ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 30, 2021

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: விவசாயத் துறை மாநிலப் பட்டியலில் இருப்பதால், மூன்று வேளாண் சட்டங்கள், சட்டப்படி செல்லாமல் இருக்கும்போது குடியரசுத் தலைவர் எப்படி, ஏன் ஒப்புதல் வழங்கினார்?

- .பழநிசாமி, தெ.புதுப்பட்டி

பதில்: குடியரசுத் தலைவர் பதவிக்கு மற்றொரு நடைமுறை சொல்லாக்கப் புழக்க வார்த்தையைப் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும்.

அதைவிட, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், மாநிலங்கள் அவையில் கூச்சல் குழப்பத்திற் கிடையே குரல் வாக்கெடுப்பு மூலம் துணைத் தலைவர், ‘சட்டங்கள் நிறைவேறினஎன்று அறிவித்தது உங்க ளுக்கு ஏனோ மறந்து விட்டது.

................ ................ ................ ................

கேள்வி: ஜாதி மதங்களை முன்னிறுத்தி அரசியல் செய்யும் கட்சிகளைச் சட்டப்படி தடை செய்ய முடியுமா?

- வெங்கட.இராசா, .பொடையூர்.

பதில்: சரியான அரசும், முறையான நீதியும் கிடைக்கும் பட்சத்தில் இது சாத்தியப்படக் கூடும்!

................ ................ ................ ................

கேள்வி: டில்லியில் இந்திய வேளாண்மை சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளை பாசிச பா... அரசு கூலிப்படை வைத்துக் கொலை செய்யும் அளவிற்கு முன்னேறி உள்ளதே, இதுதான் இந்தியாவின் வளர்ச்சியா?

- கோ.நாத்திகன், கரசங்கால்

பதில்: உங்கள் கேள்வியே பதிலை உள்ளடக்கி யுமுள்ளது.

................ ................ ................ ................

கேள்வி: அமெரிக்கப் புதிய அதிபர் பைடன், தனது நிருவாகத்திலிருந்து (‘இந்திய வம்சாவளிஎன்கிற முகமூடியுடன் ஊடுருவிய) ஆர்.எஸ்.எஸ் பேர்வழி களை நீக்கியிருப்பது குறித்து தங்கள் கருத்து?

- சீர்காழி நா.இராமண்ணா, சென்னை

பதில்: அமெரிக்காவில் உள்ள முற்போக்கு அமைப் புகள் எடுத்த (29 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அதிபர், துணை அதிபர் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்) முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. மேலும் சில ஊடுருவிகள் அங்கே இருக்கவே செய்கின்றனர். மேலும் கவனமும் எச்சரிக்கையும் தேவை.

கேள்வி: பி.ஜே.பி.யை  எதிர்க்க சித்தாந்த ரீதியாக தமிழ்நாடுதான் இந்தியாவை வழி நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளாரே! மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் நம் சித்தாந் தத்தைப் புரிந்து ஏற்றுக் கொள்வார்களா?

- .வெற்றிமணி, பல்லாவரம்

பதில்: நல்ல கேள்வி. அதில் பல ஹிந்துத்துவ முகமூடிகளும், உயர் ஜாதி மனப்பான்மையாளர்களும் இருக்கிறார்களே!

(‘ஜாதி இருக்கின்றதென்பாரும் இருக்கின்றாரேஎன்ற புரட்சி கவிஞர் கவிதை வரிகள் போல)

................ ................ ................ ................

கேள்வி: இலங்கை ரோந்துப் படகு தமிழக மீனவர் படகை மோதி மூழ்கடித்து நான்கு பேரைக் கொன்ற கொடூரமான சம்பவத்தில் (தமிழ்நாட்டின் கடுமையான எதிர்ப்பைப் புறந்தள்ளிவிட்டு), ‘இந்திய வடவர் ஆட்சிகள்ள மவுனம் சாதிப்பது எதைக் காட்டுகிறது?

- .வெ.ரா.தமிழன், சீர்காழி

பதில்: தமிழன், தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழ்மக்கள் மேல் உள்ள அலட்சியம் கலந்த வெறுப்பைக் காட்டுகிறது.

இதைப் புரிந்து சரியான பாடத்தை அக்கட்சி, அக் கட்சியோடு கூட்டணி சேர்ந்தவர்களை தழைத்தோங்க விடாமல் விரட்டி படுதோல்வியைப் பாடமாக வழங்க வேண்டும்.

................ ................ ................ ................

கேள்வி: குலத்தொழிலில் ஈடுபடுவோருக்கு நவீன திறன் பயிற்சி அளிக்க வலியுறுத்தியுள்ளாரே, புதுவை ஆளுநர் கிரண்பேடி?

- முகிலா, குரோம்பேட்டை

பதில்: அவர் பா... கட்சி வேட்பாளராக டில்லியில் நின்று தோற்றவர் என்பது உங்களுக்கு மறந்தாலும், அவர் மறக்காது தன் கட்சிக் கொள்கையான குலதர் மத்தைக் கடைப்பிடிக்கிறார்! அவ்வளவுதான்.

அதனால்தான் காங்கிரஸ் முதல் அமைச்சர் நாரா யணசாமி அவர்களுக்கு தொல்லைமேல் தொல்லை தருகிறார்!

................ ................ ................ ................

கேள்வி: திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 குழந் தைத் திருமணங்கள் ஒரே நாளில் தடுக்கப்பட்டுள்ளன. இத்தனை பிரச்சாரங்களுக்கும், சட்டங்களுக்கும் பிறகு கூட இந்நிலையா?

- இசைச் செல்வி, கோவை

பதில்: சிதம்பரத்தில் தீட்சதர்களிடையே அடிக்கடி குழந்தைத் திருமணங்கள் நடப்பதை தமிழக அரசும், காவல்துறையும் கண்டும் காணாததுபோல் தானே இருக்கின்றன! அதன் தொடர்ச்சிதான்திருவண்ணா மலை’.

கேள்வி: திருவாரூர் மாவட்டத்தில் டிராக்டர் பேரணி நடத்தியவர்களைக் கைது செய்து, கொலை வழக்குப் பதிவு செய்துள்ளதே, மாநில அரசு?

- இரா.போஸ், வீராணம்

பதில்: வன்மையான கண்டனத்திற்குரியது. ஜன நாயகம் இந்த ஆட்சியில் படும்பாடு இது!

................ ................ ................ ................

கேள்வி: செல்வி.ஜெயலலிதா நினைவிடத் திறப்புக்கு வந்த .தி.மு.. தொண்டர்கள், கலைஞர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தியதோடு, அண்ணா,  எம்.ஜி.ஆர் உள்ளிட்ட நால்வரும் திராவிட இயக்கத் தலைவர்களே அவர்கள் என்றும், மரியாதைக் குரியவர்களே என்றும் கருத்துக் கூறியுள்ளனரே?

- மு.சங்கத் தமிழன், சென்னை

பதில்: பரவாயில்லை; அக்கட்சித் தலைவர்களுக்கு இல்லாததெளிவுஅதில் உள்ள சில தொண்டர்க ளுக்காவது இருப்பது நல்லது தானே! பொதுவான பார்வையாளர்களாகவும் அழைத்து வரப்பட்டவர் களில் பலர் இருக்கக் கூடும்.

No comments:

Post a Comment