட்கிறோம்.
இன்று
போல
அன்றும்
ஒரு
மந்திரி
கூறக் கேட்ட
அய்யா,
'இது
உண்ட
கலத்தில்
இரண்டுக்குப்
போவது
போலன்றோ
இருக்கிறதென்றார்.'
திருட்டுப்போன
சொத்தைக்
காவலர்
திருப்பி
வாங்கிக்
கொடுப்பதால்
- திருடன்
துக்கப்படுவதும்
அழுவதும்
எவ்வளவு
நியாயமோ
அது
போன்றே
இந்தப்
பார்ப்பனர்கள்
இட
ஒதுக்கீட்டினால்
அழுவதும்
துக்கப்படுவதும்
என்றார்.
இசைத்துறை
நாடகத்துறை
போன்ற
கலைத்
துறைகளில்
இருந்ததெல்லாம்
மாமிகளும்
மாமாக்களும் தானே?
அந்நிலை
மாறி
இன்றிருக்கும்
நிலை
நாம்
அறிவோம்.
அத்தனைக்கும்
காரணம்
அவர்
தந்த
உணர்வன்றோ?
’ஜாதி
மத
கடவுள்
மறுப்பே
சரிநிகர்
சமதர்ம
சமுதாயம்
சமைக்கும்.
பெண்ணடிமை
ஒழிப்பு
ஒன்றே
நாட்டின்
பெருமைக்கு
வழிவகுக்கும்.
வழியற்ற
மாந்தர்தம்
வாழ்விற்கு
வகுப்புரிமை
ஒன்றே
வழிவகுக்கும்’
என்பதனை
செயலாக்கிச்
செயற்கரிய
செய்வார்
பெரியர்
என்ற
வள்ளுவனின்
வாக்குதனை
உயிர்ப்பித்த
தலைவராம்
மான
மீட்பர்
அய்யாவைப்
போற்றிடுவோம்!
அவர் வழியில்
இயக்கத்தை
இயங்கச்
செய்து
இழி
பகை வென்று
இனமானம்
காத்திட்ட
அன்னை
மணி
அம்மையாரின்
புகழ்
பாடிடுவோம்!
இவ்விருவர்
அடிச்சுவட்டில்
தொடர்ந்திங்கு
தமிழர்
நலம் காத்திடவே
தன்னை
ஈந்த
தமிழர்
தலைவர்
வழி
தொடர்வோம்!
வெற்றிக்
கொடியாய்
படர்வோம்!
- பெரியார்
களம் இறைவி
No comments:
Post a Comment