இந்துத் தலைவர்களிடையே (தலித்) தாழ்த்தப்பட்டவர்கள் பற்றியதான பார்வை தற்பொழுது மாறியிருக்கிறதா ? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 2, 2021

இந்துத் தலைவர்களிடையே (தலித்) தாழ்த்தப்பட்டவர்கள் பற்றியதான பார்வை தற்பொழுது மாறியிருக்கிறதா ?

இல்லை. அவர்கள் மாறியதாகக் காட்டு கிறார்கள். இன்னும் இந்துத் தலைவர் களிடையே கூட சங்கராச்சாரியார் என்ன சொல்கிறார். ‘அம்பேத்காரை பின்பற்றும் மக்கள்என்கிறார். வெளிப்படையாகப் பெயர் சொல்லக்கூட அவருக்கு மனமில்லை. இவர்கள் சுத்தமாக இல்லையென்று ஒரு காலத்திலே சொன்னார்கள். இப்பொழுது எதிர்ப்பு வந்துவிட்டதால் அதை விட்டு விட்டார்கள். யாருடைய சுத்தம் பற்றி யார் பேசுவது? அழுக்குகளை உரமாக்கி அழகான பயிர்களை உரமாக்கும் மனிதன் அசுத்தமான வன். மடாதிபதி சுத்தமானவரா? அசுத்தம் என்பது உடல். உழைப்பை மதிக்காத அதை சுரண்டி வாழுபவரின் பேச்சாகும். ‘திரவுபதி சுத்தமாக இருந்தா ஆபத்திலே கிருஷ்ண னைக் கூப்பிட்டாள். கூப்பிட்டவுடன் உத விக்கு அவர் வரவில்லையா’, என்று கேட் கிறார்களே வைணவர்கள். இந்தக் கேள்விக்கு சங்கராச்சாரியார் பதில் சொல்வாரா? நூற்றுக்கு இருபது பேராக இருக்கிற (தலித்) தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாறிப்போய் விடவும் கூடாது. இருக்கிற இடத்திலேஇந்துஎன்ற பெயரோடு (தலித்) தாழ்த்தப்பட்டகளும் பிற்படுத்தப்பட்ட மக்களும் பார்ப்பனர்களின் ஆன்மிக அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். பங்காரு அடிகளார் போலப் புதிய நெறிகளைக் கண்டுபிடிக்கக் கூடாது. இது தான் அவரது எண்ணமாகும்.

ஏதேனும் ஒரு காரணம் பற்றி தங்களு டைய ஆன்மீக அதிகாரத்தையும் மறைமுக மான அரசியல் அதிகாரத்தையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம். அதுமட்டுமல்ல, இப்பொழுது அந்தகிறிஸ்தவர் இசுலாமியராக அல்லாத இந்துஎன்கிற அரசியல் சட்டம் சொல்கிற வார்த்தையை ஒரு சமூக ஆதிக் கமாக மாற்றப் பார்க்கிறார்கள். இதனைப் புரிந்து கொண்டால்இந்துஎன்னும், ண்பாட்டு மாயையிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கும். அவரவர்கள் அவரவர் தெய் வங்களை நிம்மதியாக வணங்கிவிட்டுப் போவார்கள். நம்முடைய வழிபாட்டு உரிமை யினையும், மத உரிமையினையும் நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment